\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவிதை

மரம்கொத்திப் பறவை

மரம்கொத்திப் பறவை

கொத்திக் கொத்தி நீ யெழுப்பு மோசைகூட புத்திக்கு இதமாய் இசையாய் யமைந்ததுவோ சங்கேத ஒலியிலுன் சகாக்களுடன் நீகுலவும் சங்கீதக் காதல் மொழிக்கொரு சான்றாகுமாம்   கூரிய மூக்கால் முட்டி மரப்பட்டை யுரிக்கும்போது வீறியெழும் வேகமுடன் குத்தியெழும் ஒலிதான் இசைவடிவம் தருகின்ற எதிரொலியா யெங்கும் விசையுடன் வெளியே வெகுவாய்க் கேட்குமாம்   இலைகளும் பூக்களுமுன் இன்னிசை கேட்டு இசைந்தினிதே ஆடும் – மரமெல்லாம் தாளமிடும் மரமீதில் அமர்ந்தாடித் தலையசைத் தாடுமழகேயது மாபாரதத்தின் பெருமை சொல்லும் பரதமாகும்   மரங்களை […]

Continue Reading »

ஹாலோவீன்

ஹாலோவீன்

ஆதவன் சற்றே இளைப்பாற அந்திமம் சற்றே பவனி வர விருந்தா வித்தையா என அறிந்தும் அறியாமலே விந்தையாய் கேள்விதனைக் கேட்டபடி உலாவரும் குழந்தைகளை மகிழ்விக்க அக்டோபரில் வந்த ஹாலோவீனே   இன்முகத்தை முகமூடிக்குள் மறைத்தே இடையினில் மந்திரக்கோலைக் கொண்டே விந்தைபல காட்டி வியக்கச் செய்தே இனிப்புகளை அள்ளிச் சென்ற ஹாரிபார்டரையும் அறிந்தும் அறியாமலே   சாகசமாய் எண்ணி மகிழ்வித்த  ஹாலோவீனே   இல்லாத ஆவியையும் பிசாசையும் இன்பமாய் கொண்டாடி மகிழவே காண்பவருக்கு பயத்தினையும் அணிபவருக்கு இன்பத்தையும்   […]

Continue Reading »

முத்தம் தாராயோ

Filed in கவிதை, வார வெளியீடு by on October 30, 2017 1 Comment
முத்தம் தாராயோ

மாயக் கவிக்கு முத்தமொன்று தாராயோ என் மனதினுள் நுழைந்து என்னைக் கலைந்தவளே என் பொன் மானே மாயச் சாவி கொண்டு என் மனதினைக் கொள்ளை கொண்டவளே வண்ண மலர்களால் எனைக் கொய்தவளே என் பெண் மானே இலையுதிர் காலத்தின் சுகத்தை தன் இதழால் வருடிக் கொடுத்தவளே காந்தப் பார்வையால் எனை நெய்தவளே என் பெண்ணழகே பனிக்காலக் குளிரின் இதத்தை தன் அழகின் அணைப்பால் அணைத்தவளே கள்ளப் பார்வையால் எனைக் கட்டி இழுத்தவளே என் அழகே ! அழகின் […]

Continue Reading »

மானிடம் கண்ட (ஏ)மாற்றம்

மானிடம் கண்ட (ஏ)மாற்றம்

காட்டிலே வேட்டையாடி கண்ணில்பட்டதைத் தின்று அறத்துடன் வாழ்ந்தவன் இன்று நாகரிகம் எனும் போர்வையில் மனிதத்தை மறந்துவிட்டானே!   ஆக்கத்திற்குக் கருவிகளைத் தோற்றுவித்தது போதாதென்று அழிவிற்கும் உருவாக்கி அண்டத்தை அலறவிடுகிறானே!   சொந்த பந்தங்களுடன் அன்று அனுசரித்து வாழ்ந்தவன் இன்று சுற்றி நிற்கும் உறவுகளைக் கத்தரித்து நிற்கிறானே!   அடுக்குமாடி வாழ்க்கையின் விளைவால் அண்டை அயலாருடன் சகவாசம் கொள்வதை அருவெறுத்து ஒதுக்குகிறானே!   முப்பொழுதும் கைத்தொலைபேசியில் மூச்சுவிடாது உரையாடுபவன் அருகிலிருப்பவர்களுடன் சிறிதும் அளவளாவ விரும்புவதில்லையே!   காலத்தின் கோலத்தால் […]

Continue Reading »

கர்ம வீரர்

கர்ம வீரர்

வீணர்களால் ஜலியன் வாலாபாக்கில்     விளைந்ததந்தக் கொடுமை கேட்டு வீறுகொண்டு எழுந்திட்ட வியத்தகு    வீர்ர்கள் பல்லாயிரம் நாட்டினிலே! விருதுப்பட்டிச் சிற்றூரில் வித்தாயுதித்து    விரைவாய்ப் போராட்டக் களம்புகுந்து விருட்சமாய் வளர்ந்து வெள்ளையனை     விரட்டியடித்த அஹிம்சாவாதி கருப்புகாந்தி!! சுதந்திர இந்தியாவைக் கட்டிக்காக்க     சுயநலமின்றி உழைத்திட்ட தலைவர்பலர்! சுகமாக மக்கள் வாழத்தம்மைச்     சுருக்கிய ஒருசிலருள் முதன்மையானார்! அரசியல் என்றாலே பொய்யும்புரட்டும்     அடாவடியும் என்றாகிய இந்நாளில் அனைவரின் நலமொன்றே நாடிவாழ்ந்த     அற்புதத் தலைவர் […]

Continue Reading »

சிந்திய சிந்து

சிந்திய சிந்து

  காட்டிலும் மேட்டிலும் களைப்புடன் உழைத்திட்ட காளையும் கன்னியும் கண்ணயர்ந்து சுவைத்திட காதலும் கடவுளும் கருத்தினில் படைத்திட்ட, காரிருள் நீக்கியே கவிபுனைந்த கதிரோன்! சாவதின் பயமது சங்கடமாய்த் துரத்திட சாரமாய் வாழ்க்கையின் சங்கதி உணர்த்திட சாரதியாய் வந்திட்ட கண்ணனைப் பணிந்திட சாயுங்கால சொர்க்கமாய்க் குளிர்ந்திட்ட நிலவவன் !!! தாயகம் முழுவதும் தருக்கரால் பிடிபட தானமும் தவங்களும் தழைக்காது மிதிபட தாயவள் தளையறுக்கத் தலைமகனாய் உதித்திட்ட, தாங்கொணா வெப்பமாய்த் தகித்திட்ட தலைவனவன் !!! நாவினில் கலைமகளை நலமுறவே அமர்த்திட […]

Continue Reading »

எழுத்தறிவித்த இறைவன்

Filed in கவிதை by on September 4, 2017 0 Comments
எழுத்தறிவித்த இறைவன்

எழுந்து நடந்திட இயன்றிடாப் பாலகனை எழுச்சித் தலைவனாய் மாற்றிட்ட சிற்பியவர்… எழுமையிலும் பணிந்து வணங்கிட  மறக்கத்தகா எழுத்து அறிவித்த இணையிலா இறைவனவர் ….. பிதற்றலாய்த் தொடங்கிய பேதையின் வாழ்க்கையை பிறர்போற்றி வாழ்த்திடும் வகைமாற்றிய வித்தகரவர்….. பிழைப்பினை நடத்திடப் பிறர்கையை நம்பிவாழும் பிணிபோக்கி தன்னம்பிக்கை ஊட்டிய தலைவரவர்….. தவழ்ந்து வருதலும் தன்னால் ஆகாதென்ற தரக்குறை நிலைமாற்றித் தருக்காய்ச் சமைத்தவரர்….. தன்னலம் கொண்ட மாந்தர்கள் நிறைந்த தரணிதனில் பிறர்க்கெனத் தனையுருக்கும் மெழுகானவர்…… வாயில் வைத்த விரலதனைச் சுவைத்துவாழும் வாழ்க்கையே நிலையென […]

Continue Reading »

மாறி வரும் மரபுகள் – தேவவிரதன்

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2017 0 Comments
மாறி வரும் மரபுகள் – தேவவிரதன்

காதல், காதல், காதல், காதல் போயின் சாதல் என்றான் ஓர் கவிஞன் கவிதைக்குப் பொய் அழகு என்றான் இன்னொரு புலவன் அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒருவர் இன்று அந்த உறவு கடல் கடந்து போய் விட்டது கணினித் தொடர்புடன் இந்தியாவின் இதயம் கிராமங்களில் என்றார் ஒரு கிழவர் அந்த இதயத்தை விட்டு நகர்ந்து வருபவர்தான் இன்று நான் காணும் தலைமுறை மனதை ஒருமிக்க மதம் என்றனர் ஆன்றோர் ஆனால், மதத்தின் பெயரால் மதம் பிடித்து […]

Continue Reading »

அறிவுள்ள காகம் !

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2017 0 Comments
அறிவுள்ள காகம் !

காகம் ஒன்று பறந்து திரிந்தது
கோடை வெயில் தீயாகச் சுட்டது
தாகம் தீர்க்க அலைந்து வாடியது
காகம் குடிநீருக்காகத் தவித்தது !

குளம் குட்டையெல்லாம் சுற்றியது
களைப்பில் மரத்தில் நின்றது  
எல்லாமே வறண்டு கிடந்தது
தாகம் தீர்க்கத் தண்ணீர் எங்கே ?

Continue Reading »

இளைஞர்களே இனி அவசரம் வேண்டாம்..!

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2017 0 Comments
இளைஞர்களே இனி அவசரம் வேண்டாம்..!

இன்றிருக்கும் இளைஞருக்கு ஈடில்லா அவசரம்..        இல்ல மொன்றிருப்பதை யுமறவே மறந்தனர்.! என்றும் மெல்லத் தூங்கியே எழுவர்…எழுந்தபின்..        வெல்லத்தான் நினைப்பார் எதையும் எளிதில்,! ஒருவரியில் முழுவதையும் படிப்பதிலே அவசரம்.!         படித்து முடிப்பதற்குள் படுக்கச்செல்ல அவசரம்.! பருவம் வருமுன்னே பாழுங்காதலிலும் அவசரம்.!         பணிசெய்யும் இடத்திலே பதவிக்கும் அவசரம்.! சிட்டாகப் பறக்க வேண்டுமெனும் எண்ணம்..         எந்நாளும் வேண்டா மெனும்நிலை வேண்டும்.! மொட்டாகும் முன்னே பூப்பூக்க நினைத்தால்..         பூவுலகில் எல்லாமே தலைகீழாய் மாறிடாதோ.! கட்டான இளைஞரின் கட்டுக்கடங்கா வேகமது..         காதல் கனிந்திருக்கும் வரைப் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad