\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

துணுக்குத் தொகுப்பு-2

துணுக்குத் தொகுப்பு-2

புலன் புறத்தெரிவு (Extra Sensory Perception) பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐந்து உணர்வுகளைத் தாண்டி மன உணர்வு எனும் ஆறாம் புலன் மனிதனை மற்ற உயிரினங்களிலிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனித மனங்களில் இயற்கையாக நடைபெறும் இந்தத் தொடர் நிகழ்ச்சி, சிந்தித்து முடிவெடுத்து செயல்படும் திறனை அளிக்கிறது. இவ்வகை சிந்தனைகள் பெரும்பாலும்  அறிவு (கற்றல், கேட்டல் போன்றவை மூலம் பெறுவது) அல்லது அனுபவ அடிப்படையில் அமைகிறது. சில சமயங்களில் அறிவு, அனுபவம் இவற்றைக் கடந்த உள்ளுணர்வு […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 9

அழகிய ஐரோப்பா – 9

(அழகிய ஐரோப்பா – 6/சிங்கார நதி) திருவிழா லண்டனில் காலை ஏழு மணிக்கே வெயில் போட்டு வாங்கத் தொடங்கியிருந்தது. இரவு முழுவதும் வீசிய குளிர் காற்று சற்றுத் தணிந்து வெளியில் ஒருவகையான உஷ்ணம் தெரிந்தது லண்டனில் இருந்து ஏனைய நாடுகளைச் சுற்றிப் பார்க்கவென ஒன்பது சீட் உள்ள வேன் ஒன்றை ஒரு வார வாடகைக்கு எடுத்திருந்தோம். லண்டனில் இருக்கப் போகும் கடைசி நாளான அந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும், லண்டனில் மிகவும் பிரசித்தமான […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 8

அழகிய ஐரோப்பா – 8

(அழகிய ஐரோப்பா – 6/அழகோ அழகு) சிங்கார நதி மதிய உணவை முடித்துக் கொண்டு அழகிய தேம்ஸ் நதிக்கரையை நாம் அடைந்தபோது மணி மூன்றாகியிருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கட்டிளங் குமரிபோல் சீவிச் சிங்காரித்து ஓடியது அந்தச் சிங்கார நதி. தேம்ஸ் நதிக்கு மேலாக பன்னிரெண்டு பாலங்கள் உள்ளனவாம். சரியாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில் உள்ளது வெஸ்ட் மின்ஸ்டர் பிரிட்ஜ் என்ற இந்தப் பாலம். லண்டனில் உள்ள மிகவும் பிரசித்தமான […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 7

அழகிய ஐரோப்பா – 7

(அழகிய ஐரோப்பா – 6/பயணங்கள் முடிவதில்லை) அழகோ அழகு மியூசியத்தை விட்டு வெளியே வந்ததும் பிள்ளைகளுக்கு பழரசம் வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்கள் டீ குடித்தோம். ஆங்கிலேயர்களின் டீ நல்ல சுவையுடன் இருந்தது. சிறு நடைப்பயணத்துக்குப்  பின்னர் ரெயில் ஸ்டேஷனை வந்தடைந்தோம். இப்போது கூட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது.   இரண்டு நிமிட ரெயில் பயணத்துக்குப் பின் இறங்கி வலப்புற வாசல் வழியாக வெளியேறினோம். கிட்டத்தட்ட மரங்கள் நிறைந்த சோலை போலவும் காடு போலவும் உள்ள ஒரு இடத்தில் நடை […]

Continue Reading »

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

எப்பேர்ப்பட்ட கவிஞனுக்கும் சில சமயங்களில் சொற்பஞ்சம் ஏற்படுவதுண்டு. எதுகை, மோனை, இயைபு நயங்களுக்காகச் சொற்கள் திணிக்கப்பட்டிருப்பதைப் பல கவிதைகளில் காணலாம். இவ்விதச் சொற்கள் வரிகளில் துருத்திக்கொண்டு நின்று அழகையும், கருத்தையும் கெடுத்துவிடும். சினிமாப் பாடல்களில் இந்தக் குறையற்ற கவிநயத்தைப் பலரும் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கண்ணதாசனின் சொற்கள், தேர்ந்த சேவகன் ஒருவன் சிந்தாமல் சிதறாமால் தேனைக் கோப்பையில் ஊற்றினால் அந்தத் தேன் எப்படி கோப்பையின் வடிவத்துக்கேற்ப பரவி நிற்குமோ  அது போல வரிகளில் அழகாகப் பொருந்தி அடைக்கலமாகும். […]

