இலக்கியம்
இதெல்லாம் சாதாரணமப்பா!
மகேஷ் தனது பல்சர் பைக்கை கல்யாண மண்டபத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அவன் ஒரு பைக் பைத்தியம். மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்னரே, கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்திற்கு முன்பதிவு செய்து, 9 விகித வட்டிக்கு வாங்கிய புதிய மாடல் பல்சர் பைக் அது. தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலைப் பார்க்கிறான். ““என்ன தம்பி, புது மாடல் போல! பல்சர் பைக் ஹெட் லைட்டே அழகுப்பா! கருப்பு கலர்ல ராஜா […]
கலைஞன்
“கண்களுக்குள் கசிகின்ற கண்ணீரை இமைகளுக்குள் வாழ்க்கையாக ஒளித்துக் கொண்ட இருக்கிறான் – கலைஞன்” “என் வயிற்றுக்குள் எலிக்குட்டி அளவான பயம் ஒன்று கத்திக் கொண்ட இருக்கிறது. இன்னும் இரு நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். நீ ஓடவில்லை என்றால், மூன்றாவது நிமிடத்தில் நான் பூனை ஒன்றை வளர்க்கப் போகிறேன்.” பல வருடங்களுக்கு முன் எனக்குள் நான் எழுதி ஒளித்த நகைச்சுவை ஒன்று இன்று ஞாபகம் வருகிறது. ஏனென்றால், நான் வாழ்க்கையில் முதற் தடவையாக பறக்கப் போகிறேன். அம்மா என்னை […]
பனி விழும் மலர்வனம்
வாரத்தில் 6 நாள் உழைத்து களைத்து சனிக்கிழமை முன்னிரவில் சனி நீராடும் நிகழ்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தேன் நான். சும்மா ரெண்டு பீர். அவ்வளவுதான். தனியே அறை எடுத்து தங்கியிருக்கும் எனக்கு இதுதான் வசதி. மற்றபடி நான் நல்ல பையன் தான்.நம்புங்கள். அழைப்பு மணி ஒலித்தது. சைடு டிஷ்ஷும், வறுத்த அரிசியும் அதான் ப்ரைடு ரைஸும் சொல்லியிருந்தேன் ஸோமோட்டோ-வில். அவனாகத்தான் இருக்கவேண்டும். கதவைத்திறந்தேன். சிலீர் என்று பனிப்புயல் என்னை தாக்கியது. அங்கே மெர்லின் நின்று கொண்டிருந்தாள். “இவள் ஏன் இங்கு […]
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது…
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட சொல், ‘பெகாசஸ்’. 2012 ஆம் ஆண்டு சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கான அலங்கார வளைவு உருவாக்கப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சியினர் அந்த வளைவு இரட்டை இலைபோல உள்ளது என்று ஆட்சேபிக்க, அப்போதைய அதிமுக அரசு, அது பறக்கும் குதிரையான ‘பெகாசஸின்’ இறக்கைகள் என்று ‘விளக்கம்’ தந்தபோது கேட்ட சொல். அதற்கு பின் அந்தச் சொல்லைக் கேட்க / உச்சரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. ஆனால் இப்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகமெங்கும் உச்சரிக்கப்படும் […]
அலுவலகம் திரும்பல்
சென்ற வருடம் மார்ச் மாதம், பல அலுவலகங்கள் மூடப்பட்டுப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கினார்கள். இதோ ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. சில அலுவலகங்கள் முழுமையாக மீண்டும் திறந்துவிட்டன. சில அலுவலகங்களில், வாரத்தில் சில நாட்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு வரச் சொல்கிறார்கள். பல அலுவலகங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் முழுமையாக அலுவலகத்திலிருந்து செயல்பட இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு. சில அலுவலகங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு முழுமையாகப் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க வைக்கப் போகிறார்களாம். மினியாப்பொலிஸ்-செயிண்ட் […]
சவால்
