கவிதை
பனிப்பூக்கள் அகவை 13

உலகத் தாய்மொழி தினமான இன்று நமது பனிப்பூக்கள் சஞ்சிகைக்கு 13 அகவையாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள். பனிப்பூக்கள் கடந்து வந்த பாதையை வெ.மதுசூதனன் அவர்கள் கவிதையாக எழுதி, வாசித்த காணொலியை இங்கு காணலாம். எமது பயணத்தில் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.
கலிஃபோர்னியா பற்றி எரிகிறது

இயற்கை சொர்க்கத்தை எரிக்க விரும்பியது கலிஃபோர்னியா பற்றி எரிகிறது பல தசாப்தங்களாக நிலைத்து நின்ற வீடுகளையும் குடும்பக் கதைகளையும் நேசத்துக்குரிய நினைவுகளையும் பாதுகாத்த பொக்கிஷங்கள் ஒரு தீ மூச்சில் அழிக்கப்பட்டன இன்னும் தீ பரவுகிறது தென் கலிஃபோர்னியா ஒரு தீப்பொறியாக மாறிவிட்டது ஒரு கவிஞர் தனது உயிருக்காகத் தப்பி ஓட தனது காரை கைவிடுகிறார் தீக்காயம் பட்ட தனது குழந்தையை ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்ல பின்னே ஓடுகிறாள் ஒரு தாய் ஒரு சிற்பியின் கண்கள் கனவுகளின் […]
இனி ஒரு விதி செய்வோம்

இங்கே விதிகள் பலவகை உண்டே இவைகளை உடைத்திட இங்கேயே யாருண்டு? தேவதூதனைத் தேடுகிறோம் அவதாரங்களுக்காக அங்கலாய்கிறோம் மனிதம் இங்கே தலை தூக்கிட மானிட சமுதாயம் மாறிடவே வழிவகுப்போம் சமுதாய நீதியைச் சமைத்திட சாதித்திடுவோம் ஆண் பெண் இரண்டே சாதி எல்லாமும் எல்லோருக்குமே கிடைப்பதே சமூகநீதி அன்பின் உலகம் ஆர்வமாய் படைத்திட்டே அகிலம் சிறக்க பாடு படுவோம் உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம் சமைத்திடவே […]
இறைத்தூதர்

அறைந்தேன் ஆணியதை மிகச்சிறிதாய், படம் மாட்ட! அது சற்றே விலகி சுண்டுவிரல் பதம் பார்க்க, அழுதேன் சுருண்டு விழுந்தே, விளைந்த வலி மாற! அந்த வலி சற்றே நீங்க, சடுதியில் மனம் நினைக்க, அகத்தினிலே திருவுருவாய் ஆண்டவர் மலர்ந்தருள, அவர்மேனி சிலுவையிலே ஆணிகளால் நிறைந்தறைய, அங்கமெலாம் உதிரமுமாய் அணிவித்த முள்கிரீடமென, அவயமெலாம் வலித்திருக்க அவைகருதா நகைப்புற்ற அவதார புருஷரவர் அமைதியாய் அகிலமுய்ய அபயமென்றே இறங்கிவந்த அன்புருவாம் இறைத்தூத! அவதரித்த நாளிதிலே அங்கமுழுதும் புழுதிபட அறிந்த […]
இயேசு பிறப்பு நற்செய்தி

ஆண்டின் இறுதியும் – புதிய ஆண்டு புகுமுன் நிகழும் ஆண்டவர் பிறப்பு நற்செய்தியும் ஆவல் தூண்டிட ஆயிரம் வர்ண விளக்குகள் ஆதவன் அடங்க மின்னி ஆகாயம் ஒளிர்ந்து ஆனந்தம் பொங்கிட ஆடம்பரத் திருவிழா ஆட்டங்கள் களைகட்ட ஆன்ம இசை விருந்துகள் ஆசையாய் அரங்கேற ஆகம வார்த்தையானவரை ஆனந்த பாசுரம் பாடி ஆலயத்திலும் அகத்திலும் ஆராதித்துப் போற்றிட ஆதி இல்லாதோன் மகனே ஆன்ம நேசராய் அகிலம் காக்க ஆவியார் அன்னை மரியை ஆட்கொள்ள […]
இடி, மின்னல், மழை மங்கை!

நெற்றிப் பரப்பினில் சுற்றிப் பறந்திடும் கற்றைக் கூந்தலைச் சற்றே விலக்கிச் சிரித்தாள்!! விலக்கலில் வழிந்த வியர்வையும் மெதுவாய் விழிகளைத் தாண்டி விழுவதில் விழுந்தேன்!! நாசிகளைக் கடக்கையில் சுவாசித்துத் தணிந்ததால் வீசிய கனலது தூசியாய் மேகமாகியது! மங்கையின் வியர்வையும் பொங்கிய கனலினால் தங்கியே வான்புக கங்கையாய்ப் பொழியுதோ? கண்ணதன் ஒளியுமே மண்ணிதின் மீதிலே எண்ணத்தின் வேகமாய் மின்னலாய்ப் பாய்ந்ததோ? கன்னியவள் குலுங்கிடக் கடலலையும் குதித்திடுமோ? என்னவளும் சிணுங்கிட இடியதுவும் சினந்திடுமோ? […]
குடும்பத்தலைவி

குடும்பம் என்பது மரமானால்- அதில் அடியும் வேரும் நீ தானே! பாசக் கிளைகள் விரிந்தோட-அதில் அன்பாய் இலைகள் நீ தானே! பிள்ளைகள் என்பது விழுதாகும்- அது பிரிந்து வேர் ஊன்ற பெரிதாகும்!! மழையோ, புயலோ வந்தாலும்- அது உந்தன் உறுதியில் கரைந்தோடும்! உன் உழைப்பில் பெரிதாகும்- மரம் உலகம் வியக்க செழித்தோங்கும்! குடும்பத் தலைவி பெண்ணே நீ உந்தன் – சிரிப்பில் பூ பூக்கும்!! உலகம் இயங்கும் உன்னாலே – வணங்கிப் போற்றுவோம் என் நாளும்!! இளங்கோ […]
விலங்கு

விலங்கிட்டு எனைப் பூட்ட விலங்கா நான்? விளங்காத இந்நினைப்பை விலக்கவும் இயலவில்லை! விலங்கிடப் பட்டேன் நான்! விலங்காக நடத்தப்பட்டேன்! விலகவும் இயலவில்லை விளக்கவும் எவருமில்லை! விளக்காய் ஒளி வீச விழைந்தே அவதரித்தேன்! விலங்கான மனிதர்களால் விளங்காத துயரடைந்தேன்! விலகிப் போகையிலே விழவைத்துச் சிரித்தனர்! விளங்கா வயதினையும் விதைக்குள்ளே ஒழித்தனர்! விலக வேண்டும் இனவெறி! விலக்க வேண்டும் வன்முறை! விளக்க வேண்டும் மானுடர்க்கே விரிவாக அஹிம்சைதனை!! வெ. மதுசூதனன்.
பெண்மை

பிறப்பில் தொடங்கி என்னை இறப்பு வரைக்கும் இங்கே சிறப்பாய்க் காத்தவள் பெண், மறுப்பு இதற்கேது சொல்? கருவில் தாங்கி, கற்பக தருவாய் ஈன்று, என்னை வருவாய் மலரேயென்று அற்புதத் திருவாய் மலர்ந்தவள் அன்னை! சிறுவனாய் நான் அலைகயிலே சிறியதாய்த் தோன்றும் செயலும் ஒருவனாய்ச் செய்திடத் தகுந்த திறமையைக் கற்றிடாக் காரணத்தால் அருகிலே வந்து அமர்ந்து பெருகிய நற் பாசத்தோடு மருகிய விழிநீர் துடைத்து உருகியே உதவியவள் அக்காள்! பள்ளி போகும் பருவத்திலே […]
காதல் கிளை பரப்பிய மரம்

ஒற்றை சிவப்பு ரோஜா! உலர்ந்த மலர், சீரற்ற அளவில் அழுத்தியது கையை. உலர்ந்த சிவப்பு! திறந்த பழைய புத்தகம்! என் காலத்தை நினைவுபடுத்தியது. அது உன்னை இன்னும் எனக்கு, நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் பரிசு நீ. அதை நீ எனக்கு வழங்கிய நாள், எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உன் கருவிழி உருட்டி என்னை ஏறிட்டுப் பார்க்கையில் நீ அங்கேயே என்னை மையம் கொள்ள வைத்து விட்டாய். அன்று நீ என் இதயத்தில் தூவிய […]