\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இலக்கியம்

எது?

எது?

அன்பேஇல்லாததால் ஆனந்தமேஇல்லாமற்போனது! இன்பமேஇல்லாததால் ஈகையேஇல்லாமற்போனது! உழைப்பேஇல்லாததால் ஊக்கமேஇல்லாமற்போனது! எழுச்சியேஇல்லாததால் ஏற்றமேஇல்லாமற்போனது! ஐக்கியமேஇல்லாததால் ஒற்றுமையேஇல்லாமற்போனது! ஓதுவதேஇல்லாததால் ஒளடதமேஇல்லாமற்போனது! அஃதேஇன்றையவாழ்வானது!!!   –      முனைவர்சு. சத்தியா

Continue Reading »

இராசி பலன்

இராசி பலன்

இராமுவுக்கு ஒரு பெருத்த சந்தேகம்… தனக்குள்ளேயே பேசிக்கிட்டான்… தினமும் காலங்காத்தால டிவியில வர்ற இராசிபலன்கள்ல அப்படி என்னதான் இருக்குமோ தெரியல… ஏன், அம்மா அத மட்டும் மறக்காம பாக்கணும்? நான் பொதுவா இந்த மாதிரி ராசி பலன்கள் பத்தி கவலைப்படறதில்ல… ஆனா என் ராசி வரும்போது மட்டும் கொஞ்சம் கவனமா கேக்க முயற்சி பண்ணுவேன்… ஆனா 12ராசிகளையும் விடாம பாக்கறாளே…எதுக்குன்னு பல தடவை யோசிப்பேன்…. அதேபோல கோவிலுக்குப் போனா அர்ச்சனைத் தட்டு வாங்கி கொறஞ்சது ஒரு 10 […]

Continue Reading »

என் புன்னகைக்குப் பின்னால்

என் புன்னகைக்குப் பின்னால்

என் புன்னகைக்குப் பின்னால்  பார்க்கவும் முடியாமல் தவிர்க்கவும்  முடியாமல் சில வடுக்கள்…… காயங்கள் காய்ந்த பின்பும் முத்திரைகளாய் !   என் புன்னகைக்குப் பின்னால்  கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சில பதில்கள்…. கேள்விகள் மட்டும் விஷக் கணைகளாய் !   என் புன்னகைக்குப் பின்னால்  ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சில வார்த்தைகள் …… குத்திக்கிழிக்கும் தொடர் அம்புகளாய்!   என் புன்னகைக்குப் பின்னால் இறக்கவும் முடியாமல் சுமக்கவும் முடியாமல் சில சுமைகள்…. அழுத்தம் கூட்டும் […]

Continue Reading »

கடவுளைக் காண்பீர்!

கடவுளைக் காண்பீர்!

பொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை  ஆண்டோரையும் கண்டீர்!  பூவையர் மனம்  வென்றோரைக் கண்டீரோ?  மங்கையரின்றி ஒரு  மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில்?    அன்பைப் பொழியும் தாயாக,  காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும்  உற்ற சகோதரியாக,  தாயோ தந்தையோ மூப்படைந்ததும்  மடிதாங்கும் சேயாக …  பெண்ணைக் கண்டோர்  உண்டிங்கு!    ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக  மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும்  […]

Continue Reading »

தல வருஷப் பொறப்புங்கோ!

தல வருஷப் பொறப்புங்கோ!

அது என்ன தல வருஷப் பொறப்புன்னு கேக்கறவங்களுக்கு – கல்யாணத்திற்கு அப்புறம் வரும் முதல் வருஷப் பிறப்பைத் தல வருஷப் பொறப்புன்னு சொல்றது நம்ம பக்கத்திலே வழக்கம், தலை தீபாவளி மாதிரி தல வருஷப் பிறப்பு. எங்க திருமணம் நவம்பரில் நடந்திருந்தாலும் எனக்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்து நாங்கள் சென்னையில குடித்தனம் வைக்க வந்தது கிட்டதட்ட ஃபிப்ரவரி போல் ஆகி விட்டது. (ஏனென்றால் என் காதல் கணவர் முதலிலேயே மாற்றல் வாங்கிண்டு சென்னை வந்துவிட்டார்ன்னு என் டைபிங்க் […]

Continue Reading »