Continue Reading »

யூ-ட்யூப் பிரபலங்கள்

யூ-ட்யூப் பிரபலங்கள்

சமூக வலைத்தளங்கள் நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பலரது வாழ்வை மாற்றிப் போட்டுள்ளன. எல்லோரையும் போல் சராசரி வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் பலரை செலிப்பிரட்டிகளாக ஆக்கியுள்ளன. அவ்வாறு பிரபலமானவர்களைப் பற்றிய குறிப்புகளின் தொகுப்பே இது. குறிப்பாக, யூட்யூப் மூலம் தமிழில் பிரபலமானவர்களை இக்கட்டுரையில் காணலாம். சினிமா, அரசியல், சமையல், அறிவியல் எனப் பல துறைகளில் தங்கள் பதிவுகளை யூ-ட்யூப்பில் அளித்துப் பிரபலமானவர்கள் இவர்கள். ப்ளூ சட்டை மாறன் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் இவரது யூ-ட்யூப் சானலான ‘தமிழ் டாக்கீஸ்’க்கு […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 6

அழகிய ஐரோப்பா – 6

(அழகிய ஐரோப்பா – 5/படகுச் சவாரி) பயணங்கள் முடிவதில்லை லண்டனில் பஸ் மற்றும் ரயிலில் போவது எல்லாம் சர்வசாதாரணம் கிட்டத்தட்ட நியூயோர்க் வாழ்க்கை போலத்தான். அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம் இன்னொன்று நேர விரயத்தைக் குறைப்பதும். … நாங்களும் இன்று ரயிலில் போவதென முடிவெடுத்தோம். என் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரிதான் எங்களுக்கு வழிகாட்டி. அவள் லண்டன் யூனிவெர்சிட்டியில் ஒரு முதுநிலை மெடிக்கல் ரிசர்ச் மாணவி… அவள் நாளாந்தம் ரயிலில் போய் வருவதால் அவளுடன் போவதில் […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 5

அழகிய ஐரோப்பா – 5

(அழகிய ஐரோப்பா – 4/முதலிரவு) படகுச் சவாரி இரவிரவாக கொட்டித் தீர்த்த கன மழையினால் வெக்கை போய் ஒருவித குளிர் காற்று வீசத் தொடங்கியது. காற்றுடன் இடையிடையே மழை பெய்தபடி இருந்தமையால் லண்டன் மியூசியம் பார்க்கப் போவதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஒரு தூக்கம் போட்டு எழுந்தேன். மத்தியானத்துக்குச் சூடான நண்டுக் குழம்புடன் சோறும் மீன் பொரியலும் என்று ஒரு வாரமாக மறந்து போயிருந்த அயிட்டங்களை எல்லாம் ஒன்றாகப் பார்த்தவுடன் வாசனையை மட்டும் […]

Continue Reading »

அமெரிக்க இடைத்தேர்தல் 2018

அமெரிக்க இடைத்தேர்தல் 2018

ஏறத்தாழ இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்க இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. பொதுத் தேர்தலைப் போலவே, இடைத் தேர்தலும் நவம்பர் மாதத்தில், முதல் திங்கட்கிழமையைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். ஆண்டுதோறும் இந்நாளன்று தேர்தல்கள் நடைபெறும். அதிகாரசபை அங்கத்தினர் (செனட்டர்) அல்லது பிரதிநிதியின் இறப்பு, துறப்பினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புதல், உள்ளாட்சித் தலைவர்கள், ஆளுநர்களுக்கான தேர்தல்கள் சிறப்புத் தேர்தல்களாகும்.  (Special elections) இரண்டாண்டு பதவிக்காலம் கொண்ட 435 பிரதிநிதிகளுக்கான  (House Representative)பிர தேர்தல் அதிபர் […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 4

அழகிய ஐரோப்பா – 4

(அழகிய ஐரோப்பா – 3/அந்த ஏழு நாட்கள்) முதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி இருக்கும் என்று தெரியாது” என்றேன். “இது பரவாயில்லை சில நேரம் இரண்டு மூன்று மணி நேரம் ரோட்டிலையும் நிக்க வேண்டி வரும்” என்று பயமுறுத்தினார் ஒரு பத்து நிமிடங்கள் கார் ஊர்ந்து மெதுவாகப் போனது… எப்படா இந்த ராஃபிக் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad