\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

அமெரிக்காவிலும் சாதி…

அமெரிக்காவிலும் சாதி…

2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் இந்தியாவின் சாதி சமுதாயம் ‘இன வெறுப்பை” ஒட்டியது என்று பிரகடனப் படுத்தியது. இதற்கான குறிப்பை இந்த இணையதளத்தில் காணலாம்: https://www.cbc.ca/news/world/story/2007/03/02/india-dalits.html இந்திய அரசாங்கம் இந்தியாவின் சாதிகள் முறை இன வெறுப்பு அல்ல என்றும் சாதிகளையே அழித்து விட்டோம் என்று மறுத்துரைத்தது ஒரு தனிக்கூத்து. ஐ.நா.வின் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அறிக்கை https://www.hrw.org/reports/2001/globalcaste/ அதைச் சற்றுத் தள்ளி வைத்து நடப்புச் செய்திக்கு வருவோம். அமெரிக்காவிலும் சாதி உள்ளதா? என்று […]

Continue Reading »

இசையுலக இழப்புகள்

இசையுலக இழப்புகள்

இசையுலக இழப்புகள் இம்சித்துத் தொடர்கிறது .. இம்முறை நாம் இழந்தது இரு பெரும் கவிஞர்களை. எம்.கே. ஆத்மநாதன் தமிழ் திரையுலகம் எளிதாய் மறந்து விட்ட ஒரு பெயர். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் எனப் பல துறைகளில் பரிமளித்தவர். மிகக் குறைந்த பாடல்களே (120) எழுதி யிருந்தாலும் அனைத்துமே முத்தான பாடல்கள். உனக்காக எல்லாம் உனக்காக — (புதையல்) தடுக்காதே என்னை தடுக்காதே — (நாடோடி மன்னன்) இன்று போய் நாளை வாராய் – (சம்பூர்ண ராமாயணம்) […]

Continue Reading »

நேர்மைக்கு ஒரு பாராட்டு விழா

நேர்மைக்கு ஒரு பாராட்டு விழா

தமிழ்நாட்டில், ஜெயங்கொண்டம் கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த நீலமேகம், தினமலர் பத்திரிகை ஏஜெண்டாக இருந்து வருபவர். இவர் பேப்பர் விநியோகித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் கிடந்த ஒரு பையில் ரூ. ஒரு இலட்சத்து 53 ஆயிரத்தை கண்டெடுத்தார். உடனே ஜெயங்கொண்டம் போலீஸில் பணத்தை ஒப்படைத்தார். பின்னர் பணம் உரியவரிடம் சேர்க்கப்பட்டது. இதற்காக நீலமேகத்தின் நேர்மையை பாராட்டும் வகையில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, விழா ஒன்றை நடத்தியது. கல்லூரியின் தாளாளர் க. செங்குட்டுவன் அவர்கள் […]

Continue Reading »

லம்பேர்ட்டனில் பண்டைய இரும்புத்தொழில்

லம்பேர்ட்டனில் பண்டைய இரும்புத்தொழில்

இரும்புத் தாதுப் பொருள் பண்டையத் தமிழர் நாகரீகத்தில் இடம்பெற்ற முக்கியமானதொரு உலோகம். மினசோட்டா மாநிலமும் சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மிகப்பெரிய இரும்புத்தாதுப் பொருள் அகழ்வுப் பிரதேசமாக இருந்து வருகிறது. தமிழ் வரலாற்றிலும் பாண்டிய தொன்மை காலத்தை  இரும்பு காலமாக அகழ்வாராய்ச்சியாளர்கள் வகுத்து எமது தமிழ் நாகரீகத்தை படிக்கிறார்கள். இயந்திரமயமாக்கபட்ட நகர வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இரும்பினால் ஆன தளவாடங்களை வாங்கத் தெரியுமே தவிர அவை எவ்வாறு உருவாக்கப் பட்டன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னதான் யூடியூப்பிலே கானொளியாகப் […]

Continue Reading »

வாங்க…. ஃப்ரீயா பேசலாம் …

வாங்க…. ஃப்ரீயா பேசலாம் …

நான் பேசப்போற டாபிக்கை வெச்சு எனுக்கு ரொம்ப வயசாயிட்ச்சினு நெனுச்சுக்காதீங்கோ … யங் ஏஜூ தான் எனுக்கு.. இர்ந்தாலும் அப்பப்போ எதுனா ஃபீல் ஆவும் … போன வாரம் இப்டித்தான் ஃபீலாயிட்டேன்.. என் டாட்டரு, அதாம்ப்பா பொட்ட புள்ள, ரிபோர்ட் கார்டை எடுத்தாந்து நீட்டுச்சி … நம்பள மாரி இல்லாம ஏதோ நல்லா படிக்கும்னு வெச்சிக்கோ .. சரி நல்ல மார்க் வாங்கியாந்துக்கிறாளே எதுனா கிஃப்ட் குடுப்போம்னு ‘உனுக்கு என்னா ஓனும் கண்ணு?’ன்னு கேட்டேம்பா. டக்குனு ‘செல்ஃபோனு’ […]

Continue Reading »

சமூக வலைத்தளங்களும் அதன் பயன்பாடுகளும்

சமூக வலைத்தளங்களும் அதன் பயன்பாடுகளும்

இந்த நூற்றாண்டில் உலகளாவிய முறையில் எங்கெல்லாம் மனித சஞ்சாரம் இருக்குமோ அங்கெல்லாம் இலத்திரனியல் / மின்னனுவியல் (electronics) தகவல் சாதனங்கள் காணப்படுகின்றன. தகவல் உச்சமமான தற்போதைய தசாப்தத்தில் தொழிநுட்ப முன்னேற்றங்கள் எவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் பலனையும், பாதகங்களையும் உண்டாக்கலாம் என ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது எமது குடும்பத்திற்கும் உடல் மற்றும் உள நலத்திற்குப் பயனாகவும், மன நிம்மதியைத் தரவும் வழிவகுக்கும். எம்மில்லங்களில் வளரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலகர்களாக இருக்கையிலேயே ஓடுபட […]

Continue Reading »

மூளைவளர்ச்சியும் மொழி கற்றலும்

மூளைவளர்ச்சியும்  மொழி கற்றலும்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிறது நம் முதுமொழி. இது மூளை வளர்ச்சியிலும் மொழிகற்றலிலும் தகுமான அறிவுரை என்பது தற்போதைய மொழியியல் கல்வி ஆராய்ச்சிகளில் இருந்து தெரிய வருகிறது. மொழி தெரிந்து கொள்ளல் மனித இனத்தின் பிரதான குணாதிசயங்களில் ஒன்று. மொழி கற்றல் மூளை வளர்ச்சியில் பிரதான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என தற்பொழுது பரீட்சார்த்த ஆராய்ச்சி மூளைப் படங்கள் மூலம் தெளிவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.   இந்த ஆராய்ச்சியின் பிரதான அவதானிப்பு என்ன வென்றால், மனித மூளை […]

Continue Reading »

மதுரை

மதுரை

 சில நகரங்கள் தோன்றும் மறையும் அது உலக இயல்பு. ஆனால் ஒரு சில நகரங்கள் மட்டுமே தொடர்ந்து மக்கள் வாழத் தகுதி உள்ளதாகவும் அதன் பெருமை குறையாமலும் இருக்கும். அத்தகைய ஒரு மாநகரம் மதுரை. கடைச்சங்கம் வளர்த்தப் பாண்டியத் தலைநகர், மல்லிகை நகரம், தூங்கா நகரம் என மக்களால் புகழப்படும் மாநகரம் மதுரை. எந்தப் பக்கச் சார்புள்ள வரலாற்று ஆசிரியர்களாலும் இதன் இருப்பைக் குறைந்தது 2500 ஆண்டுகளுக்குக் கீழ் சொல்ல இயலாது. மதுரையின் வரலாற்றைச் சொல்லக் கி.மு,கி.பி […]

Continue Reading »

இருவேறு படங்கள், ஒரே தாக்கம்…

இருவேறு படங்கள், ஒரே தாக்கம்…

மனித இனத்தில், அன்றாட வாழ்வில், தான் உண்டு தன் சொந்த வாழ்க்கையுண்டு என்று வாழ்பவர்கள் அதிகம். இவர்களின் கவனம் அசாதாரணச் சூழ்நிலைகளைச் சற்றேனும் உற்று நோக்குவதில் சிறிதளவேனும் திளைப்பதில்லை. இவர்களின் கவனத்தையும் கவர்ந்திழுக்கும் சக்தி சில படங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் உண்டு. அவற்றில் இரண்டு படங்களையும் நிகழ்வுகளையும் ஒப்பு நோக்குவதுதான் இந்தச் சிறிய கட்டுரை. வியட்நாம் போரின் உச்சத்தில் 1972ஆம் ஆண்டு புகைப்பட நிபுணர் நிக் உட் அவர்கள் எடுத்த இந்தக் கருப்பு/வெள்ளை படம் ஒரு பெரும் தாக்கத்தை […]

Continue Reading »

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி

நான் அமெரிக்காவிற்கு வந்த புதிதில் வீட்டு நினைவுகளில் சிக்குண்டு பெரிதும் கலங்கியதுண்டு. உறவினர், நண்பர் இவர்களை விட்டு விட்டு வந்து இங்கே என்ன சாதிக்கப் போகிறோம் எனத் தோன்றியது உண்டு. நண்பர், உறவினர் மட்டுமில்லை, எனது வாழ்க்கை முறையையே தொலைத்து விட்டதாக நினைத்தேன். எங்கள் வீட்டுக்கு பெடல் இல்லாத சைக்கிளை ஓட்டி வந்து பேப்பர் போடும் பெரியவர், ‘எளன்’ என்று கூவி இளநீர் விற்பவர், காலை ஆறரை மணி சமீபத்தில் சாவியை மூன்று முறை கதவில் தட்டி […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad