கவிதை
அன்பின் அகிலம்
அன்றலர்ந்த தாமரையாய் அந்தமுகம் விலகவில்லை…..
அன்பிற்கு நிரூபணமாய் அன்னையன்றி வேறொன்றில்லை !!
அளவில்லாப் பெருவலியும் அவளுக்குப் பொருட்டில்லை
அவதிகளைத் தாங்கியன்றோ அருமையுடன் ஈன்றாள்பிள்ளை !!
அவள்பட்ட துயரமெல்லாம் அன்றோடு நிற்கவில்லை
அக்கறையாய் வளர்த்தெடுக்க அவள்துயர் எல்லையில்லை
அரும்பாகத் தானுதித்து அரசாளும் யோகமில்லை
அதனாலே கிள்ளையதை அவளென்றும் விலக்கவில்லை !
ஹைக்கூ கவிதைகள்
முதல் காதல் …! முகப் பொலிவோடு நான் முதலாய் அவன் …! முகமறியாக் காதலில் முழுவதுமாய் அவன் …! முப்பொழுதும் அவன் நினைவால் முழுநிலவாய் நான் …! முதல் காதல் முகவுரை ஆகுமா..? முடிவுரை ஆகுமா …?! மூர்ச்சையாகிறேன் நானே…!! **** உலகமயமாக்கல் ! முதுகெலும்பை முறித்து முடக்கியது விவசாயம் உலகமயமாக்கல் …! **** கருக்கலைப்பு கல்யாண நாளன்று கருக் கலைப்பு செய்தாள் தன் காதலை பெற்றோருக்காக…! **** மது – மாது …..! […]
பொன் மானே ..!
பெண் மானே ..! விடியாத இரவினிலே கலையாத உன் நினைவு நித்தம் வேண்டியே பாவிமனம் தவிக்குதடி ! மடியாத நெஞ்சினிலே முடியாத என் ஆசைகளைக் களவாடிட வேண்டியே பாவிமனம் துடிக்குதடி ! படிப்பறிவு இல்லாததாலே அறியாத என் காதலை சொல்லிட வேண்டியே பாவிமனம் பறக்குதடி ! அறியாப் பருவத்திலே அக்னியாய் எனைச் சுட்டவளே நீயருகிருக்க வேண்டியே பாவிமனம் ஏங்குதடி ! என் பொன் மானே ..!!
இளவெயினிற் காலம்
சூழ்ந்திருந்த வெண்பனியும் சுடரொளியால் உருகிடவே
வாழ்ந்திருந்த புள்ளினமும் வடக்குநோக்கித் திரும்பிடவே
ஆழ்ந்திருந்த இருளதுவும் நாட்பொழுதால் குறுகிடவே
தாழ்ந்திருந்த உள்ளங்களும் தளர்நடையாய்ப் புறப்படவே
காய்ந்திருந்த புல்வெளியும் கண்கள்மெல்லத் திறந்திடவே
சாய்ந்திருந்த செடிகொடியும் சிகைவளர்த்துச் சிலிர்த்திடவே
தேய்ந்திருந்த தவளையினம் தனித்தனியாய்த் தாவிடவே
மாய்ந்திருந்த சிறுகொசுக்கள் மறுபடியும் பறந்திடவே
அவள் ஆத்திச்சூடி
அவள் அழகை விரும்பு
ஆணவம் கொள்ளாதே
இன்னலிலும் மறவாதே
ஈடு இணையின்றிக் காதலி
உயிரினுள் கலந்தவளே
ஊடலிலும் கைவிடாதே
எண் உலகமும் அவளே
மார்கழியும் தையும்
எழுந்தீரோ எம்பாவாய் ! மார்கழியில் மாடத்திலே கண்ணயர்ந்த வெண்மதியே … ஆயர்குல மகளிர் விரைந்து உனை எழுப்பும் முன்னே விழித்துக் கொள்ளடி பெண்ணே… பட்டாடையுடுத்தி பட்டு மெத்தையில் பவளமல்லியாய் படர்ந்தவளே … பகலவன் வருமுன்னே எழுந்து தெருவினிலே பாடிவரும் பெண்டிரோடு கலந்து கொள்ளடி பெண்ணே …. தோழிகளே வியக்கும் வண்ணம் உறங்கியவளே … உந்தன் அழகில் மயங்கிய நிலையில் கண்சிமிட்டக் கூட மறந்த பெண்களைக் கண்டாயோடி பெண்ணே ! உறக்கத்தில் கூட பலரை மூர்ச்சை ஆக்கியவளே … […]
பெண்களை அடிமைப்படுத்தாதே !
