இலக்கியம்
கருக்கலைப்புத் தடைச் சட்டம்
சில வாரங்களுக்கு முன்னர், கருக்கலைப்பு உரிமைகளுக்கான சட்டப் பாதுகாப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ‘ரோ – வேட்’ வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், 1973ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுவியிருந்த கருக்கலைப்பு பாதுகாப்புச் சட்டம், தொடக்க நாள் முதலே பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தாலும், கருத்தடைத் தொடர்பான பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தது. மத்திய அரசமைப்பின் இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் […]
பண்ணை வீடு
நேரம், அதிகாலை மணி இரண்டு முப்பது. பண்ணை வீட்டின் வெளிப்புற வீடாக அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் கண்மூடிய நிலையிலேயே விழித்திருந்தார் புண்ணியமூர்த்தி. பனிரெண்டு முப்பது மணி வாக்கில் திரும்பிப் படுத்தபொழுது முதுகுக்கு கீழே ஏதோ உறுத்துவது போல் தோன்ற, கண்விழித்து துழாவியவரின் கையில் அகப்பட்டது, பேத்திக்காக வாங்கியிருந்த விரல் நீள அழகிய மார்பிள் சிற்பம். கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தவர் அப்படியே உறங்கிப் போயிருந்தார். அப்பொழுது வந்த விழிப்புதான் இன்னமும் அவரை உறங்கவிடாமல் தொடந்துகொண்டேயிருந்தது. எண்ண […]
இதமான வாழ்விற்கு இயற்கையே முன்வழி
இயற்கையில் நேரத்தைச் செலவழிப்பது மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து விடுபட உதவும். எனவே வீடு, வேலைத்தலத்தில் இருந்து வெளியேறி, சுற்றாடலில் சஞ்சரிப்பது சுகமான உடலிற்கும் , மனதிற்கும் சாதகமான விடயம். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே, மனிதகுலம் இயற்கையுடனான தொடர்பை இழந்து வருவதாக இயற்கையிலாளர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது அமெரிக்கா இயந்திரமாக்கலில் முன்னோக்கிச் செயற்பட்டு வந்தது. அந்தச் சமயத்தில் பொது மக்கள் இதைப் பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. இன்று நிலைமை சந்தேகத்திற்கு இடமின்றி இயற்கையுடனான எமது தொடர்பு மோசமாக […]
மினசோட்டா மீன் தேடல்
தூத்துக்குடி போகும்போதெல்லாம் காலையில் எழுந்து துறைமுகம் பக்கமிருக்கும் கடற்கரைக்குச் செல்லும் வழக்கமுண்டு. அச்சமயத்தில் அங்குக் கடலுக்குள் சென்றிருக்கும் சிறு சிறு படகுகள் கரை திரும்பி வரும் நிகழ்வைக் காணும் வாய்ப்பு கிடைக்கும். படகுகள் சிறியதாக இருந்தாலும், அவற்றில் நிறைய மீன்கள் பிடிக்கப்பட்டுக் கரைக்கு வந்து சேரும். கடற்கரையில் அந்த மீன்கள் மற்றும் இதர பிடிபட்ட கடழ்வாழ் உயிரினங்கள் கொட்டப்பட்டு, வகைவாரியாகப் பிரிக்கப்பட்டு, ஏலம் விடப்படும். நடைபயிற்சிக்கு வந்தவர்கள், வீட்டிற்கு மீன் வாங்க வந்தவர்கள், கூடையில் போட்டு வீதி […]
வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்
மிக்சியில் ஏதோ அரைக்கப்போனவள் வலது புறம் திரும்பி முன்னறையை ஏன் பார்க்க வேண்டும்? அப்படியே பார்த்தாலும் அந்தக் காட்சி ஏன் என் கண்களில் பட வேண்டும்? ஒரு கையில் காப்பி கோப்பை. மறுகையில் படிக்க வசதியாக நான்காக மடக்கியபடி செய்திகளைச் சுடச்சுடத் தரும் The Straits Times செய்தித்தாள். கால்கள் இரண்டும் கீழே இருந்திருந்தால்கூட என்னோட கிறுக்கு புத்திய அடக்கி வச்சிருப்பேன். காப்பி டேபிள் கால்கள் டேபிளாகி இருந்தது. தொலைக்காட்சியில் உலக நடப்புகளை உடனுக்குடன் ஒளிபரப்பும் CNN […]
பதியம் போட்ட உறவுகள்
(பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) “கிராமத்தில் தனியா இருக்கிற அம்மாவை, இங்கே வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு போகச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்…..” தயங்கியபடி யோசனையைச் சொல்லிவிட்டு, மனைவி சுகுனாவின் பதிலுக்காக காத்திருந்தேன். அம்மா உள்பட, கிராமத்து உறவினர்கள் எவரையும், குடும்பத்துக்குள் சேர்த்தால், ஒத்து வராது என்ற கருத்தில், கல்யாணம் ஆனதிலிருந்தே பிடிவாதமாக நின்றாள் அவள். சிறு வயதில் அம்மாவை இழந்து, அப்பாவின் ஒரே செல்லப் பெண்ணாக வளர்ந்து, நவீன […]
குடும்பத்தலைவி
குடும்பம் என்பது மரமானால்- அதில் அடியும் வேரும் நீ தானே! பாசக் கிளைகள் விரிந்தோட-அதில் அன்பாய் இலைகள் நீ தானே! பிள்ளைகள் என்பது விழுதாகும்- அது பிரிந்து வேர் ஊன்ற பெரிதாகும்!! மழையோ, புயலோ வந்தாலும்- அது உந்தன் உறுதியில் கரைந்தோடும்! உன் உழைப்பில் பெரிதாகும்- மரம் உலகம் வியக்க செழித்தோங்கும்! குடும்பத் தலைவி பெண்ணே நீ உந்தன் – சிரிப்பில் பூ பூக்கும்!! உலகம் இயங்கும் உன்னாலே – வணங்கிப் போற்றுவோம் என் நாளும்!! இளங்கோ […]
விலங்கு
விலங்கிட்டு எனைப் பூட்ட விலங்கா நான்? விளங்காத இந்நினைப்பை விலக்கவும் இயலவில்லை! விலங்கிடப் பட்டேன் நான்! விலங்காக நடத்தப்பட்டேன்! விலகவும் இயலவில்லை விளக்கவும் எவருமில்லை! விளக்காய் ஒளி வீச விழைந்தே அவதரித்தேன்! விலங்கான மனிதர்களால் விளங்காத துயரடைந்தேன்! விலகிப் போகையிலே விழவைத்துச் சிரித்தனர்! விளங்கா வயதினையும் விதைக்குள்ளே ஒழித்தனர்! விலக வேண்டும் இனவெறி! விலக்க வேண்டும் வன்முறை! விளக்க வேண்டும் மானுடர்க்கே விரிவாக அஹிம்சைதனை!! வெ. மதுசூதனன்.