இலக்கியம்
பெரிய தொழில்நுட்ப ஸ்தாபனங்களின் அரசியல் செலவீடு
கடந்த ஜூலை 2020 இல், நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தரப்பு அமெரிக்க காங்கிரஸ் முன் சான்றளித்த அவநம்பிக்கை குற்றச்சாட்டுகளைத் தொலைக்காட்சியில் கண்டோம். அதே நேரத்தில் பின்னணியில் அவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தணிக்க, தங்கள் மசோதாக்களை நிறைவேற்றும் சலுகைகளைப் பெற பெரும் தொகையைச் செலவிடுவதையும் காணலாம். அமெரிக்க அரசியலில் தமது மசோதாக்களுக்கு வர்த்தக அமைப்புகள் பணம் செலவழிப்பது வழக்கம். ஆனால் நேரடியாகப் பணம் கொடுத்து சலுகை பெறுவது சட்டப்படி குற்றம் என்றெல்லாம் பல நுணுக்கமான, […]
பூர்விக வாசிகள் சுங்கான் தயாரிப்பு
பைப் ஸ்டோன் மினசோட்டா மாநிலத்தில் இருவகையான கருப்பு களிமண் பாறைகள் உள்ளன. மினசோட்டா மற்றும் தென் டக்கோடா மாநிலங்களில் வாழும் சூ (Sioux) இனமக்கள் விஷேட சடங்குகளில் புகையிலை புகைத்துக் கொள்ளும் சுங்கான் தயாரிப்பினைப் பார்ப்போம். பாறையில் இருந்து சுங்கான் செய்துகொள்ளும் முறை: சுங்கான்கள் உருவாக்குவதற்கு பல முறைகள் இருப்பினும் 1800களில் இது சற்று தெளிவாக்கபட்டது. இந்த பாறைக்கல்லை உடைத்து […]
அமெரிக்காவில் 140 மில்லியன் மக்கள் ஏழ்மை பிடியில்
என்ன இவ்வளவு பெரியதா, அது எப்படி? அமெரிக்க நாட்டின் மொத்த சனத்தொகையே 328.24 மில்லியன் தானே, அமெரிக்கா செல்வந்த நாடாச்சே, அதில் எப்படி சுமார் பாதி மக்கள் ஏழைகள் என்று நீங்கள் வினவலாம். இந்நாட்டில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் தமது கல்வி, வேலைத்துறை காரணமாக. அமெரிக்க வறுமைக்கோட்டிற்கு மிகவும் அப்பால், நல்ல வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளனர். ஆயினும் அடுத்த தலைமுறையில், எமது பிள்ளைகளின் வாழ்க்கை அடுத்த 20-30-50 வருடங்களில் எவ்வாறு அமையும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவுள்ளது. […]
உள்ளூர் வாராந்த மஞ்சரியான ‘சிட்டி பேஜஸ்’ நிரந்தர மூடுதல்
மினசோட்டா மாநிலத்தில் மாற்று ஊடகப் (Alternate media) பத்திரிகையாக Citi pages கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதன் தற்போதைய உரிமையாளரான, மினியாபொலிஸ் நகர ‘ஸ்டார் ட்ரிப்யூன்’ ( Star Tribune Media Co), . கடந்த புதன் கிழமை, அக்டோபர் 28, 2020 யன்று, இந்தப் பத்திரிகையின் சகல் தொழிற்பாடுகளும் நிரந்திரமாக மூடப்படுவதாக திடீரென அறிவித்தது. சிட்டி பேஜஸின் கடைசி வெளியீடு அக்டோபர் 2020 கடைசி வாரமே. இந்தப் பத்திரிகை வழக்கமான செய்தித்தாள்களுக்கு மாறாக […]
அமெரிக்கத் தபால் சேவையின் அண்மைக்கால குறைபாடுகள்
அன்றாட தகவல் பரிமாற்றங்கள், வர்த்தகப் பற்றுச் சீட்டுகள், மருந்துகள், வயோதிகர் இளைப்பாறு காசோலைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களைச் சாதாரண மக்களுக்கு எதிர்பார்த்த நாட்களில் தரும் தாபனம் அமெரிக்கத் தபால் சேவை. தனி நிறுவனமாக இயங்கினாலும் இது ஒரு மக்கள் நலனிற்கான அரச சேவை. ஆயினும் அமெரிக்கத் தபால் சேவை நலன் கண்காணிப்புக் குழுமியம் (USPS Office of Inspector General), புதிய தபால் சேவை தலைமை அதிகாரி திரு. லூவிஸ் டிஜோய் அவர்களின் நியமனத்துக்குப் பின்னர் அமெரிக்கத் […]