பொய்யானதே பெண் வாழ்வு பொய்யானதே! கேட்பதற்கு நாதியில்லாஇனமாகிப் போனதே பெண்ணினம்! கேட்பதற்கு நாதியில்லா இனமாகிப் போனதே பெண்ணினம்! வயது ஐந்து கொண்ட சின்ன வண்ணக்குயில் கூட உன் கண்ணிற்குப் பதினெட்டாய்த் தெரிவதேன்? பதினெட்டாய்த் தெரிவதேன்? மன்னன் அந்தப்புர மகளிராய் அடிமைப்படுத்தப்பட்டோம் இன்று வரை அடிமை ஆனோம் இன்று வரை அடிமை ஆனோம்! அரசியல் மேடை ஏறி வென்றால் உன் காமப் பார்வையை பாய்ச்சுகின்றாய் பள்ளியிலும் இதுதான் செல்லும் வீதியிலும் இதுதான் எங்கும் இதுதான் உன்னைப் பெற்றவளும் பெண்தானே […]
சல்லிக்கட்டு – இரு பரிமாணங்கள்
கலங்கிய காளை கழனியிலும் வேலையில்லை களத்தினிலும் பணியுமில்லை கணினிகளைத் தாம் நோக்கி காளையர்கள் போனதனால் கண் கலங்கிய காளை! களத்து மேட்டிலும் வேலையில்லை கம்மாக் கரையிலும் தண்ணீரில்லை கரிசல் காட்டை விலைபேசிய காட்டுமிராண்டிகள் கண் கலங்கிய காளை! கட்டித் தழுவுவார் யாருமில்லை கட்சிக்காரனும் ஆதரிக்கவில்லை கார்மேகமும் கை கொடுக்கவில்லை கட்டிளங் காளையருக்குத் தடை போட்ட பீட்டா கண் கலங்கிய காளை! திரைகடலெனத் திரண்ட தமிழினம் திக்கெட்டும் ஒரே இசை ! என் தமிழனின் பறை இசையடா ! […]
காதல் விளம்பல்கள்
காதல் கொண்டேன் ! தொடாமலே பார்க்கிறேனடி கண்ணாலே கொல்றியேடி துண்டு துண்டா ஆகிறேனடி ஒரே பார்வை பாரேண்டி! எனைக் களவாடியே போறியேடா உன்னாலே உசிறே போகுதடா ஊரார் பார்வை எரிக்குதடா உன் பார்வைக்கு ஏனோ ஏங்குதடா! காதல் காவியம் படைத்திடத் தானடி கடல்கடந்து பொருள் ஈட்ட வந்தேனடி ஊராரை உன் பார்வையால் எரித்துடுடி உன்னாலே உயிர் வாழ்கிறேனடி! எனைக் கவர்ந்த கள்வனடா கரையோரம் விழி வைத்தேனடா கனவினிலே கட்டியணைக்கக் கண்டேனடா கனவு நனவாக சித்தம் கொண்டேனடா! அந்த […]
தலைமுறைகள் …?
கருவேலங்காடு கத்திரிவெயில் வெள்ளையாடை மூதாட்டி ஒருவேளை உணவுக்கு மேய்க்கிறாள் வெள்ளாடு.? உடலெல்லாம் வியர்வை மழை, கோவணம்கட்டிய குடியானவன் ஏரோட்டுகிறான் தான் நேசிக்கும் எருதுக்கு உணவளிக்க.!? காற்றடித்தால் ஓலைபறக்கும், மழையடித்தால் கூரைஒழுகும் குடிசையில் டி.வி மிக்ஸி,கிரைண்டர்!!! இலவசங்கள் குடியேறியும் வறுமையில் வாழ்க்கைத்தரம்? உதவித்தொகைவேண்டி வட்டாட்சியரிடம் சென்றே வாழ்வைக் கழித்த கைத்தடி முதியோர்கள்… ஒத்தரூபாய்க் காசுக்கு கோவில்வாசலில் கால்கடுக்க தவமிருந்தும்… கண்திறக்கவில்லை கடவுள்….?! காத்திருந்து கரிச்சோறு வாங்கி கட்டிலில் கிடக்கும் கிழவனுக்கு ஊட்டிவிட்டு உறக்கமின்றிக் கிடக்கிறாள் இன்னொரு பாட்டி… சமூகத்தை […]