கட்டுரை
நாகரீகம்..!!!
“இந்தியாவிடம் மருந்து அனுப்ப வேண்டுமாய்க் கேட்டுள்ளோம். அவர்கள் தரவில்லை என்றால் பரவாயில்லை .. ஆனால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம்.. There may be a retaliation, why wouldn’t there be?” – உலகத்தின் வளர்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் மேதகு டிரம்ப் அவர்கள். — ஆகா என்ன ஒரு நாகரீகம், நட்புணர்வு, தலைவனுக்கான பேச்சு பாருங்கள். ஊரில் பொறுக்கித் தனம் செய்து கொண்டு திரியும் மூன்றாந்தர குடிமகனைப் போல பேசியுள்ளார் .. இந்தப் பைத்தியக்காரப் […]
அமெரிக்காவின் முறையின்மையால் வந்த முறிவு – Systematic Breakdown
பொதுநலம் பொதுவாகப் பார்க்காத பாரிய அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி இன்று அலசுவோம். இந்த நூற்றாண்டின் முதல் மூன்று முதலாளித்துவ சிந்தனை பொருளாதார வீழ்ச்சிகளின் அடிப்படைகளில் ஒன்று தான், பொதுநலம் விட்டு இலாப தாரிகள் சிறு நலம் பார்த்து ஏமாந்தமை எனலாம். Dotcom Crash – 2000-2001 Mortgage Backed Security Crash – 2008-2019 Corona Crash -2020-2021 நாம் மேலே உள்ள யாவற்றிற்கும் பிரத்தியோகமான பெயர்களைத் தருகிறோம், காரணம் எமது அடிப்படை பொருளாதாரக் கையாளல்கள், மற்றும் […]
உலகைப் புரட்டிப் போட்ட கொரோனா
கொரோனா வைரஸ் குறித்த நமது முந்தைய கட்டுரை (கொடூர கொரோனா) வெளிவந்து இரு மாதங்கள் ஆகின்றன. அதற்குள் எவ்வளவு மாற்றங்கள்? அச்சமயம் அமெரிக்காவில் 8 பேருக்குத் தான் இந்தப் பாதிப்பு இருந்தது. இன்றைய நிலையில் இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையை நோக்கி மீட்டர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் ஈரான், இத்தாலி எனப் பல நாடுகள் ஆயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கின்றன. இந்தியா இழப்புக் கணக்கைத் தொடங்கி, மொத்த நாடும் வீட்டிற்குள் முடங்க முயன்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நேற்றைய செய்தி […]
உயிலுடன் வாழ்வோம்
ஊர் இருக்கிற நிலைமையில யாருக்கு எப்ப உயிரு போகும்’ன்னு தெரியல. இந்த நிலவரத்துலயாவது நாம உயிலு பத்தி யோசிக்கணும் இல்ல? எல்லாருக்கும் உயில்’ன்னா என்ன’ன்னு தெரிஞ்சிருக்கும். ஆனா, எல்லோரும் அது நமக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம்’ன்னே டீல் பண்ணியிருப்போம். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து, மரணப் படுக்கையில் இருக்கிற வயசானவங்களுக்குத் தேவையான விஷயம் அது அப்படி’ன்னு தான் நம்ம நினைப்பு இருக்கும். உண்மை அப்படி இல்லை. உயில் பத்தி நாம எல்லோருமே தெரிஞ்சிக்கணும். ஏன்னா… உயில் இல்லாத நிலையில் […]
2020 மக்கட்தொகை கணக்கெடுப்பு
நீங்கள் கடைதெருவுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறி வாங்குகிறீர்கள் என்றாலே உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களது விருப்பம் என்னென்ன போன்றவை தெரிந்து, அதற்கேற்ப தான் நீங்கள் பொருட்கள் வாங்குவீர்கள். அந்தத் தேவைக்கேற்ப உங்களது உழைப்பு இருக்கும், சம்பாத்தியம் இருக்கும், செலவினங்கள் இருக்கும். இது போலவே, ஒரு நாட்டின் நிர்வாகமும் அந்த நாட்டு மக்கட்தொகையைப் பொறுத்தே அமையும். அதற்காக, அந்த நாட்டு மக்கள் குறித்த தகவல்கள் அந்நாட்டின் அரசிற்கு அவசியமாகிறது. அந்தத் தகவல்களைச் சேகரிக்கச் […]
அமெரிக்க அதிபர் தேர்தல் – 2020
‘தூங்கு மூஞ்சி ஜோ’, ‘குட்டி மைக்’, ‘கிறுக்கு பெர்னி’, ‘போக்கொஹாண்டஸ் வாரன்’, ‘பூட்டட்ஜீட்ஜ்’ – இவையெல்லாம் எதோ சிறுவர் காமிக் புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள் அல்ல. வல்லரசு நாடான அமெரிக்காவின், வருங்கால அதிபராக வர ஆசைப்படும், ஆசைப்பட்ட எதிர்க்கட்சியினருக்குத் தற்போதைய அதிபர் திருவாளர் ட்ரம்ப் வைத்த செல்லப் பெயர்கள். ‘பத்துப் பேர் ஒண்ணாச் சேந்து, ஒருத்தர எதுக்கறாங்கன்னா, அந்தப் பத்து பேர் பலசாலியா இல்ல அவங்க எதிர்க்குற அந்த ஒருத்தர் பலசாலியான்னு நீங்களே முடிவு செஞ்சுக்கறளவுக்கு’ அமெரிக்க […]
மினசோட்டா ஹோர்மல் SPAM கதை
நாம் வாழும் செழிப்பான மாநிலம் மினசோட்டாவானது இன்று அமெரிக்காவின் மூன்றாவது செல்வந்த மாநிலம் சென்று கருதப்படுகிறது. இதன் காரணம் எமது மாநில மக்கள் அவர்கள் மேல் ஐரோப்பிய சமநல மனப்பாடும், அவர்கள் இட்ட அத்திவாரமுமே காரணி எனலாம். இந்த அத்திவரத்தை இட்டுத் தந்த மினசோட்டா தொழிலதிபர்கள் பலரின் கதையும் சுவரஸ்யமானவையே. இந்தக் கதைகளில் ஒன்று தான் ஜே கர்த்தர்வுட் ஹோர்மல் Jay Catherwood Hormel கதை. இரண்டாம் தலைமுறை தொழிலதிபர் ஜே ஹோர்மல் அவர்கள் செம்டெம்பர் […]
கொடூர கொரோனா
யுஹான் ஊர்காரர்களுக்குச் சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த பெருமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த ஊர், சீனாவின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்காற்றும் ஊர். சீனாவின் சிகாகோ என்று அழைக்கப்படும் ஊர் இது. உலகின் மிகப் பெரிய மின் நிலையம் கொண்ட ஊர். சீனாவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்கள் கொண்ட ஊர். அதனால் இவ்வூர்க்காரர்களுக்குச் சீனாவில் நல்ல மரியாதை உண்டு. இது எல்லாம் கடந்த டிசம்பர் மாதம் வரை தான். 2020 […]
அமெரிக்கன் கனவும் தற்போதய நனவும்
நீங்கள் இன்று பணக்காரப் பெற்றார்களுக்கு அமெரிக்காவில் பிறந்து இருந்தீர்களே ஆயின் உங்கள் வாழ்வு மீதி மக்களிலும் திடகாத்திரமானது. அதாவது உங்கள் வாழ்வில் முன்னேற அதிக சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் சாதகமாக உண்டு என்கிறது அண்மையில் வெளியான “The global social mobility report 2020” புதிய அறிக்கை. வளர்முக நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய தமிழருக்கு இதில் என்ன புதிய செய்தி இருக்க முடியும் என்று சிந்தித்துக் கொள்ளலாம். ஆயினும் இது அமெரிக்க ஐதீகத்திற்குச் சவலான ஆதாரங்களுடனான […]
ஓய்வுக்காலத்திற்கு ரெடியா? 401(K) ஒரு பார்வை
அமெரிக்காவுக்குப் புதிதாக வேலைக்கு வந்தவர் என்றால், இந்த 401(K) என்கிற பதத்தைக் கேள்விப்பட்டு, அது என்ன, ஏது என்று ஒரு குழப்பம் ஏற்பட்டு, குழப்பத்தைத் தவிர்க்க அதைப் பற்றிக் கொள்ளாமலே சிலர் விட்டிருப்பர். அறிந்துக்கொள்ள ஆர்வம் கொண்டோருக்கும், அது குறித்து முழுமையாக அறிந்துக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். 401(K) குறித்த தகவல்களைத் தமிழில் அளிக்கலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். வேலை பார்ப்பவரோ, தொழில் புரிபவரோ, ஒரு வயது வரை மட்டுமே உழைப்பதற்கு உடலில் பலமோ, மனதில் திடமோ இருக்கும். […]