\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இலக்கியம்

உலகம் உன் பக்கம்

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments
உலகம் உன் பக்கம்

அடுத்த வகுப்புக்குக் கணக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்பதால், தனது சீட்டில் உட்கார்ந்து அன்று பாடம் எடுக்கப் போகும் கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிரேசன். அப்பொழுது உள்ளே வந்த தாளாளரின் அலுவலக உதிவியாள் தாளாளர் அவனை அழைப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். கதிரேசனுக்கு அப்படியே ஜில் என்று பயம் வந்து ஒட்டிக் கொண்டது. தாளாளர் எதற்குத் தன்னை வரச் சொல்லுகிறார்?. எப்பொழுதும் பிரின்ஸ்பால்தான் கூப்பிட்டுப் பேசுவார். இன்று அதிசயமாய் இவர் கூப்பிட்டிருக்கிறாரே, நினைக்கும்போதே பயம் வந்தது. என்ன […]

Continue Reading »

கடலலை

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments
கடலலை

இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை, ”நேரமாகி விட்டது” என்று குழந்தைகளையும், தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள், வியப்பாய்ப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். ஒரு சிலர் பாவம் என்ற தோரணையில் கூடப் பார்த்துச் சென்றிருக்கலாம். மனிதக்கூட்டங்கள் தன்னை அதிசயமாய்ப் பார்த்துச் செல்வதையோ, இல்லை பாவமாய்ப் பார்த்துச் செல்வதையோ கண்டு கொள்ளும் மனோ நிலையில் பெரியவர் இல்லை. இப்பொழுது பெரியவர் இன்னும் வரக்காணோம் என்று பதட்டப்பட்டு தேடுவோர் யாருமில்லை. காணாமல் […]

Continue Reading »

சைக்கிள்

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments
சைக்கிள்

இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய்ப் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு, போக வர வழியில்லாமல்..மனைவியின் கத்தலால், பேப்பர்  படித்துக் கொண்டிருந்த நான் என்னமோ ஏதோவென்று ஓடி வந்தேன். என்ன கமலா ஏன் இப்படிக் கத்தற? இப்ப சைக்கிள் என்ன பண்ணுச்சு? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆங்காரத்துடன் என்னைப் பார்த்தவள் இருக்கற இரண்டே முக்கால் செண்ட் வீட்டுல இதை வேற அலங்காரத்துக்கு வாசலில நிக்க வச்சுக்கறீங்க. போக வர வழிய அடைச்சுகிட்டு, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. […]

Continue Reading »

உழவுத் தொழில்

உழவுத் தொழில்

காலையில் எழுந்து கதிரவன் தொழுது கடமையை நாளும்  செய்திடுவோம்!       கதிரவன் கொடுத்த   உழவுத்தொழிலை உயிர்மூச்சென்றே  போற்றிடுவோம்! பஞ்சமில்லாமல் பார்ப்பதுயெல்லாம் பாரினில் அவனின்  செயல்தானே! வஞ்சனை செய்து   வாழ்வை அழித்தால் வீழ்வது பூமியில்  நாம்தானே! உழவுத்தொழிலை  உயிர்மூச்சாக்கி உழைத்தது நமது  நாடன்றோ!   உழவர் வாழ்வை உயர்த்தச் செய்வது உயர்ந்தோர் செய்யும்  செயலன்றோ!   பசியைப் போக்கிடும் உழவர் வாழ்வினில் பட்டினிச் சாவினைத்  தடுத்திடுவோம்!   பசுமை நிறைந்த பாரினைக் கண்டிட உழவர் வாழ்வினைப்  […]

Continue Reading »

புதர்க் காடு

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments
புதர்க் காடு

பரந்து விரிந்த இந்த இடத்தைக் காடு என்றும் சொல்லலாம், ஆனால் காடு என்று சொன்னாலும் பெரிய பெரிய மரங்கள் எதுவும் இல்லை. புதர்களும், புற்களுமே அதிகமாகக் காணப்பட்டன. புதர்க்காடு என்று சொல்லிக்கொள்ளலாம். புதர்கள் என்றால் அப்படி ஒரு இறுக்கமான காடுகள் கொண்டது. அடர்த்தியான புதர்கள், செடிகள் இணைந்து அதன் மேல் கொடிகள் படர்ந்து பொதுவாக உள்ளே நுழைவது என்பது சிரமப்படக்கூடிய விசயம்தான். காலை ஆறு மணி இருக்கலாம். அந்த இடத்தின் மண்மேட்டில் காணப்பட்ட பொந்து ஒன்றிலிருந்து மெல்ல […]

Continue Reading »

சாகித்ய அகாடமி

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments
சாகித்ய அகாடமி

கண்ணபிரான் காலை பத்து மணிக்குள் ஐந்தாறு முறை வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்து விட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியைக் கேள்விப்பட்டு செல்ஃபோனில் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர் தபாலில் அதைப் பார்த்து உறுதி செய்த பின்தான் மேற்கொண்டு உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லி விட்டார். இருந்தாலும், மனதின் பரபரப்பை அவரால் கூட அடக்க முடியவில்லை. அங்கிருந்த நாற்காலி […]

Continue Reading »

வாடிக்கை மறந்ததும் ஏனோ…!

Filed in கதை, வார வெளியீடு by on February 27, 2020 0 Comments
வாடிக்கை மறந்ததும் ஏனோ…!

சட்டுச் சட்டென்று மின்னலாய்த் திரும்பி மறைந்து விடுகிறான் அவன். என்னவொரு சுறுசுறுப்பு. அவன் சைக்கிள் போகும் வேகத்திற்கு, பின்னால் பிளாஸ்டிக் டப்பாவில் அடுக்கியிருக்கும் பால் பாக்கெட்டுகள் துள்ளிக் கீழே விழுந்து விடக் கூடாதே என்றிருந்தது இவனுக்கு. அத்தனை குதியாட்டம் டப்பாவுக்குள். அவன் பரபரக்கும் அந்தப் பகுதித் தெருக்கள் அனைத்தும் மேடும் பள்ளங்களுமாகத்தான் இருக்கின்றன. அது ஒரு தனிக் காலனி. அதிலேயே இஷ்டத்திற்கு விட்டு அடித்துக்கொண்டு போகிறான் அவன். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்கிற […]

Continue Reading »

சர்ப்ரைஸ் கிஃட்

சர்ப்ரைஸ் கிஃட்

“ஏன்னா.. வேலண்டைன்ஸ் டே வர்ரதே, என்ன கிஃப்ட் தரப் போறேள்”, ஞாயிற்றுக் கிழமை மாலை வேறேதும் வேலையில்லையென ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி சேனலை மாற்றிக் கொண்டிருந்த கணேஷின் அருகில் வந்தமர்ந்து கேட்டாள் லக்‌ஷ்மி. நாற்பதுகளில் இருப்பினும், இளமையும் காதல் உணர்வும் சற்றும் குறையாத தம்பதி. “என்னடி பெரிய வேலண்டைன்ஸ் டே, அது கிதுன்னு…” அவள் அளவு அதிகமாக வெளிப்படுத்தாத அவனின் பதில். “நேக்குத் தெரியாதா, இப்படித்தான் சொல்வேள், ஆனா எதாவது சர்ப்ரைஸ் வெச்சிருப்பேளே” என்றவளை உடனடியாக நிறுத்தி, […]

Continue Reading »

ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி – நூல் நயம்

ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி –  நூல் நயம்

கவிதை மொழியை அமைக்கும் ஆற்றல் பற்றி சொற்களால் விளக்குவது கடினம். அது வியக்க வைக்கும் வகையில் நம் உணர்ச்சியைத் தூண்டி, சத்தமே இல்லாமல் எம்மிடம் ஒருவகையான சலனத்தை அல்லது கிளர்ச்சியை  உண்டாக்கி விடுகிறது. 2009 இல் எனது முதுகலைப் பட்டப் படிப்பு ஆய்வின் ஒரு பகுதியாக புலம்பெயர் தமிழர்களின் கவிதைகளை ஆய்வு செய்திருந்தேன். பெரும்பாலும் தாய்நாட்டிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகச் சொந்த நிலத்தை விட்டுப் புலத்துக்குப் பெயர்பவர்கள் தங்கள் நிலம் சார்ந்து எழுதுவதைக் காட்டிலும் புலத்தில் சந்திக்கும் அல்லது […]

Continue Reading »

மினியாபொலிஸில் ஒரு காதல் கதை

மினியாபொலிஸில் ஒரு காதல் கதை

      ‘கூதலான மார்கழி.., நீளமான ராத்திரி..நீ வந்து ஆதரி.!!! இது மௌனமான நேரம், இள மனதில் என்ன பாரம்..’ என்ற ஜானகியின் கொஞ்சலை ரிமோட் கொண்டு நிறுத்திய பிரியா, படுக்கை அறைக்குள் நுழைந்துகொண்டே கேட்டாள். “கார்த்திக், ஹீட்டர்ல 72  வைக்கவா..? ரொம்பக் குளுருது டா.”  “நோ .. 68 இருக்கட்டும். உன் குளிருக்கு நான் ஒரு வைத்தியம் சொல்றேன். இங்க வா”, என மெத்தையில் படுத்துக்கொண்டு அழைத்தான் கார்த்திக்.  “வேணாம்பா.. வேணாம்.. நான் போர்வையே போத்திக்குறேன்.” “ஹீட்டரையும், […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad