\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

சந்தமும் சங்கீதமும்

சந்தமும் சங்கீதமும்

தமிழ்த் திரையிசையுலகை தங்களது வரிகளாலும், இசையாலும் மிகச் சிறப்பாக ஆண்ட இரு மேதைகள் பிறந்த தினம் ஜூன் 24.  இயற்கையின் வியத்தகு படைப்புகளில் மிக உன்னதமான நிகழ்வு இது. இந்தக் காரணத்தால்தானோ என்னவோ இந்த இருவர் கூட்டணியில் உருவான பாடல்களெல்லாம் தமிழர் நெஞ்சங்களில் என்றும் நீங்காத தனியிடத்தைப் பிடித்துவிட்டன. இன்று தமிழ்த் திரையிசை பிரமிப்பூட்டும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. வித விதமான கருவிகள், பலப்பல குரல்கள், அசர வைக்கும் ஒலிப்பதிவு, தொழில்நுட்பம், எல்லைகள் இல்லா இசைச் சுதந்திரம் இப்படி […]

Continue Reading »

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய சில தெரிவுகள் வண்ணத்துப்பூச்சிகள் பூவில் இருந்து அமிழ்தத்தை (nectar) தமது நீண்ட தும்பிக்கை வாய்மூலம் உறிஞ்சிக் குடித்துக் கொள்ளும். சில வகை வண்ணத்துப்பூச்சிகள் பழங்களில் இருந்து இரசத்தையும், நீர் போன்றவற்றையும் உட்கொள்கின்றன. பல வண்ணத்துப் பூச்சிகள் உணவருந்த ஈரமான இடத்திற்கு வருகை தருவது சேற்றுக்கும்மாளம் (puddle party) என்றழைக்கப்படும். பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகள் வாழ்க்கை 2 வாரங்களே. ஆயினும் வட அமெரிக்க இராச வண்ணத்துப் பூச்சிகள்( Monarch Butterflies) அவற்றின் கால நிலைப் பெயர்ச்சி சந்ததிகள் […]

Continue Reading »

எழுத்தாளர் பாலகுமாரன்

எழுத்தாளர் பாலகுமாரன்

‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ – தமிழ் பேசும் பலரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பயன்படுத்திய இந்த வரிகளை எழுதியவர் இன்று இல்லை! 1980களில் தமிழறிந்த இளவட்டங்களைத் தனது வசீகர எழுத்துக்களால் கட்டிப்போட்ட, ‘எழுத்துச் சித்தர்’ என்று கொண்டாடப்படும் பாலகுமாரன் மறைந்துவிட்டார். சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சமயத்தில்,புதுக்கவிதை எனும் கவிதைக் கிறுக்கல்கள் புற்றீசல் போல பெருகியபோது க. நா. சு என்ற இலக்கிய விமர்சகர் ‘எழுத சோம்பல் படுகிறவன் புதுக் கவிதை எழுதுகிறான்’ என்று சொன்னதைக் […]

Continue Reading »

கேம்பிரிஜ் அனலிடிக்கா சொடுக்குதல் மூலம் சூசக வாக்குகள்

கேம்பிரிஜ் அனலிடிக்கா சொடுக்குதல் மூலம்  சூசக வாக்குகள்

அமெரிக்காவில் 87 மில்லியன் பிரசைகளின் முகநூல் (Facebook) தனிப்பட்ட தகவல்கள் சூறையாடப்பட்டு தகாதவகையில் 2016 தேர்தலில் உபயோகிக்கப்பட்டமை கவலைக்குரிய விடயம். மின் இணைய சொடுக்கலிலிருந்து சுயேட்சை வாக்குகளுக்கு வரம்பு கட்டி, தேர்தலில் சாதகமான வேட்பாளர் பெட்டிகளை நிரப்புவது சாத்தியம் என்ற நிலைமையை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. இந்தச் சூசக நடவடிக்கை சுதந்திர நாட்டின் சுயேட்சை மக்கள் எனும் சிந்தனைக்கு முரணானது. எனினும் இன்று மக்களின் முகநூல் (Facebook), டுவீட்டர் (Twitter) போன்ற சமூக வலயங்களை. முன்னர் இருந்த  பொதுசன […]

Continue Reading »

இணையத்தில் இனிமையாக இருந்து கொளல் எப்படி?

இணையத்தில் இனிமையாக இருந்து கொளல் எப்படி?

நாளாந்த நடத்தைகள் பற்றி இணையத்தில் துச்சமான, துக்கமானச் செய்திகள், அறிக்கைகள் வருகினும் அவற்றை முற்றிலும் உண்மையென நம்பி நாம் எடுத்துக் கொள்ளலாகாது. மனிதாபிமானம் என்பது இலத்திரனியல் நூற்றாண்டிலும் தொன்மையானது . இது நாம் நாளாந்தம் மற்றவருடன் பேணக் கூடியது, பேணவேண்டியது. இதே மனிதாபிமானத்தை நாம் நாளாந்தம் உபயோகிக்கும் இணையத்திலும் கடைபிடிக்கவேண்டும், இணையத்தில் தொடர்பு நன்னெறிகளைப் பேணல் மற்றவர்கள் நுகர்வுக்கு ஒரு கருத்தை எழுதும் போதும் சற்றுச் சிந்தித்து எழுதுவதும் , சித்தரிப்புக்களைப் பகிர்வதும்  நலம். நாம் பரிமாறும் […]

Continue Reading »

ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும்?

ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும்?

ஸ்டெர்லைட் நிறுவனம் 1993 இல் தாமிர உற்பத்தி தொழிற்சாலையைத் தூத்துக்குடியில் அமைக்கப்போவதாகச் செய்திகள் வந்த சமயத்திலிருந்தே, தூத்துக்குடியில் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. அச்சமயத்தில் தூத்துக்குடியில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்கள் தொடர் பேரணி போன்ற போராட்டங்களில் கலந்துகொண்டோம். உள்ளூர் பொதுமக்களின் சம்மதம் இல்லாமல், மாநில அரசின் ஆதரவைப் பெற்று 1996இல், மக்களின் பாதுகாப்பை மண்ணுக்குள் புதைத்துவிட்டு, தனது உற்பத்தியைத் தொடங்கியது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. இன்று இந்தியாவின் முன்னணி தாமிரத்தொழிற்சாலை என்ற நிலையில், ராட்சத உற்பத்தியைக் கொட்டிக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். அதன் […]

Continue Reading »

தேனீ அறியாத தேன்

தேனீ அறியாத தேன்

அமெரிக்க ஊத்தப்பமான பேன் கேக்கில் (Pan Cake) தொட்டுக்கொள்ள அமெரிக்கர்கள் பயன்படுத்துவது மேப்பிள் சிரப் (Maple Syrup) எனப்படும் ஒரு தேன் போன்ற சமாச்சாரத்தை. சுவையாக, தேன் போன்ற தித்திப்புடன் இருக்கும். இது தேனீயிடம் இருந்து பிடுங்கிய தேன் இல்லை. மேப்பிள் என்ற மரத்திடமிருந்து எடுக்கும் தேன். குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் மேப்பிள் மரத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள். மிகவும் அழகாக இலைகளைக் கொண்ட மரம். கனடா நாட்டின் சின்னமாக, அதிகாரப்பூர்வ அரசாங்கச் சின்னமாக மட்டுமில்லாமல், கனடா நாட்டின் […]

Continue Reading »

ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ

ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ

சினிமாவிலும் சரி, தினசரி பேச்சு வழக்கிலும் சரி அழகுக்கு உதாரணமாக அனைவரும் சொல்வது, ஸ்ரீதேவியைத்தான். இது ஏதோ அவர் கதாநாயகியாக நடித்துவரும் காலத்தில் சொல்லப்பட்டது அல்ல. இப்போது வரை அதுதான் நிலை. அப்படி அழகின் இலக்கணமாய்த் திகழ்ந்தவர். 1963 இல் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, கடந்த வாரம் துபாய்க்கு ஒரு திருமணத்திற்குச் சென்ற இடத்தில் தன்னுடைய 54 ஆம் வயதில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று மரணமடைந்த செய்தி, அவருடைய ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஸ்ரீதேவி […]

Continue Reading »

ஜிடிபிஆருக்கு தயாரா?

ஜிடிபிஆருக்கு தயாரா?

தகவல் தொழில்நுட்பம் பல்வேறு  காலக்கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. எந்தளவுக்குப் பயன்களைத் தருகிறதோ, அதே சமயம் இன்னொரு பக்கம் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகிறது. இன்றைய காலத்தில் வேண்டியோ வேண்டாமலோ நம்மைக் குறித்த தகவல்களை இணையத்தில் பல்வேறு இடங்களில் பதிய வேண்டியுள்ளது. நாம் அறிந்தோ அறியாமலோ இந்தத் தகவல்கள் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. இத்தகவல்கள் அனைத்தும் ஒருவருடைய அந்தரங்கம் சார்ந்தது மட்டும் அல்ல. அது ஒரு நிறுவனத்திற்குப் பொருள் ஈட்டும் பயனைத் தரும் நிலையில் இருப்பதால், அது அவருடைய தகவல் […]

Continue Reading »

சூப்பர் போல் லைவ்

சூப்பர் போல் லைவ்

மின்னியாபொலிஸில் ஃபிப்ரவரி 4ஆம் தேதியன்று சூப்பர் போல் ஃபுட்பால் இறுதிப் போட்டி டௌன்டவுனில் இருக்கும் யூ.எஸ். பேங்க் ஸ்டேடியத்தில் நடைபெறுவதையொட்டி, சூப்பர் போல் ரசிகர்களுக்காக டௌன்டவுன் நிக்கலட் மால் சாலையில் ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து, தொடர்ந்து பத்து நாட்களுக்கு “சூப்பர் போல் லைவ்“ என்னும் கண் கவர் கொண்டாட்ட நிகழ்வை மினசோட்டா சூப்பர் போல் பொறுப்பு அமைப்பின் நடத்துகின்றனர். தினமும் இசை நிகழ்ச்சிகள், பனிச் சறுக்கு விளையாட்டுகள், ஜஸ் கட்டிச் சிலைகள், பல வகை உணவுகள் […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad