\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கவிதை

வாலி

Filed in இலக்கியம், கவிதை by on August 7, 2013 2 Comments
வாலி

வில்லாடி வெல்ல முடியாததை ஒளித்து மறைந்தாடி வதைத்தாய் வாலியை அன்று! சொல்லாடி வெல்ல இயலாததை நினைத்து நோயாடிக் கொண்டாயோ வாலியை இன்று? விண்ணுலகில் வாழ்த்திசைக்க இசை வித்தகரை வரிந்து வாரங்களாகவில்லை! விளைந்த சோகம் விலகுமுன், அவர்உனை வாழ்த்தும் பாடலுக்கு வரியெழுத விரைந்தழைத்தாயோ எங்கள் வரகவியை? தரைமேல் பிறந்து தண்ணீரில் மிதந்தான்! மனம்போன போக்கிலே மனிதனவனும் போனான்! அளவோடு ரசித்து அளவின்றிக் கொடுத்தான்! ஊனக்கண்ணால் பார்த்து யாவும் குற்றமென்றாயே! மெய்யென்று மேனியை யார் சொன்னது? மூன்றெழுத்து மூச்சு முடிந்தாலும் […]

Continue Reading »

நட்பு

Filed in இலக்கியம், கவிதை by on August 7, 2013 2 Comments
நட்பு

உடுக்கை இழந்தவன் கைதானோ – உள்ளக் கிடக்கை உணர்ந்தவன் அவன்தானோ படர்க்கை நிலையினில் வாழ்ந்திடிலும் நெஞ்சப் பதைப்பை உணர்ந்திடும் செவிதானோ!   இடுக்கண் களைவானோ இடித்து உரைப்பானோ எடுத்த வினைகளெலாம் எதிர்த்து வெற்றியுற மடுத்த செவிகளுடன் மரணம்வரை வருவானோ அடுத்த அன்னையென அருகிருக்கும் நட்பவனோ!!! – மதுசூதனன் வெ. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அவிழும் உடுப்பணிந்த அந்தக் காலத்தில்  அமிழ்தும் இருந்தது நீயுரைத்த நட்புறவில்! அழிந்துவரும் இன்றைய அவசரக் கோலத்தில்  அழகான அவ்வுறவுஇல்; அவிழா உடையணிகிறோம்! – ரவிக்குமார் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ […]

Continue Reading »

அன்னை மண்ணே…

Filed in இலக்கியம், கவிதை by on August 7, 2013 2 Comments
அன்னை மண்ணே…

அன்னை மண்ணே. அன்னை மண்ணே! சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா? கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் துடுப்பை இழந்த படகாய் எங்கள் வாழ்க்கை போனதம்மா வலிகள் சுமந்து புது வழிகள் தேடி விழிகள் அலைவதேனோ – எங்கள் மொழிகள் இழந்து மௌனியாகி வாயும் மூடியதேன்? யுத்தம் விளைந்த பூமியில் நாங்கள் செத்துப் பிழைக்கின்றோம் – தினம் ரத்தம் சிந்தி கொட்டும் போர் மழையில் செத்து மடிகின்றோம்! உண்ண […]

Continue Reading »

கடவுள்

Filed in இலக்கியம், கவிதை by on August 7, 2013 1 Comment
கடவுள்

கடவுள் என்றுண்டோ கற்பனை அதுதானோ கருத்துத் தெளிவதோ கலங்கிய குளமதோ கனவினில் உறைபவனோ கருத்தினை உரைத்தவனோ கதிரவனாய் ஒளிர்பவனோ கருஇரவில் கரைந்தவனோ கருணைக் கண்களோ கரம்மீது வாட்களோ கன்னியின் வடிவமோ கட்டிளங் காளையோ கருப்பு வண்ணமோ களைமிகு நல்லுருவமோ கங்கைத் தலையனோ கயலவள் மறுபாதியோ கன்னிகள் கேள்வனோ கற்பினுக் கரசனோ கனகத்தின் அதிபனோ கந்தலுடை யாசகனோ கள்வனின் காதலனோ களம்கண்ட காவலனோ கதைபல கொண்டவனோ கதைக்கவொண்ணா நிஜமவனோ கடவுள் ஒன்றுண்டோ கண்டவர் எவருளரோ கண்டிலாப் பொருளன்றோ கருத்தினில் […]

Continue Reading »

வ(ச)ந்த காலம் மாற்றம்

Filed in இலக்கியம், கவிதை by on May 31, 2013 0 Comments
வ(ச)ந்த காலம் மாற்றம்

நேற்றைய மாலைப் பொழுதில்

என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி

துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி

குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. .

வசந்தகாலத்தின் வரவுக்கண்டு

மரங்கள் குருத்தெறிந்து

மொட்டுவிட்டுக் கருத்தரிக்க

கொட்டும் மழையில்

தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து

அம்மணமாக நின்றன.

Continue Reading »

அன்னையர் தினக் கவிதை

அன்னையர் தினக் கவிதை

கற்பனையாய் நிலநிறை கடவுளர் பலரிருக்க
கனிந்துருகி நிதந்தோறும் கரங்கூப்பி நான்வணங்க
கண்விழித்து நான்கண்ட முதற் கடவுள்
கலையாமல் நிலைகொண்டாள் முழுதாய் என்னுள்!

Continue Reading »

கட்டிலாகக் கல்லறையும் உணவாக எலிக்கறியும்

Filed in இலக்கியம், கவிதை by on May 31, 2013 0 Comments
கட்டிலாகக் கல்லறையும் உணவாக எலிக்கறியும்

வந்தோரை வாழவைத்தாய், பழையதையும் பகிர்ந்துண்டாய்
வான்முட்ட சின்னங்கள் வனப்பாக நீயே செய்தாய்
விண்மீன்கள் தோற்கடித்துக் காவியங்கள் பல படைத்தாய்
வீரத்தின் விளைநிலமே, பலபோரை கண்டுவிட்டாய்
உன் படைப்பில் நீ மெச்சும் ஒன்றேதென்றால்
ஊனுருக்கி நீ செய்த உன் குழந்தைதானே என்பாய்

Continue Reading »

யாக்கை நிலையாமை

Filed in இலக்கியம், கவிதை by on May 31, 2013 0 Comments
யாக்கை நிலையாமை

பகலவன் எழுந்தாட
பனித்துளி பறந்தது

புள்ளினம் இசைபாட
புதுதினம் உதித்தது

கடிகாரம் வசைபாட
கனவு கலைந்தது

Continue Reading »

கலாம்

Filed in இலக்கியம், கவிதை by on May 31, 2013 0 Comments
கலாம்

அறிஞரை மதிக்கலாம்; அன்னையைத் துதிக்கலாம்! அறிவியல் பெருக்கலாம்; அழகுகள் சமைக்கலாம்! அறநெறி உரைக்கலாம்; அல்லவை தவிர்க்கலாம்! அறிவாட்சி சிறக்கலாம்; அசதியைத் துறக்கலாம்! அறிவை வளர்க்கலாம்; அழிவைத் தடுக்கலாம்! அன்பைப் போதிக்கலாம்; அநீதியை எதிர்க்கலாம்! அணுவைப் படிக்கலாம்; அகிம்சை பழக்கலாம்! அக்னியை ஏற்கலாம்; அவனியை அணைக்கலாம்! கற்பதை நினைக்கலாம்; கசப்பதைத் தொலைக்கலாம்! கருணையில் திளைக்கலாம்; கர்வத்தை மறக்கலாம் களைப்பினைத் துடைக்கலாம்; களிப்புடன் சிரிக்கலாம்! கண்ணியம் வரிக்கலாம்; கடுந்தவம் தரிக்கலாம்! கழனியில் உழைக்கலாம் ; கணினியில் கதைக்கலாம்! கன்னித்தமிழ் கற்கலாம் […]

Continue Reading »

எசப்பாட்டு

எசப்பாட்டு

எசப்பாட்டு என்பது ஒரு கருத்தினை விவாதிப்பது போல இரு தரப்பினர் பாடும் பாடல் வடிவம். மிகப் பழமையான பாடல் முறைகளில் இதுவும் ஒன்று. கிராமப்புறங்களில் வயல் வேலைகளில் ஈடுபடுவோரும், கடுமையான வேலை செய்பவர்களும் உடல் அசதி தெரியாமல் இருக்க இவ்வகை பாடல்களைப் பாடுவார்கள். ஒருவர் பாடலின் ஒரு பகுதியைப் பாடியதும், அதற்குப் பதிலளிப்பது போல ஏளனம் செய்தோ, பதில் கொடுக்கும் வகையிலோ மற்றவர்கள் பாடுவார்கள். லாவணி பாடல் என்பதும் எசப்பாட்டின் ஒரு வகை. திரைப்பாடல்களிலும் இது கையாளப்பட்டிருக்கிறது. […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad