கவிதை
நேர்மைக் காதல்
கன்னியிவளைக் காதலிக்கும் வேளையிலே
கண்களிரண்டிருந்தும் காட்சியிலாக் குருடனாயிருந்தேன்
கண்ணொத்த கன்னியவள் காதலினால்
கருத்தொருமித்துக் கண்களாயிருப்பாளென்ற கற்பனையால்.
அகம்புறமென அறுபதுக்குமேல் செய்யுளறிந்தும்
அறிவிலியாய் இருப்பதே அவளின்கவனமென
அமைதியாய் வாழ்ந்திருந்தேன் அந்நாளில்
அணங்கவளின் கடைப்பார்வை என்மேல்விழுமென…
இது கவியல்ல நிஜம்
வித்தகக் கவி நானென்று விண்டுரைக்க வரவில்லை முத்திரைக் கவி நானெழுதி மூண்டெள முயலவில்லை கொத்துக் கொத்தாய் எம்மவர்கள் செத்து விழுந்தபோதும் தத்துவங்கள் பேசியிங்கே தரித்திரராய் வாழ்ந்திடுவோம் மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து மடிந்திடும் நிலைதான் கண்டும் என்னுயிர் பிழைத்தல் வேண்டி ஒதுங்கிநான் நிற்கக் கண்டு முன்வாயிற் சொற்கள் சேர்ந்து முரண்டு பிடித்தெனைக் கொல்ல என்னுடல் நிமிர்ந்து நானும் ஏற்றந்தான் காண்பதெப்போ சாப்பாடு இன்றியங்கே தமிழ்ச்சாதி சாகக்கண்டும் காப்பீடு ஏதுமில்லாக் காரியங்கள் நாங்கள் செய்து ஏற்பாடு ஏதும் […]
எசப்பாட்டு – வளர்ச்சியோ வீழ்ச்சியோ?
நாடாரு கடையதிலே
நாலாறு பொருள்வாங்க
நான்நடந்து போனதினம்
நாபகமா வந்துருச்சு….
நாகரிகம் வளந்துதுன்னு
நாட்டுப் புறத்திலயும்
நாம்பாத்து நடக்கையிலே
நாலஞ்சு லைன்கடைங்க…
காணாமல் போன வாழ்வு
இன்றைய மாலைப் பொழுதில்
விசாரணைக்கென வந்திருந்த
இராணுவ அதிகாரியின்
அதட்டல் நிறைந்த விசாரணையில்
நான் ஆடிப்போய் விட்டேன்
வழமை போலன்றி
மழலைதரும் மதுபோதை
உம்மாவில் ம்மழுந்தயென் கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளங்கால் உச்சிமட்டும் கணமதிலே மாய்த்திட்டாள்
முட்டியிலே கைவைத்து முழுகாலை நான்பிசைந்தால்
முனகியவள் மெய்மறந்து கிறங்கியே கிடந்திருந்தாள்
பார்த்திருந்த பொழுதினிலே உமிழதனை இதழுகுத்தாள்
வசீகர வஞ்சி
கன்னல் மொழி பேசும் காரிகை
கவிஞன் எழுதிடப் பிறக்கும் பேருவகை
கரும்பென இனித்திருக்கும் அவள் இடை
கைதேர்ந்த ஓவியன் காமுறும் தூரிகை
வாய்திறந்து பேசிட உதிர்ந்திடும் நன்முத்து
மறை நூலில் இறை வாக்கு
புனித வெள்ளி மலர நிறை ஞாயிறு ஒளிர மறை நூலின் இறை வாக்கு குறையறப் பொளிர்ந்து இறை மகன் இயேசு இரத்தமும் உடலுமாய் இங்கும் அங்கும் எங்கும் நிறைந்து உயிர்த்த காட்சி மனம் மகிழ்ந்தது இனம் களித்தது குணம் தெரிந்தது கனம் பொருந்தியது மானுட இரட்சிப்பு பரம பிதா பரன் வாக்கு – ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்
சோர்ந்து போகாதே ! மனமே !
துச்சினான் இறைமகன் இயேசு, சிலுவை மரத்திலே வஞ்சிமகன் அவள் கன்னித்தாய் பார நெஞ்சினிலே.. கெஞ்சிய நெஞ்சத்தோடு பரனைப் பார்க்கையிலே.. எஞ்சிய வார்த்தை “இதோ உன் மகன்” கேட்கையிலே தஞ்சியே வாழ “இதோ உன் தாய்” அரவணைப்பிலே வாழு மனிதா ! வாழு ! உலகம் எஞ்சிய அளவிலே உயிர்த்தார், ஜெயித்தார் ஜெயராஜன் உனக்கே !!! – ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்
தொலைந்து போன சுகங்கள்
காலை வேளையில் பனிமூட்டம் சுகம்
சாலை வளைவில் பூந்தோட்டம் சுகம்
மாலைத் தென்றலில் முகிற்கூட்டம் சுகம்
சாரல் மழையின் நீரோட்டம் சுகம்.
எசப்பாட்டு – அக்கரை பச்சை
காசு பணம் அதிகமாக கைகளிலே புரளுமுன்னு காடு கழனி எல்லாம் விட்டு காத்துப் போல பறந்து வந்தோம் அசல் நாட்டு வாழ்க்கையிலே அமைதிக் கொரு பஞ்சமில்ல அன்பாகப் பழக வுந்தான் ஆளுக்கொரு குறைவும் இல்ல கொஞ்ச நாள்ல போயிரவே நெஞ்சு முழுசும் ஆசையிருக்க பிஞ்சுப் புள்ளைகள நினைக்கயிலே அஞ்சும் நம்மனசு மறுக்கவில்ல நம்மப் பெத்தவுக நடுத்தெருவுல நிக்க விட்டு நாம பெத்தவுக நலம் நெனக்கும் செய்கையிதோ? – வெ. மதுசூதனன். […]