\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இலக்கியம்

ஏப்ரல் மேயிலே…

ஏப்ரல் மேயிலே…

“ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை காஞ்சு போச்சுடா” பாடலை மினசோட்டாவில் இருக்கும் நாம் பாடினாலும் பொருத்தமாகத் தான் இருக்கும் போல!! ஊசியாய் குத்தும் குளிர் இல்லை அவ்வளவு தான், ஆனால் இன்னும் ஜாக்கெட் இல்லாமல் வெளியே போக முடியவில்லை. “ஜாக்கெட் ஜாக்கெட் ஜாக்கெட், ஐ டோண்ட் லைக் ஜாக்கெட், பட் ஜாக்கெட் லைக்ஸ் மீ” என்று கேஜிஎப்-2 டயலாக் பேச பொருத்தமானவர்கள் மினசோட்டாவாசிகள். பொதுவாக, மார்ச் மாதம் வந்தால் குளிர் போய்க் கொஞ்சம் கதகதப்பு வரும் என்பது ஐதீகம். […]

Continue Reading »

பலி-சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்ற கதை

Filed in கதை, வார வெளியீடு by on May 20, 2022 1 Comment
பலி-சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்ற கதை

“என்ன குழந்தை?” என்று ‘துவாசை’ நோக்கிப் போய்க்கொண்டிருந்த பெருவிரைவு ரயிலிலில் ஒரு குரல் தெறித்தது. மொழிப் பாகுபாடின்றி பல தலைகள் குரல் வந்த திக்கில் திரும்பின. தன்யாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என அதுவரை மனத்தில் ஆக்கிரமித்திருந்த தவிப்பு அகிலனைவிட்டுத் தற்காலிகமாக விலக, குரலுக்கு உரியவனின் மேல் பார்வையை அனுப்பினான். அகிலனுக்கும் அவனுக்குமிடையில் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தனர். அவனுக்கும் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த சீனர் ஒருவர் முணுமுணுத்தார். உறக்கம் கலைக்கப்பட்ட கோபம் அவரது வெளுத்த […]

Continue Reading »

அமெரிக்கா வருபவர்களுடைய முதல் 10 வேலைகள்

அமெரிக்கா வருபவர்களுடைய முதல் 10 வேலைகள்

பணி நிமித்தம் புதிதாக அமெரிக்கா வருபவர்கள், வந்தவுடன் முதல் வாரத்தில் செய்ய வேண்டிய 10 முக்கிய வேலைகள் இவை. அமெரிக்கப் பயணத் திட்டத்தில் உங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ இருந்தால், தவறாமல் இதைப் பகிரவும். I-9 வேலைக்குச் சேர்ந்து முதல் மூன்று நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டியது – I-9 பாரம் (Form I-9). ஒரு ஊழியரைப் பணியில் அமர்த்துவதற்கு முன் அவருடைய வேலை செய்வதற்குரிய தகுதியுடன் இருக்கிறாரா என்று அந்த நிறுவனம் சரிபார்க்கும் நடைமுறை இது. முதலில் […]

Continue Reading »

மனநல விழிப்புணர்வு மாதம்

மனநல விழிப்புணர்வு மாதம்

மன ஆரோக்கியம் அல்லது மனநலன் என்பது ஒருவரின் உளவியல், மனவெழுச்சி, சமூகப் பார்வை ஆகியவற்றைப் பொறுத்து அமைவதாகும். ஆரோக்கியமான மனம் ஒருவரைத் தெளிவாகச் சிந்திக்கவும், ஆக்கப்பூர்வமாகச் செயல்படவும் தூண்டி அவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. உடல் நலமும், மன நலமும் ஒன்றையொன்று சார்ந்தவை. தங்கள் உடல் நலனைப் பேணிப் பாதுகாத்து, அக்கறை காட்டும் 90% மக்கள், மன நலத்தைப் பற்றிக் கவலைபடுவதில்லை என்பதே உண்மை.  நாமெல்லோரும் அவ்வப்போது உடல் ரீதியான உபாதைகளுக்கு உள்ளாவதைப் போல மன ரீதியான […]

Continue Reading »

பெண்மை

பெண்மை

பிறப்பில் தொடங்கி என்னை இறப்பு வரைக்கும் இங்கே சிறப்பாய்க் காத்தவள் பெண், மறுப்பு இதற்கேது சொல்?   கருவில் தாங்கி, கற்பக தருவாய் ஈன்று, என்னை வருவாய் மலரேயென்று அற்புதத் திருவாய் மலர்ந்தவள் அன்னை!   சிறுவனாய் நான் அலைகயிலே சிறியதாய்த் தோன்றும் செயலும் ஒருவனாய்ச் செய்திடத் தகுந்த திறமையைக் கற்றிடாக் காரணத்தால்   அருகிலே வந்து அமர்ந்து பெருகிய நற் பாசத்தோடு மருகிய விழிநீர் துடைத்து உருகியே உதவியவள் அக்காள்!   பள்ளி போகும் பருவத்திலே […]

Continue Reading »

