கவிதை
கல்லறை பேசுகிறது
அன்று இளம் பெண்களின் மடியில் புரண்ட நீ இன்று மண்ணில் உறங்குகிறாய் ! அன்று அடிதடியில் இறங்கி ஆயிரம் வாக்குறுதிகள் அள்ளி விட்டு அமைச்சரான நீ இன்று மண்ணில் புல்லுக்குக் கீழே புதைந்து கிடக்கிறாய் ! அன்று பொன் பொருளை ஓடி ஓடித் தேடிய நீ இன்று புல் முளைத்த மண்ணில் புதைந்து என்ன தேடுகிறாய் ? அன்று பெண் பொன் பதவிசுகம் மறந்து மனிதநேயமுடன் மனிதா வாழ்ந்திருந்தால் இன்று நீ மறைந்தாலும் மலர்கள் தூவிய மண்ணுக்குக் […]
பொங்கலோ பொங்கல்
பொழுது சாயும் நேரத்துலே பொதுவான சாலை ஓரத்திலே பொசுங்கும் குப்பைக் கூளமுமே போகி வந்ததென அறிவிக்குமே !! குப்பைக் காகிதம் மத்தியிலே குறுகிய எண்ணக் கசடுகளும் குன்றத் தோன்றிய சுயநலமும் கூடவே சேர்த்துக் கொளுத்துவமே !! மறுநாள் காலை வைகறையில் மலர்ந்து வளர்ந்திடும் ஆதவனை மனதில் நினைந்து வழிபடவே மாநிலம் முழுதும் கூடினரே !! முற்றம் நடுவினில் பானைவைத்தே முனைந்து சுற்றிய மஞ்சளுமே முழுதாய் நிறுத்திய கரும்புடனே மூட்டிய அடுப்பினில் பொங்குதுவே !! கழனி காடு […]
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் !!
வைகறைப் பொழுதினிலே வான்திறக்கும் முன்னமேயே
வைத்திருந்த நீரதிலே வாசலையும் தெளித்தெடுத்தே
வைப்பதற்குப் பூசணியும் வரைந்தெடுத்த மாக்கோலமே
வையமனைத்திற்கும் மார்கழி வந்ததனைச் சொல்லிடுதே !!
ஓசோன் துளை
புறஊதாக் கதிரால் ஆகுமாம்
ஓசோன் படலம்
அக்கதிரால் சிதைவும் அடையுமாம்
ஓசோன் படலம்
மின்சாதனப் பொருளால் வருமாம்
குலோரோ சேர்மம்
ஏ புள்ள……!!!
கஞ்சிக் கலயம் கொண்டு கடைக்கண்ணால் எனைக் கட்டி இழுத்துக் கொண்டு களத்து மேட்டில் நடந்து வயக்காட்டுப் பக்கம் போற புள்ள ….! கட்டழகு மேனியால் இந்த மாமன் மனதை களவாடியவளே வழியில் கள்ளர் பயமிருந்தால் சொல்லு புள்ள கள்ளழகராய் ; கட்டிளங் காளையாக வழித் துணையாக நானும் வாறேன் புள்ள …! கண்ணாலே கதை பேசி கயவரைக் காலால் புறந்தள்ளிவிட்டு கண் நெறஞ்ச மச்சானைக் கண்ணுக்குள்ளே பூட்டி வைச்சு….. கருமேகக் கூட்டம் வருமுன்னே விரசா வீடு வந்து […]
அட்சய பாத்திரம்
எண்ணங்கள் நினைவுகள்
கற்பனைகள் கவலைகள்
காதல்கள் மோதல்கள்
பழக்கங்கள் வழக்கங்கள்
சிந்தனைகள் சிரிப்புகள்
உறவுகள் பிரிவுகள்
காத்திருப்பு
காத்திருப்பு சுகமானது காதலில்
காதலியின் வரவை எதிர்பார்த்துக் காதலனும்
காதலனுக்காக அவளும் காத்திருப்பாள்
கருவாச்சி மனதினுள் பொங்கிடுவாள்….!
கட்டிய கணவனைக் கனிவோடு வரவேற்றிட
கட்டைவிரலால் கோலமிட்டே வாசலிலே நின்றிடுவாள்
அறிந்தும் அறியாமலே….!!!
உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உன் நினைவைச் சுமந்த ஞாபகங்கள்
இரவிலும் விழித்திருக்கும் என்பதை
உணர்ந்தாயோ?
கட்டழகு மேனியில் கரைந்த பொழுதையும்
கள்ளச்சிரிப்பில் உறைந்த கனத்தையும்
காகிதக் கப்பல்கள் !
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
காணாத அழகு
அவளின் உதட்டுச் சிவப்பைக் கண்டிருந்தால்
இளங்கோ சிலப்பதிகாரம் எழுதாமல்
சிவப்பதிகாரம் எழுதியிருப்பாரோ ?
அவளின் குரலைக் கேட்டிருந்தால்
வள்ளுவன் குறளை எழுத மறந்து
குரலை ஆராய்ந்து எழுதியிருப்பாரோ?