அன்னையர்க்கு அர்ப்பணம்

அன்னையர்க்கு அர்ப்பணம்

கையினிலே கல்லொன்று கனத்திட்டால் களைந்திடுவோம் தோள்களிலே தொங்கியதை தேவையென்றால் தவிர்த்திடுவோம் முதுகில்சிறு மூட்டையென்றால் முழுவதுமாய் மறுத்திடுவோம்  அவ்வளவேன், அரைக்கிலோ அரிசிதூக்க அழுதே அலறிடுவோம்!!   மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள்!!!   உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக உயிரும் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது!!   சிசுவது சிரிப்பதற்கும் சிரந்தூக்கிச் […]

Continue Reading »

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை…

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை…

வெள்ளைத் தொப்பியணிந்து வியர்வையால் ஆடையெல்லாம் நிறம்மாறி அதிகரித்த வெயிலில் துவிச்சக்கரவண்டியை தனது சக்திக்கும்மீறி செலுத்தினான் ராசன். ”என்ன இது சைக்கிள் இண்டைக்கு ஓடுதில்ல பதினொரு மணிக்குள்ள மில்வோட்டுக்குப் போகலெண்ணா பாலும் திரண்டுறும்”  என நினைத்துக்கொண்டு சைக்கிளின் வேகத்தை அதிகரித்தான். ஒவ்வொரு நாளும் பத்து மணிக்கெல்லாம் பெருமாவெளிக்கு வந்து குமரகுருவின் தேநீர்க் கடையில் தேநீரும் வடையும் உண்ணுவது ராசனின் வழக்கமான செயலாகும்.  ஆனால் அன்றைய தினம் உடலின் களைப்பு உற்சாகத்தைக் குறைக்க நேரத்திற்கு அவ்விடம் செல்ல முடியவில்லை. பதினொரு […]

Continue Reading »

இப்போது வேண்டுவதெல்லாம்

இப்போது வேண்டுவதெல்லாம்

பனி விலகி வசந்த காலம் வந்தது   தொட்டுவிடும் தூரத்தில்   கோடை எட்டிப் பார்க்கிறது!   காட்டாற்றின் கரையதனில்  கதையளந்த காலம் போய் கையறு நிலையில்மனிதர்கள் நாம்   சுவரில் ஒட்டிய பல்லிகளாய் – இன்னும் மடித்துப் போடப்பட்ட காகிதத் தாள்களாய்  கசங்கிக் கிடக்கின்றோம் தனி அறைகளில்   பல்லாயிரம் உயிர் தின்றும்  அடங்காது ஆர்ப்பரிக்கும் பூதமாய்  இன்னும் வேண்டும் என அடம் பிடிக்கிறது  இந்தக் கொடூர கொரோனா!!    உலக மீட்பர்கள் தாங்கள் என்று  தமக்குத் தாமே […]

Continue Reading »

ஜெயகாந்தன் நினைவு உரையாடல் – திரு. மதுசூதனன்

ஜெயகாந்தன் நினைவு உரையாடல் – திரு. மதுசூதனன்

திரு. மதுசூதனன் உடனான எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய நினைவு உரையாடல். உரையாடியவர் – திரு. சரவணகுமரன்.

Continue Reading »

அடி முதல்

Filed in கதை, வார வெளியீடு by on April 26, 2020 0 Comments
அடி முதல்

“என்னடா எல்லாத்தையும் வித்துட்டயா?” கேள்வி இவனிடம் கேட்கப்பட்டாலும் பார்வை அவன் மனைவி பார்வதி மேல்தான் இருந்தது.  உங்களை மாதிரி ஆளுங்க இருந்தா எங்களை மாதிரி ஏழைகள் பிழைக்க முடியுமா? இதை மனதுக்குள் நினைத்தாலும், “இல்லைங்க ஏட்டய்யா?இன்னும் நிறைய மீந்து கிடக்குது.,” மெல்ல சொன்னான் பரமன். “மணி இப்பவே ஒன்பதாயிருக்குமேடா?” இப்பொழுதும் பார்வை பார்வதியை மேய்வதில்தான் இருந்தது ஏட்டையாவுக்கு. தூத்தேறி என்று வசவை விசிறிய பார்வதி சட்டென திரும்பி எச்சிலை துப்புவது போல திரும்பித் துப்பினாள். போலீஸ்காரன் சட்டென […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad