இலக்கியம்
வாபி-சாபி அழகியல் மூலம் சூழலை உணருதல்

நவீன உலகின் பொருள், பண்டங்கள் யாதும் பூரணத் திருத்தம் அடைந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் பேராவல் காணப்படும் தருணத்தில் பாலைவனச் சோலை போன்று வரும் சிந்தனையே யப்பானிய வாபி-சாபி (侘寂) . இது இயல்பாக காணப்பெறும் குறியீடுகளை அவதானித்து அவற்றிலும் உட்பொருள் அறிந்து, அனுசரித்து அவற்றின் தனித்துவமான அழகினை அனுபவித்தல் எனலாம். வாசகர்க்கு ஒரு சிறிய வேண்டுகோள். சமூகத்தில் சிலர், குறிப்பாக யப்பான் நாடு போய் வந்த மேல் நாட்டவர் தவறாக வாபி-சாபி என்றால் அழகற்றதில் […]
கோவிட் சம்மர்

ஒவ்வொரு வருடமும் சம்மர் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த வருடம் ‘ஒரு மாதிரி’யாகப் போய்விட்டது. அமெரிக்காவில் சம்மர் வருவதற்கு முன்பு, கோவிட்-19 வந்துவிட்டது. ஜனவரி, பிப்ரவரியில் கோவிட்-19 என்றால் அது எங்கோ சீனா பக்கம், கொரியா பக்கம் நடக்கும் விஷயம் என்பது போல் அமெரிக்காவில் இருந்தார்கள். பின்பு நோய்த்தொற்றின் வீரியம் புரிந்து மெதுவாக மார்ச்சில் லாக்டவுன் என்பது போல் ஒன்றை அறிவிக்கும் போது, அமெரிக்கா கொரோனா புள்ளியியல் வரைபடத்தில் வீறுநடை போட்டு முன்னணிக்குச் சென்றுவிட்டிருந்தது. பள்ளிகளுக்கு வசந்தகால […]
அச்சமில்லை! அமுங்குதலில்லை!

பாரதி நினைவு நூற்றாண்டு தொடங்கியிருக்கும் இந்த வேளையில், என் மனக்கண்ணில் தெரியும் பாரதிக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது. இன்று நம் அனைவரின் நினைவுகளிலும் பாரதி இருக்கிறான். என் நெஞ்சுக்குள்ளும் இருக்கிறான். கனல் பறக்கும் கண்களோடு, கட்டு மீசையோடு. காட்சிப் பிழையல்ல. நிஜம். முதலில் அவனுக்கு ஒரு பகீரங்க மன்னிப்புக் கடிதம்: பாரதி, பாரதத்தின் தீ நீ! தேசபக்தி வளர்த்த தென்னவன்! ஜாதி இருள் அகற்றிய ஜோதி! […]
உண்மைக்கும் அபிப்பிரயாத்திற்கும் இடையுள்ள வேறுபாடுகள்

மின்வலயத்தகவல் நொடிக்கு நொடி பாய்ந்து வரும் இந்தத் தரணியில் தகவலைப் பகுத்தறியும் ஆற்றலுக்கு சவாலும் அதிகரித்தவாறேயுள்ளது. பகிரப்படும் தகவல்களில் எது உண்மை, எது வெறும் அபிப்ராயம் / கருத்து என்று அறிந்து, அதற்கேற்ப நாம் கிரகித்துத் தொழிற்படுவது அவசியமாகின்றது. எது உண்மை, எது அப்பிப்பிராயம், எது செய்தி, எது வதந்தி என்று தெரிந்து தகவலைக் கிரகிப்பது தற்போது அத்தியாவசியமாகிறது. மின்னியல் தகவலே வாழ்வு என்று அமையும் இந்தத் தருணத்தில் வாழ்வில் ஏமாறாமல் இருக்கவும், ஊடகப் பொதுநலனை பேணவும் […]
மீண்டு வாராய்!

இறந்து விட்டான் என்றிருந்தோம்.. இனிய கம்பன் – இறந்தே விட்டானென்றிருந்தோம்.. இல்லையெனச் சொல்வதற்கும் இகம் மகிழச் செய்வதற்கும் இன்னுமொரு முறை பிறந்து வந்தான்!!! சிலம்பதனை இசைத்து விட்டுச் சிதைநோக்கிப் போனான் இளங்கோ – எனச் சிதைந்துபோன தமிழ் மனங்கள் சிலிர்ப்புறவே மீண்டு வந்தான்!! ஔவையவள் பெண்ணுருவாய் அவதரித்துச் சென்று, பின்னர் ஆசையாய் ஆண் பிறப்பெடுத்து அவனியிலே பிறிதொருமுறை பிரவேசித்தாள்!! பறந்து போனான், நமையெல்லாம் மறந்து போனான் பாரதியெனப் பாரெலாம் புலம்பிற்று.. பரலோகம் சென்ற அவன் பாதியிலே திரும்பி […]
குழந்தை பெறாத தாய்

“ஏன்டீ…நாசமாப்போனவளே…இங்க என்னோட ரூம்ல தண்ணி வைக்க கூடாது…தண்ணி இல்லாம நான் சாவனும்….அதானே உன் நெனப்பு…சீக்கிரமா தண்ணி கொண்டா டீ” என்று கத்திக் கொண்டிருந்தாள்….ரேவதியின் மாமியார். ரேவதிக்கும்…ராகேஷ்க்கும் கல்யாணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. திருமணமான புதிதிலே…இப்படி எல்லாம் இல்லை…மாமனார் மாமியார் இருவரும் பாசமாகத் தான் இருந்தனர். ஆண்டுகள் உருண்டு ஓட…ரேவதிக்கு குழந்தைப் பேறு கிடைக்காமல்…தவித்துக் கொண்டிருக்கும் வேளையில்…மாமனாரின் இறப்பும்…மகனுக்கு குழந்தை இல்லாமல் போனதற்கு காரணம் இவள் தான் என்ற கோபமும்… சேர்ந்து கொண்டதால் ….தன் வெறுப்புகளையும்…வருத்தங்களையும்..ரேவதியின் […]
செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது

கடந்த சில நாட்களாகவே செல்லத்தாயிப் பள்ளிக்கு வரவில்லை என்பது ஒரு வாரம் கழித்து அவளுடைய கணக்கு டீச்சர் மரியபுஷ்பம் சொல்லித்தான் செல்வராணிக்கே தெரிந்தது. அவளுடன் படிக்கும் யாருக்கும் அவள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கான காரணம் தெரிந்திருக்க வில்லை. “ஒருவேளை வயசுக்கு வந்தாலும் வந்துருப்பா டீச்சர். அதான் அவங்க வீட்டுல பள்ளீயூடத்துக்குப் போக வேணாமின்னு நிறுத்தியிருப்பாங்க….” என்றாள் செல்லத்தாயினுடனேயே எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் மரிக்கொழுந்து இலேசான குறுநகையுடன். அவள் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம் என்று செல்வராணிக்கும் […]
அவலங்கள்

உள்ளேயிருந்து குழந்தை வீறிட்டழுவது, வெளியே ஒரு பாறையில் அமர்ந்திருந்த சின்னசாமிக்குக் கேட்டது. மகள் வள்ளிக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அவள் வேலைக்குப் போகத் தொடங்கவில்லை. பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு உடல் தெம்பாக சிறிது காலமெடுக்கும்தான். ஆனால் அவளும் கொழுந்து பறிக்கப் போனால்தான் அந்த வீட்டில் புகை போலப் படிந்திருக்கும் பட்டினி கொஞ்சம் விலகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மழைக்காலத்தில் ஒரு நாள் திடீரென அம் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, தட்டுத்தட்டான மண் போர்வைகளுக்குக் […]
தாதுண் பறவை

அச்செய்தி அவளது காதினில் விழுகையில், நெஞ்சுரைக்கூட்டுக்குள் இடி இறங்குவதைப் போலிருந்தது. அவள் ஓடிச்சென்று அவளது அப்பனை எழுப்பினாள். அவரோ நிறைமது மயக்கத்தில், எழுப்பியக் கையைத் தட்டிவிட்டபடி, போர்வையை இன்னும் தலை வரைக்குமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவராக இருந்தார். பூங்குழலிக்குத் தெருவை எழுப்புவதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை. நடுநிசி நேரம். மச்ச இருட்டு. கூகை, சாத்தான் சொல்லும் செய்திக்கு ‘இம்’ போடுவதைப் போல முணங்கிக்கொண்டிருந்தது. அதைக் கேட்கயில், நிணநீர் உறைவதைப் போலிருந்தது. இந்தக் கூகையைப் பிடித்து […]