“என்னது…? சைக்கிளோட்ட தெரியாதா?” தோழிகள் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் உள்ளுக்குள் சிதைந்து போனேன். நான்கு வீட்டுச் சாப்பாட்டையும் ரசித்து ருசித்துச் சாப்பிட்ட இனிய உணர்வு மனத்தைவிட்டு அகலுவதற்குள் ‘சைக்கிளோட்டலாமா?’ என்ற கேள்வியை எழுப்பியவளை மனத்துக்குள் திட்டித் தீர்த்தேன். உண்ட மயக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ளாதவளை நொந்துகொள்வதா அல்லது அவள் கேட்டவுடன் குதித்துக்கொண்டு கிளம்பியவர்களைக் குறை சொல்வதா என ஒன்றும் புரியவில்லை. பிள்ளைகள் அனைவரும் சாப்பிட்டவுடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தனர். அரட்டைக் கச்சேரியுடன் அமர்க்களப்பட்ட அந்த நாள் என்னளவில் […]
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 3
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2 குருசாமி, ராஜீவ் மற்றும் ராஜேந்திரன் போலீஸ் ஜீப்பில், சுந்தரின் பழைய அலுவலகத்தை நோக்கி பயணித்தனர். ராஜீவ் குருசாமியிடம் நடந்த விஷயங்கள் ஒன்று விடாமல் விவரித்தார். “சார், மாணிக்கம் நாம போற இடத்தைச் சொன்னவுடனே குஷியாகிட்டான் சார்!” என்று சற்று நக்கலாகச் சொன்னார் ராஜேந்திரன். “என்னையா, எப்பவும் வீட்டுக்கு போற நேரத்தில, வெளியே போக சொன்னா, சின்னப் பசங்க மாதிரி மூஞ்சிய தூக்கி வச்சுப்ப. என்ன […]
ஒற்றைக் கட்சி – ஒற்றை ஆட்சி
பண்டைய காலங்களில் கிழக்காசியப் பகுதியான சீனா, நாகரிகமடைந்த, பொருளாதாரத்தில் ‘பெருஞ்சக்தி’ பெற்ற நாடாக விளங்கியது. சியா வம்சம் தொடங்கி, வழிவழியாக வந்த சீன அரசகுல மன்னர்கள் கடற்பயனங்கள் மேற்கொண்டு, பல பகுதிகளை தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனர். திசைகாட்டி, காகிதம், அச்சுக்கலை என பலவற்றை உருவாக்கிய பெருமையும் சீனர்களுக்கே உண்டு. சீனாவுடன், அதன் அண்டை நாடான இந்தியாவின் வளங்களும் இணைந்து உலக வர்த்தகச் சந்தையின் மையமாக விளங்கியது இந்த ஆசியப்பகுதி. மன்னராட்சி பதினெட்டாம் நூற்றாண்டு இறுதியில் அமெரிக்கா […]
மெய்நிகர் செலாவணி
உலகப் பொருளாதாரத்தை நகர்த்திச் செல்லும் ‘கரென்சி’ எனும் செலாவணி பண்டைய காலந்தொட்டு பல மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. பண்டமாற்று முறை, தோல் நாணயங்கள், உலோக நாணயம், காகித பத்திரங்கள், நோட்டுகள், காசோலைகள் என பல்வேறு வகைகளில் செலாவணி, வர்த்தகத்தை இயக்கி வந்தது. இந்த வகை செலாவணிகள் யாவும், தருபவர்-பெறுபவர் இருவராலும் தொட்டு உணரத்தக்க வடிவில், புலப்படும் உருப்படியாக இருந்து வந்தன. நவீன உலகின் அசுரத்தனமான தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் செலாவணி, ‘டிஜிட்டல்’ எனப்படும் எண்ணியல் அல்லது இலக்கமுறை வடிவமெடுத்துள்ளது. […]
நம்பிக்கையெனும் சிறை
“75 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, பிரபஞ்சத்தில் 76 கிரகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கிரகத்தின் அரசனாக இருந்தவன் ஜீனு எனும் கொடுங்கோலன். தன் கிரகத்தில் கோடிக்கணக்கில் தீயவர்கள் அதிகரித்து வருவதைக் கண்ட ஜீனு, அவர்களை அழிக்க முற்பட்டான். தீட்டன் என அழைக்கப்பட்ட அவர்கள் அனைவரையும் DC-8 போன்ற விமானங்களில் ஏற்றி பூமிக்கு அனுப்பி, பல்லாயிரம் எரிமலைகளுக்கு அடியில் அவர்களைப் புதைத்துவிட்டான். பின்னர் அந்த எரிமலைகள் மீது அணுகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்தான். அப்பொழுது தீட்டன்களின் உடல்கள் வெடித்து […]