கவிதை
காதல்
சிந்தும் மழைத்துளி போலே சந்தம் பொழியுது உள்ளே எதிலும் அழகைக் கண்டேன் மண்மேலே காணும் கனவுகள் மெல்ல வானம் தழுவுது இங்கே நெஞ்சம் நிறைகிறதின்பம் தன்னாலே பூக்கள் பொழிந்திடும் என்னுயிர் வாசம் வீசும் மரங்களும் செம்மொழி பேசும் கொஞ்சும் பறவைகள் கண்ஜாடை பேசும் மலைதனில் நதி வந்து ஜதிகளைப் போட, கரைதனில் நுரைவந்து அலைகளைத் தேட துளிர்விடும் நினைவுகள் தொடுவானம் சேரும் சரணம் 1 விண்ணோடு மேகம் வந்தாடும் நேரம் மண்ணோடு வாசம் என்மீது வீசும் கண்ணோடு […]
வந்த காலம் இது வசந்த காலம்
சித்திரை தாண்டி வைகாசி வந்ததும் – நம்மூர்
கத்திரி வெயில் தான்
பட்டென மனதில் தோன்றி மறைகிறது
இது இப்போது இனிய வசந்த காலம்
புல்வெளி மூடிய பனிப்புயல் போய்
புல்நுனி தூங்கும் பனித்துளி பார்க்கிறேன்
கொட்டும் மழையில் வட்டக் குடைபிடித்து
வசந்தத்தை நான் வரவேற்புச் செய்கிறேன்
இது குற்றமில்லை! வெறும் பருவமாற்றம்!
பட்டமரங்கள் துளிர்த்திடக் கண்டேன்!
கலி முற்றிட வில்லை!
காய்ந்த புல்வெளி பிழைத்திடக் கண்டேன்!
இது அதிசய மில்லை!
வெண்ணிறச் சாலைகளவை கறுத்திடக் கண்டேன்!
அடைந்ததென்ன? இழந்ததென்ன?
இலவசம் – அடைந்ததென்ன? இழந்ததென்ன?
சந்தையிலே விற்பதற்கு – மண்ணெண்ணை இலவசம்
சாதிச்சலுகை பெயரில் – வேலையுமே இலவசம்
மின்னிணைப்பு இல்லை – தொலைக்காட்சி இலவசம்
மீளாத்தடங்கல் என்றும் – மின்சாரம் இலவசம்
உன்னுரிமை வாக்களிக்க – ஐநூறு இலவசம்
ஊன்வளர்க்க அரிசிகூட – மலிவுவிலை இலவசம்
மினசோட்டா
கனடாவின் எல்லைக் கோடாய்
அதன் உறவுப் பாலமாய்
கனடாவுடன் இணைத்தும் பிரித்தும்
அழகான அமைவிடத்தில் மினசோட்டா
இது கவிதைக்கான வெறும்
கற்பனைச் சிதறல்கள் அல்ல
உண்மை ஊற்றுக்களின் பிரவாகம்
பகுத்தறிவு
பகலிரவு கண்விழித்துப் பலகாலம் தவமிருந்தேன்
சகம்முழுதும் காத்தருளும் சர்வேசன் வரவுநோக்கி!!
தகதகக்கும் பிரகாசமாய்த் தன்னிகரிலாக் கருணையுடன்
அகமுவந்து முன்னுதித்து அன்புடனே வினவிட்டான்
பெண்
விடியலின் கதிராய், வெள்ளியின் குளிராய்
விளக்கின் ஒளியாய், வெண்சங்கின் ஒலியாய்
விருட்சத்தின் விதையாய் வேள்வியின் பயனாய்
வினையிருக்கும் அவளிடத்தில் வீச்சிருக்கும்!
பனிக்கோலம்
சீவ நதி வற்றி போகும் – வறட்சி இல்லை
பட்ட மரம் மலர் சொரியும் – மாயம் இல்லை
துளையிட்டு மீன் பிடிப்போம் – பசியும் இல்லை
ஒல்லியனும் குண்டாவான் – கொழுப்பும் இல்லை
கனவு மெய்ப்பட வேண்டும்
உழுவோர் ஊணுண்டு செருக்குற
நிலமிது வளம்பெற வேண்டும்!
உழைப்போர் உரிமையுடன் ஓய்வுற
நிலவது வசப்பட வேண்டும்!
தவிப்போர் தாகம் தீர்த்திட
தடையறு தண்ணீர் வேண்டும்!
அணைப்போர் அணைந்தே ஒழிந்திட
அடைமழை பொழிந்திட வேண்டும்!