\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

நகுலேச்சரம்

Filed in இலக்கியம், கட்டுரை by on January 29, 2017 0 Comments
நகுலேச்சரம்

இலங்கையில் தோன்றிய மிகப் பழமை வாய்ந்த ஈச்சரங்களில் ஒன்று நகுலேச்சரம் ஆகும். இது வட முனையில் யாழ் குடா நாட்டின் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மேற்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் ஆகும். ‘நகுலம்’ என்பது கீரி என்று பொருள்படும்.  தக்கிண பூமியின் தேன் பொழியும் தென்னகம் ஆகிய தமிழகத்தில் கீரிமுகமுடைய முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் ‘நகுலமுனிவர்’ என்றும் அழைக்கப் பெற்றார். இவர் தமிழகத்தில் இருந்து ‘மணற்திடர்’ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வந்தார். நகுலேஸ்வரத்தின் அருகேயுள்ள […]

Continue Reading »

அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்

Filed in இலக்கியம், கட்டுரை by on January 29, 2017 0 Comments
அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்

இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர், கற்றோர் அன்பும், அனுதாபத்தையும் நடைமுறையில் காட்டிப் பயனுற வைப்பது அவசியம். இதைப் பற்றி அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் பகிரப்படாத அனுபவத்தைப் பார்க்கலாம். இளமைப் பொழுதில் போதை வஸ்துப் பொருட்களிற்கு அடிமையானால் அதிலிருந்து இளையவர்களை மீட்கத் தவிர்ப்புக் கல்வி முறைகள் வைத்திய சிகிச்சை முறைகள் உண்டு. வாழவிருக்கும் பிள்ளைகளை பெற்றார், உற்றார், ஆகிய நம் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்ப மாட்டோம். ஆயினும் அசல் வாழ்வில் இருந்து விலகி நகல் சூழல் […]

Continue Reading »

பேர்ள் ஹார்பர்

பேர்ள் ஹார்பர்

  டிசம்பர் 7 1941 –  போர் முன்னறிவிப்பு எதுவுமின்றி  ஜப்பான்  அமெரிக்காவைத் தாக்கிய தினம்; அமெரிக்காவின் முக்கிய கடற்படைத் தளங்களில் ஒன்றான பேர்ள் ஹார்பரை 353 போர் விமானங்கள் கொண்டு ஜப்பான் தாக்கிய தினம்; 2403 அமெரிக்க வீரர்கள் மாண்டு போன தினம்; 1178 பேர் படுகாயமடைந்த தினம். 5 போர்க்கப்பல்கள் உட்பட 18 கப்பல்கள் அழிக்கப்பட்ட தினம். உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட தினம்; உலக நாடுகள் பலவற்றின் இன்றைய நிலைக்கு காரணமான தினம்; மொத்தத்தில் […]

Continue Reading »

கிறிஸ்த்மஸ் தினச் செய்திகள்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments
கிறிஸ்த்மஸ் தினச் செய்திகள்

பனிப்பூக்கள் வாசகர்கள் அனைவருக்கும்  கிறிஸ்தமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இறைமகன் இயேசு பாலன், உங்கள் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் அன்பையும் சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் நிரம்ப பொழிந்து, அனைவரையும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாக மாற்றி நமக்கு புனித வாழ்வின் மகத்துவத்தை உணர செய்து, ஒருவரை ஒருவர் ஏற்றுகொண்டவர்களாக அன்பையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்ற வாழ்த்துகிறேன். கிறிஸ்துமஸ் என்பது உலகத்தில் இறைவனுடைய அவதாரத்தை நினைவு கூறுவது.  இந்த கிறிஸ்து பிறப்பு வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வோ அல்லது வருடம் ஒருமுறை […]

Continue Reading »

மினசோட்டா குளிர்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments
மினசோட்டா குளிர்

மினசோட்டாவின் ஒரு சிறப்பம்சம், அதன் குளிர். ‘என்னது, குளிரா? அதான், இங்கே கடியான விஷயம், பாஸ்!!’ என்பவரா நீங்கள்? 13000 ஆண்டுகளுக்கு முன்பு, பனியுகம் (Ice Age) முடிவுற்ற சமயத்தில், இங்குச் சராசரி தட்பவெட்ப நிலை -16 டிகிரிக்கும் கீழே இருந்தது. இது ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருக்கும் தட்ப நிலை. கால ஓட்டத்தில், நல்லதோ, கெட்டதோ இந்த நிலை மாறி, தற்போது மனிதர்கள் வாழும் நிலைக்கு வந்திருக்கிறது. இந்தாண்டு டிசம்பர் 18ஆம் தேதியன்று, மினசோட்டாவின் குளிர் -20 […]

Continue Reading »

2016 – ஒரு பார்வை

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments
2016 – ஒரு பார்வை

எல்லா வருடங்களைப் போலவே, இந்த ஆண்டிலும் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருக்கிறது. பல நல்லது கெட்டதுகளைச் சந்தித்திருக்கிறது. தூக்கி வாரிப்போடும் சம்பவங்களைச் சகஜமாகக் கடந்திருக்கிறோம். சிலது வெறும் சம்பவங்கள், சிலது மைல்கல்கள், சிலது திருப்புமுனைகள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் வகையில் முத்திரை பதித்திருக்கும் 2016ஆம் ஆண்டின் டைரிக்குறிப்புகளில் எழுதப்பட்ட முக்கிய உலக நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாமா? கனடா தமிழர் பாரம்பரிய மாதம் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று, கனடா பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தைத் தமிழர் பாரம்பரிய மாதமாக […]

Continue Reading »

ஸ்திதப் பிரக்ஞன்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments
ஸ்திதப் பிரக்ஞன்

இந்த சமஸ்கிருத வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டது, சமீபத்தில் மறைந்த திரு. சோ ராமசாமி அவர்கள் முன்னாளைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்து 1990 களில் எழுதிய கட்டுரையில்தான். இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று புரிந்திராத காலமது. சோ அவர்கள் மொரார்ஜி தேசாய் குறித்து எழுதுகையில், இந்த வார்த்தையில் பொதிந்துள்ள பல தத்துவார்த்தப் பொருட்களை விளக்கியிருப்பார். அவற்றில் ஒன்று, சாதாரண மனிதராகவே வாழ்ந்து, உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் சாட்சி பாவத்தில் பார்த்திருந்து, நடுநிலைமையில் மட்டுமே […]

Continue Reading »

செல்வி . ஜெயலலிதா ஜெயராம்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments
செல்வி . ஜெயலலிதா ஜெயராம்

‘புரட்சித் தலைவி’, ‘அம்மா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்த தமிழக முதல்வர், செல்வி ஜெயலலிதா ஜெயராம், உடல் நலக் குறைவா ல் இம்மாதம் (டிசம்பர்) ஐந்தாம் தேதி காலமானார். அன்னாரது மறைவுக்கு, பனிப்பூக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக, உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தாலும், அவரது போராடும் வைராக்கிய குணத்தினால் காலனை வென்று, மீண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் அவரது மரணம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. […]

Continue Reading »

பிளாஸ்டிக் அரிசி

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments
பிளாஸ்டிக் அரிசி

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டிருந்தாலும்  மீண்டும் சில நாட்களாகச் செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும்  தலையெடுத்திருக்கும் ஒரு விஷயம் கலப்பட அரிசி. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒன்றும் புதிதல்ல என்று தோன்றும்; அரிசியில் கல்லும், மண்ணும், மற்ற தானியக் கழிவுகளும் இன்னும் பல அருவருக்கத்தக்க பொருட்களும் கலப்பது பல வருடங்களாக நடைபெறும் ஒரு விஷயம் என்றும் தோன்றும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் கலப்படம் செய்யும் பொருள் மாறியுள்ளது. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கால் செய்யப்படும் அரிசியில்லை. […]

Continue Reading »

என் பார்வையில் இசை மேதை பாலமுரளி

Filed in இலக்கியம், கட்டுரை by on December 11, 2016 0 Comments
என் பார்வையில் இசை மேதை பாலமுரளி

திரு BMK என்ற இசை இமயத்தைப் பற்றிப் பேசவோ எழுதவோ எனக்கு ஞானமும் தகுதியும் கிடையாது.  ஆனாலும் அவர் மேல் கொண்ட பக்தியும் ரசிக உத்வேகமும் என்னை இவ்வரிகளை எழுத தூண்டுகின்றன.  நான் BMK அவர்களின் பரம ரசிகர்களைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள். லால்குடி பரம்பரை பாலக்காடு மணி பரம்பரை என்பது போல BMK யின் ரசிக பரம்பரை, பெருமையும் தனித் தன்மையும் வாய்ந்தது ஆகும். தேனில் மூழ்கி எழுந்த குரலின் கம்பீரம், கிருதிகளை வழங்கும் பாங்கு, […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad