\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இலக்கியம்

சந்தியாகாலம்

Filed in கதை, வார வெளியீடு by on October 13, 2021 0 Comments
சந்தியாகாலம்

🌿  அதிகாலைத் தூக்கத்தை அனுபவித்தபடி படுத்திருந்த அகரனைத் தொலைபேசி அடித்து விழிக்கச்செய்தது.  “கொழும்பிலிருந்து ஃபோன்கோல்” என்றதும்   மருண்டு கலவரப்பட்டான்.  அநேகமாக  அதிகாலைகளில் நல்லசெய்திகள் வருவதில்லை. யாராவது பணம் தேவையென்று குடைவார்கள்,  அல்லது குண்டுவீச்சில் எவருடையதாவது வீடு உடைந்துபோனதாயிருக்கும், அல்லது எவருடையதும் இழப்பாகவிருக்கும். அவன் பதட்டத்துடன் ரிசீவரைப் பிடித்திருக்கவும் மறுமுனையில் இருந்த சித்தார்த்தன்  ” அடேய்………. நம்ம சுப்பையா அப்பா இறந்துவிட்டாராம் ” என்றான். “அப்படியா சந்தோஷம் . . . . ! ”  “என்னடா  […]

Continue Reading »

நூறுரூபாய் தாள்

Filed in கதை, வார வெளியீடு by on October 13, 2021 0 Comments
நூறுரூபாய் தாள்

“இன்னைக்கு சண்டே. இருந்த ஆயிரம் ரூபாயும் காலியாகிடுச்சு. கையில ஒரு பைசா கூட இல்லை. திடீர்ன்னு சொந்தக்காரனுங்க எவனாவது வந்துட்டாங்கன்னா, அவ்வளவு தான் என்னோட நிலைமை. உடனே என்னோட பொண்டாட்டி போய் கறி எடுத்துட்டு வாங்கன்னு சொல்லிப்புடுவா… காசு இல்லன்னு சொன்னேன்; என்னை தூக்கிப் போட்டு மிதிச்சுடுவா… அப்புறம் இந்த பொழப்பு பொழைக்கிறதுக்குச் சாகலாம் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம்  திட்டுவா.  அடேய்… சொந்தக்காரனுங்களா… தயவு செய்து எவனும் வீட்டுப்பக்கம் வந்துறாதீங்கடா… யாரும் வரதுக்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன். […]

Continue Reading »

புதிய வேளாண் சட்டத் திருத்தங்கள் 2020

புதிய வேளாண் சட்டத் திருத்தங்கள் 2020

வேளாண் துறை தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குடியரசு தலைவர் இந்த மசோதாக்களுக்கு 2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்த பின்னர் அவை சட்ட வடிவத்தைப் பெற்றன. அந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020 இதன் படி […]

Continue Reading »

பண்ணையில் ஒருநாள்

பண்ணையில் ஒருநாள்

”மாடு கண்ணு மேய்க்க, மேயிறதப் பாக்க மந்தைவெளி இங்கு இல்லையே”   என ‘சொர்க்கமே என்றாலும்’ பாடலைப் பாடியபடி அங்கலாய்த்துக்கொள்பவர்கள் சொல்லும் ஒரு விஷயம் – நம்மூரைப் போல ஆடு, மாடு போன்றவற்றை இங்கே அமெரிக்காவில் காண முடிகிறதா, தடவிக்கொடுக்க முடிகிறதா என்று தான். ஏன் முடியாது என்று சொல்லத்தான் இந்தப் பதிவு. அமெரிக்காவிலும் நகர்புறங்களைத் தாண்டு வெளியே சென்றோமானால், பெரும்பாலும் விவசாய நிலங்களைத் தான் காண முடியும். ஆடு, மாடு, குதிரை மேய்வதைப் பார்க்க முடியும். […]

Continue Reading »

அருவியில் கண்ணாமூச்சி

அருவியில் கண்ணாமூச்சி

ஆசியோலா என்ற சிற்றூரின் வெளிப்புறத்தில் ரயில் பயணத்தை முடித்துவிட்டு, ஊருக்குள் நுழைந்தால், ஒரு அமெரிக்கப் பூர்வக்குடி வீரனின் சிலையைக் காண முடியும். கம்பீரமாக நிற்கும் அந்த வீரனின் பக்கத்தில் கேஸ்கட் அருவி (Cascade falls) என்றொரு பலகையும் அதன் பக்கத்தில் கீழ் நோக்கி செல்லும் படிக்கட்டுகளுக்கான வழியும் இருக்கும். கீழே இறங்குவதற்கு முன்பு, அந்த வீரனைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஆசியோலா என்றழைக்கப்பட்ட அந்த வீரனின் இயற்பெயர் பில்லி பாவல் (Billy Powell). 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து […]

Continue Reading »

மினசோட்டா ரயில் சுற்றுலா

மினசோட்டா ரயில் சுற்றுலா

உள்ளூர் பயணங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், ரயிலில் பயணம் என்பது அமெரிக்காவில் அரிதான விஷயம். கிட்டத்தட்ட அதே அளவு கட்டணத்திலோ, அல்லது சிறிது அதிகம் கொடுத்தாலோ, விமானப்பயணத்தில் விரைவாக எந்த இடத்திற்குச் சென்றுவிடலாம் என்பதால் வெளியூர் பயணங்களுக்குப் பொதுவாக ரயிலில் செல்ல பொதுமக்கள் விருப்பப்பட மாட்டார்கள். ரயிலில் செல்ல வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தாலொழிய, ரயிலில் செல்வது என்பது நமது திட்டத்தில் இடம் பெறாது. இதனால் அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்கு ரயில் பயணம் என்பது பரிச்சயமாயிருக்காது. அவ்வப்போது […]

Continue Reading »

இதெல்லாம் சாதாரணமப்பா!

இதெல்லாம் சாதாரணமப்பா!

மகேஷ் தனது பல்சர் பைக்கை கல்யாண மண்டபத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அவன் ஒரு பைக் பைத்தியம். மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்னரே, கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்திற்கு  முன்பதிவு செய்து,  9 விகித  வட்டிக்கு வாங்கிய புதிய மாடல் பல்சர் பைக் அது. தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலைப் பார்க்கிறான்.     ““என்ன தம்பி, புது மாடல் போல! பல்சர் பைக் ஹெட் லைட்டே  அழகுப்பா!    கருப்பு கலர்ல ராஜா […]

Continue Reading »

கலைஞன்

கலைஞன்

“கண்களுக்குள் கசிகின்ற கண்ணீரை இமைகளுக்குள் வாழ்க்கையாக ஒளித்துக் கொண்ட இருக்கிறான் – கலைஞன்” “என் வயிற்றுக்குள் எலிக்குட்டி அளவான பயம் ஒன்று கத்திக் கொண்ட இருக்கிறது. இன்னும் இரு நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். நீ ஓடவில்லை என்றால், மூன்றாவது நிமிடத்தில் நான் பூனை ஒன்றை வளர்க்கப் போகிறேன்.” பல வருடங்களுக்கு முன் எனக்குள் நான் எழுதி ஒளித்த நகைச்சுவை ஒன்று இன்று ஞாபகம் வருகிறது. ஏனென்றால், நான் வாழ்க்கையில் முதற் தடவையாக பறக்கப் போகிறேன். அம்மா என்னை […]

Continue Reading »

பனி விழும் மலர்வனம்

பனி விழும் மலர்வனம்

வாரத்தில் 6 நாள் உழைத்து களைத்து சனிக்கிழமை முன்னிரவில் சனி நீராடும் நிகழ்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தேன் நான். சும்மா ரெண்டு பீர். அவ்வளவுதான். தனியே அறை எடுத்து தங்கியிருக்கும் எனக்கு இதுதான் வசதி. மற்றபடி நான் நல்ல பையன் தான்.நம்புங்கள். அழைப்பு மணி ஒலித்தது. சைடு டிஷ்ஷும், வறுத்த அரிசியும் அதான் ப்ரைடு ரைஸும் சொல்லியிருந்தேன் ஸோமோட்டோ-வில். அவனாகத்தான் இருக்கவேண்டும். கதவைத்திறந்தேன். சிலீர் என்று பனிப்புயல் என்னை தாக்கியது. அங்கே மெர்லின் நின்று கொண்டிருந்தாள். “இவள் ஏன் இங்கு […]

Continue Reading »

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது…

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது…

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட சொல், ‘பெகாசஸ்’. 2012 ஆம் ஆண்டு  சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கான அலங்கார வளைவு  உருவாக்கப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சியினர் அந்த வளைவு இரட்டை இலைபோல உள்ளது என்று ஆட்சேபிக்க, அப்போதைய அதிமுக அரசு, அது பறக்கும் குதிரையான ‘பெகாசஸின்’ இறக்கைகள் என்று ‘விளக்கம்’ தந்தபோது கேட்ட சொல். அதற்கு பின் அந்தச் சொல்லைக் கேட்க / உச்சரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. ஆனால் இப்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகமெங்கும் உச்சரிக்கப்படும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad