இலக்கியம்
நாசாவின் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மினசோட்டா மாணவர்

மினசோட்டாவைச் சார்ந்த மாணவரான ஜெர்விஸ் ரூவின் பெஞ்சமின், தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்-நாசா (NASA) தொகுத்தளிக்கும் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்யும் கோடைக்கால பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, நாசா, டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் (ஆஸ்டின்) இணைந்து நடத்தும் ‘புவி மற்றும் விண்ணியல் துறையில் மாணவர் மேம்பாடு’ (Student Enhancement in Earth and Space Science (SEES)) நடத்தும் விசேடப் பயிற்சியாகும். இப்பயிற்சியில், செயற்கைகோள் / சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசா பெறும் தரவுகளை, மாணவர்கள் […]
அடுத்த மின்வலை இணையத்தை கற்பனை செய்தல்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, முதல் முறையாக இணையம் பொதுமக்களுக்குக் கிடைத்தது. தொழில்நுட்பத்தின் பின்னால் கொஞ்சம் மாறிவிட்டது, ஆனால் இன்று செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 1989 புரட்சிகளின் ஆண்டு. ஜேர்மனியில் சுவர் இடிந்து கொண்டிருந்த போது, டிம் பெர்னர்ஸ்-லீ என்ற மனிதனின் மனதில் மற்றொரு சரித்திரம் உருவாக்கும் வளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள புகழ்பெற்ற CERN அணு உலை ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள பிரிட்டிஷ் இயற்பியலாளர், CERN இல் உள்ள பல்வேறு நிறுவனங்கள் […]
மடமையைக் கொளுத்துவோம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதைப் போல இந்தாண்டும், மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஊடகங்களில், தாய், தமக்கை, தங்கை, மனைவி, மகள் என தத்தம் வாழ்வில் சந்தித்த அனைத்துப் பெண்களுக்கும் விதவிதமான வடிவில் வாழ்த்துகளைச் சொல்லித் தீர்த்தனர். மறுதினமே, தன் மனைவியை சிலாகித்துப் பேசும் கணவனிடம் ‘யோவ், நேத்தே வுமன்ஸ் டே முடிஞ்சி போச்சு..’ என்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்வதான ‘மீம்ஸ்’ வெளிவந்து ‘லைக்ஸ்களை’ அள்ளியது. வேடிக்கையாகயிருந்தாலும் இது தான் […]
வீழும் வங்கிகள்

அண்மையில் பெரு வங்கிகள் சில நொடித்து, திவால் நிலைக்குத் தள்ளப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. பொதுவாகப் பங்கு வர்த்தகம், பத்திரங்கள், வீடு / மனை போன்ற அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யுமளவுக்குப் பொருள், அனுபவமில்லாத இல்லாத மக்கள் இருப்பதைப் பாதுகாப்பாக வைக்கவும், எதிர்காலத் தேவைகளுக்காகவும், வங்கிகளில் சேமிப்பதுண்டு. அத்தகையோரது நம்பிக்கைகளை அசைத்துள்ளது தொடர்ந்து நிகழும் வங்கிகளின் வீழ்ச்சி. அமெரிக்காவில் இதற்கு முன்பும் சில தனியார் வங்கிகள் திவாலானதுண்டு. ஆனால் ஏற்கனவே மந்தநிலை நோக்கி நகர்ந்து வரும் அமெரிக்கப் […]
மனச்சோர்வு

எம்மில் பெரும்பாலனவர்கள், கடினமான மூன்று வருட கொரோணா தொற்றுநோய் காரணமான முடங்கலுக்குப் பின்னர், பொது வாழ்வுக்கு மீண்டவாறுள்ளோம். இதன் தாக்கமானது வெவ்வேறு மக்களின் உடலியல், மனோத்துவம், சமூக ஒன்றுகூடல் போன்றவற்றால் வெவ்வேறு விதமாக அமைகிறது. ‘Languishing’ எனப்படும் மனச்சோர்வு ஆனது 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க உளவியலாளர் மார்ட்டின் செலிக்மேன் (Martin Seligman) முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஒரு கருத்தாகும். இது மனச்சோர்வு அல்லது முழுமையான நல்வாழ்வு அல்லாத, தொடர்ச்சியான உடல் உபாதைகளில் சிக்கித் தவிக்கும் நிலையைக் குறிக்கிறது. […]
உலகை விட்டுப் பறந்த இசைக்குயில்

இந்தியத் திரையிசை உலகில், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்த இசைக்குயிலொன்று வாழ்வின் கிளைகளிலிருந்து பறந்து விண்ணுலகம் நோக்கிச் சென்றுவிட்டது. நாடு, பிராந்தியம், இனம், குலம், மொழி என எல்லைகளைக் கடந்த இசைக் கலைஞர்களில் தனியிடம் பிடித்த ‘கலைவாணி’ எனும் வாணி ஜெயராம் மறைந்து விட்டார். 19 மொழிகளில், ஆயிரக்கணக்கான திரைப்படங்களில், 10,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருந்தாலும், தானொரு மாபெரும் பாடகியென்ற தற்பெருமை ஒருபோதுமில்லாமல், அமைதி, எளிமை என பல அருங்குணங்கள் நிரம்பியவர். எப்பேர்ப்பட்ட மேடையானாலும், ஸ்டுடியோவானாலும், […]
அதானி குழுமத்தின் மீதான “ஹிண்டன்பர்க்” ஆய்வறிக்கை

சமீப நாட்களில் செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் அதிகமாக உச்சரிக்கப்படும், எழுதப்படும் பெயர் – ஹிண்டர்பர்க். பொதுவாக பங்குச் சந்தை வர்த்தகத்தின் பக்கம் தலை வைத்து படுக்காதவர்களின் கவனத்தைக் கூட ‘ஹிண்டர்பர்க்’ ஈர்த்துள்ளது. காரணம் – ஹிண்டர்பர்க் ஆய்வின் தாக்கம். நியுயார்க் நகரில் இயங்கும், ஐந்து நிரந்தர ஊழியர் மட்டுமே கொண்ட மிகச்சிறிய நிறுவனம், உலகின் பணக்காரர்கள் தர வரிசைப் பட்டியலில் இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்துக்கு முட்டி மோதும் ஒருவரின் பிம்பத்தை, இந்தியாவின் மாபெரும் கூட்டு வர்த்தக […]
சாட்ஜிபிடி ChatGPT தொழிலாளர் வேலையை சீர்குலைக்குமா?

வராலாற்று ரீதியில் தொழிநுட்பத்தை எடுத்துப் பார்த்தால், எந்த தொழில்நுட்பமும் ஓரளவுக்குப் படித்த தொழிலாளர்களிடையே பெருமளவிலான வேலை இழப்பை ஏற்படுத்தவில்லை என்பது புரியும். ஆயினும் ‘உருவாக்க செயற்கை நுண்ணறிவு’ (Generative AI) இதற்கு விதிவிலக்காக இருக்குமா என்பதே எமது கேள்வி. சாட்ஜிபிடி(ChatGPT) என்றால் தமிழில் நாம் ‘பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மொழி செயலாக்கக் கருவி’ என்று கூறிக்கொள்ளலாம். இந்த செயற்கை நுண்ணறிவு கருவி இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு மிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகங்களில் […]