\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

அமெரிக்காவில் 140 மில்லியன் மக்கள் ஏழ்மை பிடியில்

அமெரிக்காவில் 140 மில்லியன் மக்கள் ஏழ்மை பிடியில்

என்ன இவ்வளவு பெரியதா, அது எப்படி? அமெரிக்க நாட்டின் மொத்த  சனத்தொகையே 328.24 மில்லியன் தானே, அமெரிக்கா செல்வந்த நாடாச்சே, அதில் எப்படி சுமார் பாதி மக்கள் ஏழைகள் என்று நீங்கள் வினவலாம்.  இந்நாட்டில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் தமது கல்வி, வேலைத்துறை காரணமாக. அமெரிக்க வறுமைக்கோட்டிற்கு மிகவும் அப்பால்,   நல்ல வாழ்வை  அமைத்துக் கொண்டுள்ளனர். ஆயினும் அடுத்த தலைமுறையில், எமது பிள்ளைகளின் வாழ்க்கை  அடுத்த 20-30-50 வருடங்களில் எவ்வாறு அமையும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவுள்ளது. […]

Continue Reading »

உள்ளூர் வாராந்த மஞ்சரியான ‘சிட்டி பேஜஸ்’ நிரந்தர மூடுதல்

உள்ளூர் வாராந்த மஞ்சரியான ‘சிட்டி பேஜஸ்’ நிரந்தர மூடுதல்

மினசோட்டா மாநிலத்தில் மாற்று ஊடகப்  (Alternate media) பத்திரிகையாக Citi pages கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதன் தற்போதைய உரிமையாளரான, மினியாபொலிஸ் நகர ‘ஸ்டார் ட்ரிப்யூன்’ ( Star Tribune Media Co), . கடந்த புதன் கிழமை, அக்டோபர் 28, 2020 யன்று,  இந்தப் பத்திரிகையின் சகல் தொழிற்பாடுகளும் நிரந்திரமாக மூடப்படுவதாக  திடீரென அறிவித்தது. சிட்டி பேஜஸின்  கடைசி வெளியீடு அக்டோபர் 2020 கடைசி வாரமே. இந்தப் பத்திரிகை வழக்கமான செய்தித்தாள்களுக்கு மாறாக  […]

Continue Reading »

அமெரிக்கத் தபால் சேவையின் அண்மைக்கால குறைபாடுகள்

அமெரிக்கத் தபால் சேவையின் அண்மைக்கால குறைபாடுகள்

அன்றாட தகவல் பரிமாற்றங்கள், வர்த்தகப் பற்றுச் சீட்டுகள்,  மருந்துகள், வயோதிகர் இளைப்பாறு காசோலைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களைச் சாதாரண மக்களுக்கு எதிர்பார்த்த நாட்களில் தரும் தாபனம் அமெரிக்கத் தபால் சேவை. தனி நிறுவனமாக இயங்கினாலும் இது ஒரு மக்கள் நலனிற்கான அரச சேவை. ஆயினும் அமெரிக்கத் தபால் சேவை நலன் கண்காணிப்புக் குழுமியம் (USPS Office of Inspector General), புதிய தபால் சேவை தலைமை அதிகாரி திரு. லூவிஸ் டிஜோய் அவர்களின்  நியமனத்துக்குப் பின்னர் அமெரிக்கத் […]

Continue Reading »

2020 அதிபர் தேர்தல் முடிவுகள்

2020 அதிபர் தேர்தல் முடிவுகள்

அதிபர் தேர்தலுக்கு ஒரே நாள் மட்டுமேயுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகும் நிலை ஊகிக்கப்படுகிறது. பொதுவாக அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தேர்தல் நாளன்றே, நள்ளிரவுக்குள் தெரிந்துவிடும். விதிவிலக்காக, 2000ஆம்ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் பல வழக்குகள், வாக்கு மறு எண்ணிக்கை என்று இழுபறியானது. அதற்குமுக்கிய காரணம் அப்போதைய வேட்பாளர்களான ஜார்ஜ் புஷ் மற்றும் அல் கோர் இருவருக்குமிடையே நிலவிய மிகக்குறுகலான வாக்கு வித்தியாசங்கள். வாக்கு எண்ணிக்கைப்படி அல் கோர் வெற்றி பெற்றிருந்தாலும், பிரதிநிதிகளின் வாக்குஇழுபறியை உண்டாக்கியது. […]

Continue Reading »

கூகுளுக்கு எதிரான நம்பிக்கையின்மை சட்டத்தாக்குதல்

கூகுளுக்கு எதிரான நம்பிக்கையின்மை சட்டத்தாக்குதல்

அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை கூகுள் தாபனமானது பாரிய பல நம்பிக்கையற்ற குயுக்திகளை உபயோகித்து மின்வலய தேடுதல்,விளம்பரம் போன்றவற்றில் மற்றைய போட்டி வர்த்தகங்களை மடக்கி கட்டுப்படுத்தி அதே சமயம் நுகர்வோருக்கும் பாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டி, இது தொடர்பான சட்ட நடவடிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் உதவி அட்டர்னி ஜெனரல் திரு. ஜெஃப் ரோசன் கூறுகையில், கூகிள் ஈ-காமர்ஸின் மிகப்பெரிய நுகர்வோர் தேடல் அடிப்படையிலான விளம்பரம் மற்றும் ஈ-காமர்ஸின் நுழைவாயிலாக மாறி வருகிறது. இந்தக் […]

Continue Reading »

ஆங்கிள் மினசோட்டா மக்கள் நாட்டிலிருந்து துண்டிப்பு

ஆங்கிள் மினசோட்டா மக்கள் நாட்டிலிருந்து துண்டிப்பு

மினசோட்டா மாநிலத்தின் வடக்கு உச்சியில் ‘நார்த்வெஸ்ட் ஆங்கி’ (Northwest Angle) எனப்படும் சிற்றூர் உள்ளது. அமெரிக்காவின் எல்லைக்குட்பட்டதாக இருந்தாலும் கனேடிய  எல்லைக்குள் புகுந்து மட்டுமே இந்த அமெரிக்கப் பிரதேசத்திற்குள் போக முடியும். ஆங்கிள் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஊரில் 120 பேர் வசிக்கின்றனர். இது அமெரிக்காவின் மிகத் தொலைவான பகுதிகளில் ஒன்றாகும். கொரொனா தொற்று நோயின் பரவல் காரணமாக கனேடிய, அமெரிக்க எல்லைகள் பூட்டப்பட்டு இந்த ஊர் தற்போது தனித்து விடப்பட்டு, சுயமாக இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading »

கேத்தியோ ஸ்டேட் பார்க் (Kathio State Park)

கேத்தியோ ஸ்டேட் பார்க் (Kathio State Park)

மினசோட்டாவில் பத்தாயிரம் ஏரிகள் இருப்பது தெரியும். ஆனால், அதில் ஒரு ஏரி ஆயிரம் ஏரிகளுக்குச் சமமாக இருப்பது தெரியுமா? மில் லாக்ஸ் (Mille Lacs) ஏரிதான் அது. ஆயிரம் ஏரிகள் என்பதைத் தான் மில் லாக்ஸ் என்கிறார்கள். ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, மினியாபொலிஸ் – செயிண்ட் பால் நகர்பகுதியில் இருந்து சுமார் 100மைல் தொலைவில் உள்ளது. மினசோட்டாவில் நிலப்பரப்பிற்குள் அமைந்திருக்கும் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும் இது. கரையில் […]

Continue Reading »

ஒத்தையடி பாதையிலே : ஃப்ராண்டனக் ஸ்டேட் பார்க்

ஒத்தையடி பாதையிலே : ஃப்ராண்டனக் ஸ்டேட் பார்க்

மினசோட்டாவில் ஏராளமான ஏரிகள் இருப்பது போல் ‘ஸ்டேட் பார்க்’ எனப்படும் மாநிலப் பூங்காக்கள் பல இங்கு உள்ளன. இவை மாநில அரசால் பராமரிக்கப்படும் இயற்கை வளம் ததும்பும் இடங்களாகும். ஒரு இடத்தின் இயற்கை அழகை, வரலாற்றுத்தன்மையைப் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இவ்விடங்கள் மாநில அரசால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. மினசோட்டாவில் இவ்வகைப் பூங்காக்கள் மொத்தமாக 66 இருக்கின்றன. நாம் இப்போது காணப்போகும் இந்த ஃப்ராண்டனக் பூங்கா (Frontenac State Park) 1957ஆம் ஆண்டு முதல் மினசோட்டா அரசால் […]

Continue Reading »

மேப்பிள் மரத்தை அடையாளம் காண்பது எப்படி?

மேப்பிள் மரத்தை அடையாளம் காண்பது எப்படி?

வட அமெரிக்கா முழுதும் குளிர் பிரதேசங்களில் வளரும் மரங்களிலொன்று மேப்பிள் மரம். குறிப்பாக மினசோட்டாவில் பல வகையான மேப்பிள் மரங்கள் இருப்பினும் இளவேனில் காலத்தில் இனிய பாகு தரும் சர்க்கரை மேப்பிள் (Sugar Maple) எமக்குப் பிடித்த மரம். இதன் கிளைகள் பொதுவாக இளம் மண்ணிறத்தில் தொடங்கி, வளர்ந்த பின்னர் கடும் மண்ணிறமாக மாறும். மேப்பிள் மர இலைகள், தனித்துவமான 5 சற்றுக் கூரான பிரிவுறும் சோணைகளைக் விசிறி போல் கொண்டவை. இது கனேடிய நாட்டின் தேசிய […]

Continue Reading »

நேர்ஸ்ராண்ட பெருமரக்காடு

நேர்ஸ்ராண்ட பெருமரக்காடு

எமது மாநிலத்தில் வாழும் அனைவரும் அனுபவித்து மகிழக்கூடிய பெரும் விடயம் இந்நிலத்தின் எழில்மிகு இயற்கை வளமே. பன்னிரண்டு மாதங்களும், பருவகாலங்கள் நான்கு பவனி வந்து இவ்வியற்கை எழிலுக்கு வர்ணம் பூசி மெருகூட்டுகின்றன.  இதில் இலையுதிர் காலம் நம்மில் பலர் பார்த்து பழகிப் போன பச்சை பசேல் ஒவியம் போல் அல்லாமல் கோலாகலமாக, பல வண்ணக் கோலமாக நிறம் மாறுகிறது மினசோட்டா மாநிலம். இதில் இன்று நாம் பார்க்கப் போவது ஒரு பண்டைய காட்டு நிலம். நேர்ஸ்ராண்ட பெருங்காட்டு […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad