இலக்கியம்
இனி ஒரு விதி செய்வோம்

“ஊழல்லில்லாத அரசாங்கம், பஞ்சத்தில் வாடாத மக்கள், பாரங்கள் வாட்டாத கல்வி, இருள் கவ்வாத சீரான மின்சாரம் என்று எத்தனையோ அடுக்கடுக்கான சாதனைகள் உங்களோட நான்குமுறை ஆட்சி காலத்திலேயும் நடந்திருக்கிறது. டூ தௌஸண்ட் டுவென்டியில் நிறைய முரண்பாடான சிக்கல்களையும் கசக்கி பிழிய பட்ட மக்களுக்கு கிடைச்ச விடிவெள்ளியாக உங்க ஆட்சி அமைந்திருக்கிறது. எப்படி சார்? தெளிந்த நீரோடை போல வாழ்க்கையை மக்களுக்கு வழங்க சர்த்தியமாக்க முடிந்தது?” “எங்களை பாதித்த வாழ்க்கையை, தப்பான வழிகள்ல யோசித்து, திருப்பி சம்பந்தப்பட்டவங்களுக்கு […]
சுமை தாங்கி

“வாங்க,வாங்க”என்று பாசத்துடன் வரவேற்ற பெற்றோரைப் பார்த்து நெகிழ்ந்து போனாள் ராதிகா .தன் இரு பிள்ளைகளையும் காரிலிருந்து இறக்கி வாடகையைக் கொடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.”எல்லோரும் சௌக்யமா? மாப்பிள்ளை வரவில்லையா? எப்படி இருக்கிறார்?”என்று கேட்ட அப்பாவின் அன்பான கேள்விகளின் பதிலுக்கு ‘எல்லோரும் நலமே’ என்று தலையசைத்தாள் நந்திதா. “வா! காபிகுடி, டிபன் சாப்பிடு, களைத்து போய் வந்திருப்பே, வெந்நீரில் குளிச்சுட்டு வாங்க’ என்று இரு பேரன்களையும் கட்டியணைத்தபடி கூறினாள் அம்மா. இந்த வீட்டில்தான் எத்தனை மகிழ்ச்சி அலைகள்,.இதிலிருந்து ஒரு துளியாவது […]
அவள் குழந்தை

விமானம் கிளம்பியதில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த பெண் ஏதோ பதட்டத்திலேயே இருக்கிறாள். உள்ளே வந்து இருக்கையில் அமரும் போதே பார்த்தேன். கண்களில், உடலில் ஒரு பதட்டம். மேலே பெட்டியை வைக்கும் போது கைகளில் ஒரு சின்ன நடுக்கம். நேராக உட்காராமல் சற்று சரிந்தே உட்கார்ந்தாள். சிறிது நேரம் வலப்புறம் திரும்பி மடிந்து அமர்ந்தாள். பொறுக்காமல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே மீண்டும் இடப் பக்கம் மடிந்து அமர்ந்து கண்களை மூடினாள். ஒரு ஐந்து நிமிடங்கள் […]
அம்மாவின் அழுகை

அம்மாவின் அழுகுரல் எந்த மகனின், மகளின் காதுக்கும் எட்டவில்லை ; எட்டினாலும் எந்த மகனுக்கும் , மகளுக்கம் மெய்யறிவு இல்லாததனால் அம்மாவின் அழுகுரலுக்கு செவிமடுக்கும் திறன் இல்லாதவர்களாக பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகளின் காது செவிடாக இருந்து , காது கேட்காமல் இருந்திருந்தாலாவது தாயின் மனம் அமைதி பெற்றிருக்கும் ; செவிட்டுப் பிள்ளைகளுக்குக் காது கேட்கவில்லை …….. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற இரக்க உணர்வாவது தாயிற்கு மேலிட்டிருக்கும். சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் […]
தூரிகை

காரிகை ஒருத்தி கடைவிழி காட்டிக் காதலைச் சொன்னாள்! பேரிகை ஒலியெனப் பெரிதாய் மனத்துள் பூகம்பம் கிளம்பிற்று !! தூரிகை கொண்டு அவளெழில் செதுக்கக் கோரியது காதலுள்ளம் ! காரிகை அவளின் களைமுகம் நினைந்து கிறுக்கலைத் தொடங்கினேன்! பேரிகை முழக்கம் பூங்கொத்தாய் மலர்ந்திட பாவையழகு அசைபோட்டேன்!! தூரிகை எடுத்துத் துளிர்முகம் வடிக்க தூரத்து நிலவானாளவள் !!! காரிகை அவளின் களங்கமற்ற சிரிப்பு கவனமெங்கும் நிறைத்திட! பேரிகை இறைச்சலின்றி பெண்ணவள் […]
அமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும்

கடந்த ஒரு தசாப்தத்திற்கு பொருளாதார வளர்வில் உச்சத்தில் அமெரிக்கா இருந்தது, 2018 கடைசி காலம் வரை. அமெரிக்காவின் பாரிய வருமானவரிக் குறைப்பினாலும், அரசின் செலவழிப்பினாலும் உள்ளூர் மற்றும் உலகச் சந்தைகளும் பயனடைந்தன. அன்று அமெரிக்கப் பொருளாதாரமே உலகின் பொருளாதாரத்தை உயர்த்த வரையறை செய்தது, இன்று அதே பொருளாதாரம் கொரோனாக் கொடுவினைகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பிழைகளைச் செய்து இன்று உலகப் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் அபாயத்திற்கும் வந்துள்ளது. இன்று பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து படிப்படியாக வெளி வந்த நாடுகள் பலவும் […]
புலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள்

(“புது உலகம் எமை நோக்கி” என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு) அறிமுகம் ஈழத்தில் 1980களில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பெரும்பாலானோர் மேற்கு ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு புலம் பெயர்ந்து சென்றவர்களில் கணிசமானோர் தங்களுடைய துன்பங்கள் மற்றும் அனுபவங்களை எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதற்குப் புலம்பெயர் நாட்டில் இருந்து வெளிவந்துள்ள சஞ்சிகைகள் களமமைத்துக் கொடுத்துள்ளன. அந்தவகையில் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகளில் புலம்பெயர்ந்து சென்றுள்ள பெண்களின் பிரச்சினைகள் […]
சுயநலம்

உதவி செய்வதே கடமையென்பான் உண்மையில் யாருக்கும் உதவமாட்டான் அதர்மம் செய்வது பாவமென்பான்– ஆனால் அதர்ம வழியில் சென்றிடுவான்! தாய் தந்தையே தன் கண் என்பான் தாய் என்றே கருத்திற் கொள்ளான் அன்பே வாழ்வின் உயர்வென்பான் அன்பின் இலக்கணமே அறிந்திடான்! பிறரில் குறைகாண்பது தவறென்பான்– ஆனால் பிறரில் குறையை மட்டுமே அவன் காண்பான் வாய்மை சொல்வதே உயர்வென்பான் வாய் திறந்து அதைச் சொல்லமாட்டான்! உத்தமனாய் வாழ்வதே உயர்வென்பான் உலகில் அதமனாய் வாழ்ந்திடுவான் கள்ளும் களவும் […]
புளூபெரிப் பழங்களின் மகிமை

தற்போது எமது நாட்டில் வருடத்தின் எந்த மாதத்திலும் புளூபெரி கிடைக்கக் கூடியதாக இருப்பினும், இந்தப் பழங்களுக்கும் பருவகாலங்கள் உண்டு. மினசோட்டா மற்றும் அண்டை மாநிலங்களில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் புளூபெரி அறுவடை காலமாகும். காட்டு புளூபெரிகள் (Wild Blueberries) வட மினசோட்டாவில் ஜூன் மாதத்திலிருந்து கிடைக்கும். இந்தச் செடிகள் ஏறத்தாழ அமெரிக்காவில் 38 மாநிலங்களில் வளர்கிறது. இதில் பத்து மாநிலங்களில் விவசாய உற்பத்திக்கென வளர்க்கப்பட்டு வருகிறது. கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, ஜார்ஜியா, இண்டியானா, மிஸிஸிப்பி, நியூ ஜெர்சி, வட […]