2020 அதிபர் தேர்தல் முடிவுகள்
அதிபர் தேர்தலுக்கு ஒரே நாள் மட்டுமேயுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகும் நிலை ஊகிக்கப்படுகிறது. பொதுவாக அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தேர்தல் நாளன்றே, நள்ளிரவுக்குள் தெரிந்துவிடும். விதிவிலக்காக, 2000ஆம்ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் பல வழக்குகள், வாக்கு மறு எண்ணிக்கை என்று இழுபறியானது. அதற்குமுக்கிய காரணம் அப்போதைய வேட்பாளர்களான ஜார்ஜ் புஷ் மற்றும் அல் கோர் இருவருக்குமிடையே நிலவிய மிகக்குறுகலான வாக்கு வித்தியாசங்கள். வாக்கு எண்ணிக்கைப்படி அல் கோர் வெற்றி பெற்றிருந்தாலும், பிரதிநிதிகளின் வாக்குஇழுபறியை உண்டாக்கியது. […]
கூகுளுக்கு எதிரான நம்பிக்கையின்மை சட்டத்தாக்குதல்
அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை கூகுள் தாபனமானது பாரிய பல நம்பிக்கையற்ற குயுக்திகளை உபயோகித்து மின்வலய தேடுதல்,விளம்பரம் போன்றவற்றில் மற்றைய போட்டி வர்த்தகங்களை மடக்கி கட்டுப்படுத்தி அதே சமயம் நுகர்வோருக்கும் பாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டி, இது தொடர்பான சட்ட நடவடிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் உதவி அட்டர்னி ஜெனரல் திரு. ஜெஃப் ரோசன் கூறுகையில், கூகிள் ஈ-காமர்ஸின் மிகப்பெரிய நுகர்வோர் தேடல் அடிப்படையிலான விளம்பரம் மற்றும் ஈ-காமர்ஸின் நுழைவாயிலாக மாறி வருகிறது. இந்தக் […]
ஆங்கிள் மினசோட்டா மக்கள் நாட்டிலிருந்து துண்டிப்பு
மினசோட்டா மாநிலத்தின் வடக்கு உச்சியில் ‘நார்த்வெஸ்ட் ஆங்கி’ (Northwest Angle) எனப்படும் சிற்றூர் உள்ளது. அமெரிக்காவின் எல்லைக்குட்பட்டதாக இருந்தாலும் கனேடிய எல்லைக்குள் புகுந்து மட்டுமே இந்த அமெரிக்கப் பிரதேசத்திற்குள் போக முடியும். ஆங்கிள் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஊரில் 120 பேர் வசிக்கின்றனர். இது அமெரிக்காவின் மிகத் தொலைவான பகுதிகளில் ஒன்றாகும். கொரொனா தொற்று நோயின் பரவல் காரணமாக கனேடிய, அமெரிக்க எல்லைகள் பூட்டப்பட்டு இந்த ஊர் தற்போது தனித்து விடப்பட்டு, சுயமாக இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. […]
கேத்தியோ ஸ்டேட் பார்க் (Kathio State Park)
மினசோட்டாவில் பத்தாயிரம் ஏரிகள் இருப்பது தெரியும். ஆனால், அதில் ஒரு ஏரி ஆயிரம் ஏரிகளுக்குச் சமமாக இருப்பது தெரியுமா? மில் லாக்ஸ் (Mille Lacs) ஏரிதான் அது. ஆயிரம் ஏரிகள் என்பதைத் தான் மில் லாக்ஸ் என்கிறார்கள். ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, மினியாபொலிஸ் – செயிண்ட் பால் நகர்பகுதியில் இருந்து சுமார் 100மைல் தொலைவில் உள்ளது. மினசோட்டாவில் நிலப்பரப்பிற்குள் அமைந்திருக்கும் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும் இது. கரையில் […]