இலக்கியம்
அமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும்
கடந்த ஒரு தசாப்தத்திற்கு பொருளாதார வளர்வில் உச்சத்தில் அமெரிக்கா இருந்தது, 2018 கடைசி காலம் வரை. அமெரிக்காவின் பாரிய வருமானவரிக் குறைப்பினாலும், அரசின் செலவழிப்பினாலும் உள்ளூர் மற்றும் உலகச் சந்தைகளும் பயனடைந்தன. அன்று அமெரிக்கப் பொருளாதாரமே உலகின் பொருளாதாரத்தை உயர்த்த வரையறை செய்தது, இன்று அதே பொருளாதாரம் கொரோனாக் கொடுவினைகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பிழைகளைச் செய்து இன்று உலகப் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் அபாயத்திற்கும் வந்துள்ளது. இன்று பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து படிப்படியாக வெளி வந்த நாடுகள் பலவும் […]
புலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள்
(“புது உலகம் எமை நோக்கி” என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு) அறிமுகம் ஈழத்தில் 1980களில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பெரும்பாலானோர் மேற்கு ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு புலம் பெயர்ந்து சென்றவர்களில் கணிசமானோர் தங்களுடைய துன்பங்கள் மற்றும் அனுபவங்களை எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதற்குப் புலம்பெயர் நாட்டில் இருந்து வெளிவந்துள்ள சஞ்சிகைகள் களமமைத்துக் கொடுத்துள்ளன. அந்தவகையில் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகளில் புலம்பெயர்ந்து சென்றுள்ள பெண்களின் பிரச்சினைகள் […]
சுயநலம்
உதவி செய்வதே கடமையென்பான் உண்மையில் யாருக்கும் உதவமாட்டான் அதர்மம் செய்வது பாவமென்பான்– ஆனால் அதர்ம வழியில் சென்றிடுவான்! தாய் தந்தையே தன் கண் என்பான் தாய் என்றே கருத்திற் கொள்ளான் அன்பே வாழ்வின் உயர்வென்பான் அன்பின் இலக்கணமே அறிந்திடான்! பிறரில் குறைகாண்பது தவறென்பான்– ஆனால் பிறரில் குறையை மட்டுமே அவன் காண்பான் வாய்மை சொல்வதே உயர்வென்பான் வாய் திறந்து அதைச் சொல்லமாட்டான்! உத்தமனாய் வாழ்வதே உயர்வென்பான் உலகில் அதமனாய் வாழ்ந்திடுவான் கள்ளும் களவும் […]
புளூபெரிப் பழங்களின் மகிமை
தற்போது எமது நாட்டில் வருடத்தின் எந்த மாதத்திலும் புளூபெரி கிடைக்கக் கூடியதாக இருப்பினும், இந்தப் பழங்களுக்கும் பருவகாலங்கள் உண்டு. மினசோட்டா மற்றும் அண்டை மாநிலங்களில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் புளூபெரி அறுவடை காலமாகும். காட்டு புளூபெரிகள் (Wild Blueberries) வட மினசோட்டாவில் ஜூன் மாதத்திலிருந்து கிடைக்கும். இந்தச் செடிகள் ஏறத்தாழ அமெரிக்காவில் 38 மாநிலங்களில் வளர்கிறது. இதில் பத்து மாநிலங்களில் விவசாய உற்பத்திக்கென வளர்க்கப்பட்டு வருகிறது. கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, ஜார்ஜியா, இண்டியானா, மிஸிஸிப்பி, நியூ ஜெர்சி, வட […]
அந்திப் பூக்கள்
தாராபாய் முதியோர் இல்லத்திற்கு அந்த சிட்டியில் நல்ல பெயரும் புகழும் உள்ளது. இரண்டு முறை தன் சமுதாயத் தொண்டுகளுக்காக தேசிய விருது பெற்ற நிறுவனமும் கூட. பெரிய மாளிகை, நாலு பக்கமும் விசாலாயமாய் வளர்ந்த தென்னை , மா வேப்ப மரங்கள். பக்கத்தில் தாமரைகளுடன் ஓர் அழகிய குளம், அதைச் சுற்றி பூங்கா. அதில் நாற்காலிகள், பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. மரத்தோடு இணைந்த பூக்கொடிகள், அதில் அழகாய்ச் சத்தம் செய்து கொண்டுள்ள வண்ண வண்ணப் பறவைகள். சுமார் காலை […]
