இலக்கியம்
பச்சையட்டைப் போட்டி
தற்காலிக அடிப்படையில் பணி நிமித்தம் நுழைவுச்சான்று (H1 VISA) பெற்ற ஆசியர்களுக்கு அமெரிக்கக் குடிவரவுச் சட்டம் ஏற்கனவே மிகத் தலையிடித் தரும் விடயம். 2019 ஆம் கொணரப்பட்ட நிரந்தர வதிவிட உரிமைத் திருத்தங்கள், அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைக் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட விண்ணப்ப பரிசீலனை தாமதங்கள் பலரை, குறிப்பாக அரை மில்லியன் இந்தியர்களையும், பல நூறாயிரம் சீனர்களையும் பாதித்துள்ளன. நிரந்தர வதிவிட விண்ணப்ப பின்தங்கல்களை நிவர்த்தி செய்ய பல்வேறு அமெரிக்கத் தொழில்நுட்ப […]
மினசோட்டாவினுள் கம்போடியா
உலகின் மிகப் பெரிய இந்து கோவில் கம்போடியாவில் இருக்கிறது என்பார்கள். வைணவக் கோவிலாகக் கட்டப்பட்ட அந்தக் கோவில், பிறகு பௌத்தக் கோவிலாக மாற்றப்பட்டது. சரி, இப்ப அமெரிக்காவிற்கு வரலாம். கம்போடியர்களின் மிகப் பெரிய பௌத்தக் கோவில் வட அமெரிக்காவில் எங்கிருக்கிறது தெரியுமா? மினசோட்டாவில் தான். செயிண்ட் பாலில் (St. Paul) இருந்து தெற்கே 30 மைல்கள் தொலைவில் ஹாம்டன் (Hampton) என்ற பகுதியில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் கம்போடியாவில் […]
இருளில் இரகசிய ஏழில் ஆந்தைகள்
வட அமெரிக்காவில் இலையுதிர்காலம் படிப்படியாகப் பனிகாலத்தை நோக்கி நகர்கிறது. இதன் போது சூழலில் பல உயிரினங்களும் அம்பலமாகின்றன. இவற்றில் ஒரு வகைதான் ஆந்தைகள். வடஅமெரிக்காவில் குறிப்பாக மினசோட்டா, ஒன்ராரியோ நிலங்களில் எமக்கருகில் ஏறத்தாழ பத்து வகை ஆந்தைகள் வசித்து வருகின்றன. ஆந்தைகளை சிலர் மதித்துப் போற்றினாலும், விவரம் புரியாமல் அருவருப்புடன் பார்ப்பவர்களே அதிகம். அடர்ந்த வட அமெரிக்க ஊசிமரக் காட்டுப் பகுதிகளாக இருக்கட்டும், இல்லை நகர்ப்புறச் சந்து பொந்துகளாக இருக்கட்டும் தமது அயலிற்கேறப்ப அமைந்து வாழும் தன்மையுள்ள […]
வென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 3
பகுதி 2 அத்துவானக் காட்டுக்கு மத்தியில், அழகாக அமைக்கப்பட்டிருந்த இரயில் நிலையம். சுற்றி கண்ணுக்கெட்டும் தொலைவு வரையில் கும்மிருட்டு. அந்த இரயில் நிலையத்திலும், அதன் உள்ளிருந்த ஒரு ரெஸ்ட்டாரண்டிலும் ஒளி மயமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அவைதவிர எந்தவித வெளிச்சமும் எங்கும் காணப்படவில்லை. ஆனால் இரவு நேரமதிகமாகிவிட்டதால், அந்த ரெஸ்டாரண்ட் மூடப்பட்டு, ஓரிரு விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன. இரயில் நின்று, கதவு திறந்தவுடன் கணேஷ் மெல்லமாகத் தலையை எட்டிப் பார்த்தான்; மனது முழுதும் யாரேனும் மனிதர்கள் […]
ரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம்
மினசோட்டா மாநிலத்தினதும், பல்வேறு அமெரிக்க நகரங்களின் பூர்வீக வாசிகள் தினப் பிரகடனங்களையும் ஒட்டி, ரிச் ஃபீல்ட் நகரமும் ஆக்டோபர் இரண்டாம் திங்களை, பூர்வீக மக்கள் தினமாக அறிவித்துள்ளத்து. ரிச் ஃபீல்ட் நகரமானது மினியாப்பொலிஸ் பெருநகரின் தென்புற எல்லையில் உள்ளது. அந்த அறிவிப்பானது ஆக்டோபர் 8, 2019 அதிகாரப்பூர்வ நகர சபைக்கூட்டத்தின் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரகடனத்தின் படி கொலம்பஸ் டே எனப்படும் தினம் அகற்றுப்பட்டு ஆக்டோபர் இரண்டாம் திங்கள் பூர்விக மக்கள் தினமாக கௌரவிக்கப்பட்டுக் கொண்டாடப்படும். இத்தினத்தில் […]
வென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2
பகுதி 1 அந்த கரிய நிற மெஷின் கன்னைப் பார்த்தவுடன் சர்வ நாடியும் ஒடுங்கியது கணேஷிற்கு. உடனடியாகத் திரும்பி, அந்த ஜெர்மன் டிரைவரைப் பார்க்க, அவருக்கும் குண்டலினி தொடங்கி துரியம் வரை குளிர் ஜுரம் பற்றிக் கொள்ள, இதுவரை வெறுத்த இந்த ப்ரௌன் ஸ்கின் இண்டியனை ஒரு ஆதரவுடன் பார்த்தார். “டிரைவ்…. டிரைவ்….. கோ … கோ.. கோ… டோண்ட் ஸ்டாப்….” என்று சைகையுடன் ஆங்கிலத்தில் இன்ஸ்ட்ரக்ஷனஸ் கொடுத்துக் கொண்டிருக்க, அவரும் திடீரென் வின்ஸ்டன் சர்ச்சிலாக மாறி, […]
உத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம்
“இந்தக் கோவிலுக்குத் திட்டமிட்டெல்லாம் வர முடியாது. தற்செயலா வந்தா தான் உண்டு” என்று அந்தக் கோவிலின் அர்ச்சகர் சொன்னது போல் தான் எங்களது அந்தப் பயணமும் அமைந்திருந்தது. கோவில் -இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் திருக்கோவில். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்டு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இராமநாதபுரம் பக்கம் உள்ளே பத்து கிலோமீட்டர் இறங்கிச் சென்றால், உயர்ந்த கோபுரங்கள் கொண்ட இந்தக் கோவிலைக் காணலாம். சிறிய ஊர் தான். அதற்குப் பெரிய கம்பீரத்தைக் […]
இம்பீச்மெண்ட்
இரண்டு வாரங்களாக, அமெரிக்கத் தொலைகாட்சிகளிலும், ஊடகங்களிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படும் சொல் ‘இம்பீச்மெண்ட்’. அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் ‘இம்பீச்’ செய்யப்படுவாரா என்ற கேள்வி அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் அது மிகையில்லை. தன்னை இம்பீச் செய்தால் உலகப் பொருளாதாரம் வீழும்; உலக அரசியல் ஸ்தம்பிக்கும் என அவரே எச்சரித்துள்ளது எந்தளவு நிதர்சனம்? அப்படி என்ன செய்துவிட்டார் ட்ரம்ப்? கட்டுரைக்குள் செல்லும் முன்னர் “இம்பீச்மென்ட்” என்ற பதத்துக்குப் பொருளறிந்து கொள்வது அவசியம். அகராதிப்படி “இம்பீச்மென்ட்” […]
ஹாங்காங்கில் என்ன நடக்கிறது?
அண்மைக் காலங்களில், தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று, உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்து வருகிறது ஹாங்காங். சீனாவுக்கு கிழக்காக கவ்லூன் மற்றும் பல புதுப் பிரதேசங்களையும், லண்டாவ், ஹாங்காங் உட்பட பல தீவுகளையும் உள்ளடக்கிய பகுதி ஹாங்காங். இன்றைய தேதியில் சீனக் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தாலும், ‘ஒரு தேசம் இரண்டு முறைமைகள்’ (One country ; two systems) என்று சற்று வித்தியாசமான உடன்பாட்டைக் கொண்டது ஹாங்காங் மீதான சீன ஆளுமை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் […]