கவிதை
மனிதத் தத்துவம்
மனிதனே…
உன்னையே திரும்பிப் பார்
உள்ளம் சென்ற வழியில்
துள்ளித் திரிந்தாய்
இளமையில்….
இருப்பது பொய்
போவது மெய்
உணர்ந்து கொண்டாய்
முதுமையில்….
தீபாவளி ஃப்ளாஷ்பேக்
கொளுத்திப் போட்ட பட்டாசு கதைகள் பலவும் சொல்லிடுது….. குழந்தைப் பருவ தினங்களிலே குதூகலம் நிறைந்த தீபாவளி…. மாதம் இரண்டு முன்னமேயே மாறாது மலர்ந்திடும் கனவதுவே…. முழுதாய் நீளும் கால்சட்டையோ முன்னம் போலே அரைக்காலோ தந்தை சற்று மனம்வைத்து தனக்குப் பிடித்ததைத் தருவாரோ? விரும்பி வாங்கிய துணிமணியை விரைவாய் டெய்லரும் தைப்பாரோ… தினமும் அவரின் கடைசென்று திரும்பி வந்தோம் வெறுங்கையாய் !! முந்தைய தினத்தின் நள்ளிரவில் முடித்தே கொடுக்க, மகிழ்ந்தோமே !! தெருவில் முதலாய் நம்வீட்டில் தெறிக்க வேண்டும் […]
கவித்துளிகள்
இயற்கையின் சாரல் வறட்சியின் வெற்றி மழைத்துளி மண்ணைத் தொடும் வரை… வந்தபின் வறட்சியின் சுவடு மறைந்தே போய்விடும்…. மண்ணின் வாசமும் மழையின் சாரலும் மகிழ்ச்சியில் மனம் இலேசாகி நம் நாசித் துவாரங்களை ஊடுருவும் ….!! தளிர்கள் செழித்து செடியாகி செடி நுனியில் வண்ணமிகு மொட்டுக்கள் நாணி மலர்ந்து தலை துவட்டும் …..!! மொட்டுக்கள் நனைந்திடக் கூடாதென இலைகள் கேடயக் குடைகளாகும் காற்றின் சலசலப்பில் இலைக் குடைக்குள் மறைந்தபடி கண்ணாமூச்சி விளையாடும் மழைத்துளிகளோடு…..!! மனம் கமழ் பூமணங்கள் காற்றில் […]
மனித வாழ்வின் தத்துவம்
“அன்னை” என்பதும் மூன்றெழுத்து
“தந்தை” என்பதும் மூன்றெழுத்து
ஆவர்களுக்கு பிறக்கும் “மகன்” அல்லது
“மகள்” என்பதும் மூன்றெழுத்து
ஆவர்கள் பேசும் மொழி
“மழலை” என்பதும் மூன்றெழுத்து பெற்றோர்
மானிட வாழ்வின் நெறி
அன்பை வளர்க்க வேண்டும்
ஆணவத்தை ஒழிக்க வேண்டும்
இனிமையாக பேச வேண்டும்
ரூடவ்கைகுணம் வளர வேண்டும்
உண்மை பேச வேண்டும்
அழகே உன்னை ஆராதிக்கிறேன்
சோழர் கல்வெட்டில்
உன் அழகு பொறிக்கப்பட்டிருக்கும்
நீ இராஜராஜன் காலத்தில் பிறந்திருந்தால்…..
பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில்
நீ பிறந்திருந்தால்
சங்கம் வளர்த்த மதுரையை
தீக்கிரையாகாமல் காத்திருக்கலாம் ….
முகமறியாக் காதல்
முகம் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
முகமறியா முகப்புத்தகத்தில்
முதல்வனாய் என்னுள் முளைத்த
மூன்றெழுத்துக் காதலுக்கு …!!
மனதில் தோன்றிய முதல் காதல்
மனிதனாய்ப் பிறந்ததன் பயனை அறியச் செய்த காதல் …
மனிதனுள் புதைந்த சுவடுகளை
மனதினுள் புகுந்து வெளிக்கொணரும்
மகத்துவமே காதல் ….!!
ஏண்டியம்மா எங்க போற?
வயக்காட்டில உழைச்சுக் களைச்ச
மாமன் மனசை விரசாப் போயி
முந்தானையில் அள்ளி முடிய
முந்திட்டுப் போறியோ….
ஏக்கங்களை நெஞ்சில் வச்சு
எட்டி நின்னு பார்த்த பொண்ணு
மாமன் கையில் தாலி வாங்க
துள்ளிக் குதிச்சு போறியோ…
கவிதைக் கண்கள் !
உன் பார்வைகள்
என் மீது
பட்டுத் திரும்பியபோது
என் உடம்பில்
புது இரத்தமே பாய்ந்தது !
என் இதயம்
எல்லாம்
கவிதைகள் நிரம்பின !
கற்கை நன்றே !!
பொட்டல் காடெல்லாம் புழுதியாப் பறக்குது
நட்டநடு வீட்டடுப்பில் நாய்பூனை தூங்குது
கட்டடம் கழனியெல்லாம் கனவுபோல மறையுது
பட்டமரம் போலவெங்கும் பஞ்சமாத் தெரியுது…..