பானு டீச்சர்
பானு டீச்சர் – எல்லோரையும் தலை நிமிர்ந்து பார்க்கவைத்த ஒரு நபர். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் வகுத்தவர் என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்ணன் என எல்லோரும் சுலபமாக சொல்லிவிடுவார்கள். ஆனால் ஒருஆசிரியை எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை புதியதாக வகுத்துக்கொண்டு இருப்பவர் பானு டீச்சர் என்றுதான் அங்கு இருப்பவர்கள் சொல்வார்கள். ஒரு நடிகர் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் , என்ன அடை மொழி வைத்துக் கொண்டாலும் , பொது மக்கள் […]
மலேசியாவின் $100 பில்லியன் காட்டு நகரம்
சிங்கப்பூர் கரையோரம் சீனாவின் நிதியுதவியுடன் மும்முரமாகக் கட்டப்பட்டு வந்த அமெரிக்க $100 பில்லியன் பெறுமானம் வாய்ந்த காட்டு நகரம் (Forest City) எனப்படும் புதிய நகரம் கொரோனா தொற்று நோய்காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளது. இந்த நகரம் பிரதானமாக சீன விருப்புக்கேற்ப நான்கு தீவுகளை இணைத்து மலேசிய ஜோஹோர் மாநிலத்தில் அமைக்கப்பட்டது. புதிதாக அமைத்து வரப்படும் கட்டடங்களை சிங்கப்பூர் மற்றும் சீன முதலீட்டாளர்களுக்கு விற்பதில் எதிர்பார்த்தளவுக்கு வரவேற்பு கிடைக்காமல் ஆர்வம் குன்றியே காணப்படுகிறது. காட்டு நகர அல்லது காட்டுப்பட்டண உருவாக்கத்தில் […]
மன அழுத்தம் தவிர்
பணமும் புகழும் காரும் வீடும் எல்லாம் இருந்தும், பாதியில் போனாய் ஏன் நண்பா? தெரியாதா உனக்கு கடுகும் கூட கண்ணுக்கருகில் பாறை நிறைந்த மலையாய்த் தெரியும்! மலையும் கூட தூரப் பார்வையில் சிறிய கடுகாய் மாறித் தெரியும்! கவலை கூட நெருங்கிப் பார்க்க அணையா நெருப்பாய்ச் சுட்டுத்தீர்க்கும் அணையில் நிற்கும் நீரைப் போல திறக்க முடியா மடையைப் போல அழுத்திப் பார்க்குக்கும் நம் மனதைக் கூட! திறந்துவிட அணையும் தீரும் அழுதுவிட அழுத்தம் குறையும்! பழுது பட்ட […]
முனைவர்
“பழங்காநத்தம் ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்கிக்கங்க !” என்று நடத்துனர் அறிவித்ததும், வேகம் குறைந்து வந்து நின்ற அந்த அரசுப்பேருந்திலிருந்து நிவேதிதா வெகு ஜாக்கிரதையாகச் சாலையில் இறங்கிக்கொண்டாள். “அம்மா, நீங்க சொல்ற இடம் , ரெயில்வே கேட்டைத் தாண்டி போனா வரும்னு நினைக்கிறேன். விசாரிச்சுப் போயிக்கங்கம்மா !” என்றார் நடத்துனர். “ரொம்ப தேங்க்ஸ் சார்! ” என்றாள் நிவேதிதா. ‘இது தான் பழங்காநத்தத்துக்கு முந்தின ஸ்டாப்பிங். முதல்லயே கண்டக்டர் கிட்ட சொல்லி வெச்சது நல்லதாப்போச்சு’ என்று நினைத்துக்கொண்டாள். மதுரை வெயில் […]
மனக்குப்பை
பீரோவுக்கு அடில, கட்டிலுக்கு அடிலன்னு விட்டுப் பெருக்கணும்னு எத்தனை தடவை சொன்னாலும் தெரியறதில்ல….! தன் கணவரிடம் அந்தம்மாள் சொல்லியதே காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது சம்பங்கிக்கு. சாலையில் போய்க் கொண்டிருந்த லாரியின் பேரிரைச்சலை மீறி அந்தக்குரல் இவள் காதில் அசரீரியாய் ஒலித்தது. யதார்த்தமாய்ப் பேசிய பேச்சாய் அதை எப்படிக் கொள்வது? வழக்கத்திற்கு மாறாய் சற்றுச் சத்தமாகத்தானே அந்தக் குரல் ஒலித்தது. அருகில் நின்று பல் துலக்கிக் கொண்டிருந்த கணவரிடம் அப்படிச் சத்தமாய்ச் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? […]