இலத்திரனியல் திரையில் பார்ப்பதும் காகிதத்தில் கிரகித்தலும்

இலத்திரனியல் திரையில் பார்ப்பதும் காகிதத்தில் கிரகித்தலும்

சந்தர்ப்பம், சூழல், தொழிநுட்ப நவீனங்கள் எமது வாழ்வைத் தொடர்ந்தும் மாற்றியவாறே உள்ளன என்பதை நாம் அறிவோம். மாற்றங்கள் யாவும் முன்னேற்றத்திற்கு உரியன என்று கூறிக்கொள்ள முடியாது. இதை நாம் படிக்கும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் என்று எடுத்துப் பார்த்தால் சில விடயங்கள் தெளிவிற்கு வரும். சென்ற பலவருடங்கள் அச்சுத்தாளில் தயாரிக்கப் பட்டு காகித வாசிப்பில் இருந்து கணனி உபகரணங்களில் desktop, notebook இருந்து இன்று பலவித கைத் தொலைபேசி smart phone,  தட்டு ஏடுகள் Tables கொண்ட இலத்திரனியல் […]

Continue Reading »

இரு ஆசிய நாடுகளின் நெருக்கடி – பாடமும் படிப்பினையும்

இரு ஆசிய நாடுகளின் நெருக்கடி – பாடமும் படிப்பினையும்

கடந்த இரண்டாண்டுகளாக நோய்தொற்றின் பிடியில் சிக்கித் தவித்த உலகநாடுகள், அப்பிடியில் லேசானத் தளர்வு ஏற்பட்டுத் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனைந்த வேளையில் வேறுவடிவிலான சிக்கலுக்குள் சரியத் தொடங்கியுள்ளன. இம்முறை உலகை அச்சுறுத்துவது போர் மற்றும் பொருளாதார நெருக்கடி. ஆயுதங்கள் கொண்டு வெறித்தனமான போர் நடவடிக்கைகளால் சில நாடுகள் வீழ்ச்சியுற, பொருளாதார ஸ்திரமின்மையால் சில சிறிய நாடுகள் பேரின்னல்களைச் சந்தித்து வருகின்றன. அவற்றில் குறிப்பிடவேண்டியவை இலங்கையும், பாகிஸ்தானும். இலங்கை இலங்கையின் நெருக்கடிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இலங்கையின் பொருளாதாரம் 3T […]

Continue Reading »

ஆங்கிலமே இணைப்பு மொழி (லிங்குவா ஃபிரான்கா)

ஆங்கிலமே இணைப்பு மொழி (லிங்குவா ஃபிரான்கா)

“ஒரு மொழி உலகளாவிய மொழியாக மாறுவது அதைப் பேசும் மக்களின் சக்தியால்” – இதைச் சொன்னவர், பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மொழியியலாளர் டேவிட் கிரிஸ்டல். உலகெங்கும் சுமார் 7100 மொழிகள் இருந்ததாக அறியப்படுகிறது. அவை ஒவ்வொன்றும், தனித்தன்மையோடு, வெவ்வேறு பரிமாணங்களில், மனிதச் சமூகத்தை அழகுபடுத்திக்கொண்டிருக்கின்றன.  துரதிர்ஷ்டவசமாக இவற்றில் பல மொழிகள், அவை புழங்கப்படும் பூகோள எல்லையைக் கடந்து பிரபலமடையவில்லை. எனினும் சில மொழிகள் எல்லைகளை உடைத்து மிகப் பரவலாகப் புழங்கிவருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆங்கிலம். ஐந்தாம் நூற்றாண்டில், […]

Continue Reading »

பொங்கும் பூந்தோட்டம்

பொங்கும் பூந்தோட்டம்

மினசோட்டாவில், மங்கு பனி ஓய்ந்திட, மாரி மழை பெய்திட பொங்கி வந்தது வசந்தகாலம். மரகதப் பச்சை இலைகள் ஒரு புறம். மஞ்சள், செம்மஞ்சள், வெள்ளை, இளஞ் சிவப்பு, சிவப்பு, நாவல், என மலர்ந்திடும் பூக்கள் மறுபுறம். வெப்பவலயத்திலிருந்து வட அமெரிக்காவில் வந்து குடியேறி வாழும் தமிழர்கள் பலருக்கு ஆரம்பத்தில் வட அமெரிக்க காலநிலை சற்றுப் புதிராகவும் அல்லது கேள்விக் குறியாகவும் அமையலாம். குறிப்பாக, வீட்டின் பிந்தோட்டத்தில் தாவரங்கள், பூக்கள், மரங்கள் வளர்க்க விரும்புவோர்க்கு எப்போது, அவற்றை விதைப்பது […]

Continue Reading »

மினசோட்டாவில் இனங்கள் குறித்த வரலாற்றுக் கல்வி தேவையானது

மினசோட்டாவில் இனங்கள் குறித்த வரலாற்றுக் கல்வி தேவையானது

1990களில் ஊர்ப்புற, விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது நான் உள்ளூர் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போய்ப் பார்ப்பதுண்டு. அதன் பொழுது கிழக்காசிய, பொதுவாக வியட்னாமிய, மொங் இன அடிக் கொடி, அல்லது சில சமயம் கறுப்பின விளையாட்டு வீரர்களை குறித்துக் கேவலமாக பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் குரல் கொடுத்ததை அவதானித்திருக்கிறேன். இவ்வகையான எண்ணம், மினசோட்டா மாநில ஊர்ப்புறப் பகுதிகளிலும் பரவலாகயிருந்ததையும்  கண்டதுண்டு. 30 வருடங்களுக்குப் பின்னரும் இந்த இனத்துவேசம் மினசோட்டா பாடசாலைகளிலும் எழுச்சிபெறுவது சமூகத்திற்கு […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad