இலக்கியம்
2021 உழவர் சந்தை

மீண்டும் கோடைக்கால உழவர் சந்தை மினசோட்டாவில் தொடங்கிவிட்டது. உள்ளூரில் விளைந்த காய்கறிகள், பழங்கள், செடிகள் வாங்க பல நகரங்களிலும் இச்சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. இதோ உங்கள் அருகாமையில் உள்ள உள்ளூர் விவசாயச் சந்தைகள் கூடுமிடம், நாள், நேரம் குறித்த பட்டியல். நகரம் நாள் நேரம் இடம் Bloomington சனி 8-1 Bloomington Civic Center Burnsville வியாழன் 11:30-4:30 Mary, Mother of the Church/3333 Cliff Rd Chanhassen சனி 9-1 City Center Park Hopkins […]
கதை சொல்லும் ஓவியங்கள்

© Copyright 2021 https://wooarts.com/elayaraja-swaminathan/ இளையராஜா சுவாமிநாதன், இந்தியாவில் யதார்த்த பாணி உருவப் பட ஓவியங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். ஓவியங்களின் உணர்வுகளை ஓளிகீற்றுகளால் வெளிக் கொணர்ந்து உயிரூட்டியவர்; தமிழ்நாட்டு கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இவரது ஓவியங்களைப் பார்ப்பவர்கள் இது புகைப்படமா, ஓவியமா எனக் குழம்பும் வண்ணம் மிகத் தத்ரூபமான படைப்புகளை வழங்கியவர் – உலகரங்கில் பாராட்டுகளைப் பெற்று தனக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட இந்தக் கலைஞன் தனது 43 […]
இரண்டாம் அலையோடு ஓயட்டும்

இந்தியாவில் தலைவிரித்தாடிய கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்றே குறைந்துள்ளதை, அண்மைக்காலப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மே மாதம் எட்டாம் நாள் 414,188 என்றிருந்த தொற்று பாதிக்கபட்டவர் எண்ணிக்கை படிப்படியாகச் சரியத் துவங்கி, ஜூன் முதல் தேதி 127,510 என்று பதிவாகியிருப்பது சிறிதளவு ஆறுதல் அளிக்கிறது. தடுப்பூசி போடும் வேகமும் சற்றே அதிகரித்திருப்பதைக் காணமுடிகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைவதால், தொற்று பரவுதலும் குறையும் வாய்ப்பு அதிகமிருக்கும் என நம்பலாம். தற்போது தொற்றின் சீற்றம் குறைந்தாலும், முதல் அலையின் போதிருந்த […]
இணைய மரத்தடிக் கூட்டங்கள்

கிராமப்புறங்களில் இரண்டு மூன்று பேர் சேர்ந்தால் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவார்கள். அந்தப் பக்கம் போவோரும் அந்த மரத்தடிக் கச்சேரியில் நின்று கொஞ்சம் நேரம் அந்தப் பேச்சைக் கேட்டுவிட்டு, பேசி விட்டுச் செல்வார்கள். அது போலவே, நகர்புறங்களில் டீக்கடையைச் சொல்லலாம். உள்ளூர் அரசியல் மற்றும் இன்ன பிற வம்படி பேச்சுகளுக்கு டீக்கடை பெஞ்ச், சலூன், பேக்கரி, தெருமுனை என இது போன்ற இடங்கள் பல உள்ளன. இது போல, பிரச்சார, பிரசங்க கூட்டங்களுக்குத் தெருவில் மேடையைப் […]
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 1

பின்னணி தகவல் : டி.எஸ்.பி ராஜீவ், அவரது சைடு கிக் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் டிரைவர் மாணிக்கம் சென்னை நகரத்தில் நடக்கும் குழப்பமான குற்ற வழக்குகளைத் தனது கூர்மையான துப்பறியும் திறன் மூலம் தீர்ப்பதில் வல்லவர்கள். அவர்களால் தீர்க்கப்பட்ட பிற குற்ற வழக்குகளை படிக்க இந்த பனிப்பூக்கள் இணைப்பைச் சொடுக்கவும். ***** திருவான்மியூரில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராஜீவின் குடியிருப்பில் டிரைவர் மாணிக்கம் போலீஸ் ஜீப்பை நிறுத்தினான். அந்தச் சத்தத்தைக் கேட்டு உள்ளிருந்து வெளியே […]
திருமதி. ‘ஆகாச’ வேணி

2021 சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை “ஒரே தலையிடியா இருக்கே, புரூ காபி குடிச்சா தான் ஆகும்” என்றபடி துயில் கலைந்து எழுந்தாள் வேணி சுற்றும் முற்றும் பார்த்து குழம்பியவள், “நா எங்கிருக்கேன்? இது எந்தூரு? எங்கிருக்கீங்க மாமா?” என பதறியபடி எழுந்தமர்ந்தாள் “பெண்ணே” என்றபடி ஒரு வெண்தாடி உருவம் அருகே வர .. “யாருங்க நீங்க? வள்ளுவர் தாத்தா மாதிரி இருக்கீங்க” “நான் வள்ளுவனல்ல பெண்ணே, வல்லவன்” “அது சிம்பு நடிச்ச படமாச்சே” “யாரவன் சிம்பு?” “டி.ஆர் புள்ள” “டி.ஆரா?” “என்னங் […]
முதிர்காதல்

புத்தாடை அணிந்து புறப்பட்டுச் செல்கையில் புழுதி பறந்திடும் புல்லட்டின் வேகத்தால்! புரவியில் விரைந்திடும் புருஷோத்தமன் என புன்னகை மத்தியில் புருஷனாய் வரித்திட்டாள்! நடைபாதை போகையிலே நளினமாய்த் தொடர்ந்திடுவான்! நகைத்துத் திரும்பிடிலோ நயமாய் மறைந்திடுவான்! நமுட்டுச் சிரிப்புடனே நயனமிவன் மீதிருக்க நம்பிக்கை ஒளிதந்து நட்பாய் இதழ்குவித்தான்!! காலையில் எழுகையில் காளையின் நினைப்பு! கால்வண்டிப் பயணத்தில் காதலனைத் தேடல்! காலம் முழுக்கக் காதலாய் வாழ்வோமென காரிகை அவளும் காந்தர்வமாய் மணந்திட்டாள்! வழிபாட்டுத் தலங்களிலும் வழிபடும் வேளையிலும் […]
பசைமனிதன்

“நீ புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்” அப்படி’ன்னு சொன்னா அது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. இப்படித் தான் 1968 ஆம் ஆண்டு மினசோட்டாவின் 3M நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்பென்சர் சில்வர் (Spencer Silver) என்ற ஆராய்ச்சியாளர், விமானப் பாகங்களில் பயன்படுத்துவதற்கான, நன்றாக வலிமையாக ஒட்டும் தன்மையில் ஒரு பசையைக் கண்டுபிடிக்க முயற்சிக்க, அந்த நோக்கத்தை அடைய முடியாமல், மிகவும் இலேசாக ஒட்டும் பசையைத் தான் அவரால் உருவாக்க முடிந்தது. இந்த மிதமான பசையை ‘தேவையில்லாத ஆணி’ என்று […]
நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா….

2021ஆம் ஆண்டு பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை ‘அய்யயோ என்னால முடியல. Zumba வும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’ என்று அடுத்த வகுப்புக்கெல்லாம் போகாம இருக்கவில்லை. தொடர்ந்து போனேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த ஒரு மணி நேரம் வியர்வை சொட்டச் சொட்ட உடற்பயிற்சி மாதிரி அதை செய்திட்டு வந்தது மனசுக்கு உற்சாகமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருந்தது. எனவே நாம ஏதாவது ஒன்னு புதுசா செய்யனும்னு ஆசைபட்டாலோ அல்லது ஏதாவது வகுப்புல சேரணும்னு ஆசைபட்டாலோ […]
ஓடிடியின் ஓட்டம்

பெருந்தொற்றுக் காலத்தில் லாக்டவுன் என்பது பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. முக்கியப் பொழுதுபோக்கு துறையான திரையரங்கு வணிகத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அதே சமயம், ஓடிடி என்ற பொழுதுபோக்கு துறைக்கு இது வசந்த காலமாகிவிட்டது. பல ஆண்டுகளாக இத்துறை இயங்கி வந்தாலும், கோவிட்-19 இத்துறையின் முன்னேற்றத்தைத் தூண்டி விட்டுக் கேம் சேஞ்சராக உதவியது. தெருக்கூத்து, நாடகம், திரைப்படம், தொலைகாட்சி, சிடி, டிவிடி என்று கலை படைப்புகள் நம்மை வந்து சேரும் முறைகள் காலத்துடன் மாறிக் கொண்டே தான் […]