\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கவிதை

அன்னையர்க்கு அர்ப்பணம்

அன்னையர்க்கு அர்ப்பணம்

கையினிலே கல்லொன்று கனத்திட்டால் களைந்திடுவோம் தோள்களிலே தொங்கியதை தேவையென்றால் தவிர்த்திடுவோம் முதுகில்சிறு மூட்டையென்றால் முழுவதுமாய் மறுத்திடுவோம்  அவ்வளவேன், அரைக்கிலோ அரிசிதூக்க அழுதே அலறிடுவோம்!!   மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள்!!!   உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக உயிரும் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது!!   சிசுவது சிரிப்பதற்கும் சிரந்தூக்கிச் […]

Continue Reading »

இப்போது வேண்டுவதெல்லாம்

இப்போது வேண்டுவதெல்லாம்

பனி விலகி வசந்த காலம் வந்தது   தொட்டுவிடும் தூரத்தில்   கோடை எட்டிப் பார்க்கிறது!   காட்டாற்றின் கரையதனில்  கதையளந்த காலம் போய் கையறு நிலையில்மனிதர்கள் நாம்   சுவரில் ஒட்டிய பல்லிகளாய் – இன்னும் மடித்துப் போடப்பட்ட காகிதத் தாள்களாய்  கசங்கிக் கிடக்கின்றோம் தனி அறைகளில்   பல்லாயிரம் உயிர் தின்றும்  அடங்காது ஆர்ப்பரிக்கும் பூதமாய்  இன்னும் வேண்டும் என அடம் பிடிக்கிறது  இந்தக் கொடூர கொரோனா!!    உலக மீட்பர்கள் தாங்கள் என்று  தமக்குத் தாமே […]

Continue Reading »

சாபம் பொய்யாகட்டும் ….

சாபம் பொய்யாகட்டும் ….

மகா அசுரன்  கொரோனாவின் கோரத்தாண்டவத்திலும்  இனிய பல சம்பவங்கள்  நிஜமாய் நிகழும்போது,,,, கல்மனம் கொண்ட மனிதனே உதவும் உள்ளங்களாக   உலவும் போது,,,, கடவுளே கதவைச் சாத்திக்கொண்டபோதும், எமனே அஞ்சி ஒதுங்கிட,   மருத்துவர்களோ…. கொரோனாவையும்  நோயாளியையும்  சவாலோடு சந்திக்கும்போது…. (சில )மனிதனே உன் இதயத்தில் இன்னுமா இரக்கம்  பிறக்கவில்லை???   நீ காட்டுவாசியானதேனோ? மிருகத்தனமாய் தாக்குதல் தொடுத்து  மருத்துவரின் மரண உடலையே கதறவைத்தாயே…  சர்வ வல்லமையும் கொண்ட சமூகமே அதிர்ந்து போனதே…    நீ , கொரோனாவை […]

Continue Reading »

கொரோனா

கொரோனா

மென்மை எனும் இப்பூவுலகின்   உண்மை நிறம் தன்மை மாற வன்மை கொண்ட மண்ணை ஆள்பவன் திண்மை நிரம்பி அதனை மாற்ற    வந்ததோர் பிணி உலகில் மரித் தோர் பிண லட்சம் தரித் தோர் நுனி உயிரில் காத் தோர் எனக் கடவுள்    நெஞ்ச மது பதைப தைக்க அச்ச மது அதைச்சி தைக்க தஞ்ச மது தனிமை யிருக்க மிஞ்சி யது மனிதம் காக்க   காப் பாய் மனித சேனா வாழ்! தீய […]

Continue Reading »

கொரோனா பயம்

கொரோனா பயம்

காலம் பொன் போன்றது  இப்போதைக்கு விட்டு விடுங்கள் உயிர் அதைவிடப் புனிதமானது  பயணத்தை நிறுத்துங்கள்  உலகை உருவாக்கும் முயற்சியில்  உங்கள் வாழ்க்கையை ஒப்புவியுங்கள் கண்களில் ஒளிக்கீற்றை வரவழைத்து  மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் நம்பிக்கை என்ற ஒரு சிறு சொல்லே காலத்தை மாற்றும் அற்புதம் என்று  நம்புவோமாக இதயத்துடன் இதயம் பேசுவோம் சொற்கள் மௌனித்து போகுமுன் உமக்காய் இன்னும் உம் மக்களுக்காய்  உங்கள் கைகளைக் கழுவுங்கள் மரணத்துக்காய் திறக்கப்பட்ட பெருங் கதவை முழுவதுமாய் மூட உதவுங்கள் வெற்றுச் சாளரங்களின் […]

Continue Reading »

நீ கேட்டால் நான் மாட்டேனென்று

நீ கேட்டால் நான் மாட்டேனென்று

அவளருகே சென்றேன்.. அவயங்களைப் பருகினேன்.. அணைக்க முயன்றே அருகினில் நெருங்கினேன்… அதெல்லாம் இருக்கட்டும், அங்கேயே நில்லென்றாள்.. அங்கம் தொடாமலே அன்பினைக் காட்டென்றாள் …. காதலின் ஸ்பரிசம் காற்றுப்புகா நெருக்கம் காமனவன் கணைதவிர்த்துக் காத்திடும் மருந்துமன்றோ! காததூரம் நிற்பதற்குக் கால்கடுக்க வந்ததேனோ? காதலியே சற்றுமென்னைக் காருண்யமாய் நோக்கிடென்றேன்! இன்பமொரு எல்லைக்குள் இருப்பதுவும் முறைதானே இன்றந்தப் பெருமாசை இதயத்துள் எழுந்ததென இல்லத்துள் நீபுகுந்து இக்கணமே வாவென்பாய் இப்பேதை கொள்கவென இலைவிரித்துப் பரிமாறவோ? சாக்காடு என்றென்று சான்றோரும் கண்டிலரே சாதல் வருவதற்குள் […]

Continue Reading »

உழவுத் தொழில்

உழவுத் தொழில்

காலையில் எழுந்து கதிரவன் தொழுது கடமையை நாளும்  செய்திடுவோம்!       கதிரவன் கொடுத்த   உழவுத்தொழிலை உயிர்மூச்சென்றே  போற்றிடுவோம்! பஞ்சமில்லாமல் பார்ப்பதுயெல்லாம் பாரினில் அவனின்  செயல்தானே! வஞ்சனை செய்து   வாழ்வை அழித்தால் வீழ்வது பூமியில்  நாம்தானே! உழவுத்தொழிலை  உயிர்மூச்சாக்கி உழைத்தது நமது  நாடன்றோ!   உழவர் வாழ்வை உயர்த்தச் செய்வது உயர்ந்தோர் செய்யும்  செயலன்றோ!   பசியைப் போக்கிடும் உழவர் வாழ்வினில் பட்டினிச் சாவினைத்  தடுத்திடுவோம்!   பசுமை நிறைந்த பாரினைக் கண்டிட உழவர் வாழ்வினைப்  […]

Continue Reading »

இதுவா வாழ்க்கை?

இதுவா  வாழ்க்கை?

தொலைக்காட்சிப்   பெட்டிநம்மின் வீட்டிற்   குள்ளே தொகைகொடுக்க   வந்தபின்னே புத்த  கங்கள் விலைகொடுத்து   வாங்குவதை நிறுத்தி   விட்டோம் வீற்றிருந்து   படிப்பதையும் விட்டு  விட்டோம் ! அலைபேசி   நம்கைக்கு   வந்த பின்போ அழகான   கையெழுத்தில்   நலங்கள் கேட்டுக் கலையாக   எழுதிவந்த   கடித மெல்லாம் காணாமல்  போனதுவே கையை   விட்டே !   பொன்னாக   மேசையின்மேல்   கணினி வந்தே பொலிவாக  […]

Continue Reading »

காதல் தோல்வி

காதல் தோல்வி

காலையில் எழுந்ததும்.. கன்னியின் நினைவு.. காலம்பல கடந்தும் கருமையின் அதிர்வு கால்கள் அனிச்சையாய்க் கழிவறை அடைந்ததும் காத்து வைத்திருந்த, கசங்கிய புகைப்படம்   ரகசியமாய் எடுத்து ஒருமுறை ரசித்ததும் ரதியவளின் சிரிப்பு கசங்கலின் மத்தியில் ரணங்களைக் குணமாக்கும் வெண்ணிறப் பற்கள் ரகமான வரிசையில் ரசனையுடன் நடமாடியது!   ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் ஒருத்திக்காகவே உயிர் வாழ்ந்த உண்மை ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு உணர்வும் ஒருத்தியோடு இணைந்து உயர்ந்த பெருமை!   மிதிவண்டி ஏறி மின்னலெனப் பறப்பவன் […]

Continue Reading »

மை பூச ….

மை பூச ….

அஞ்சு வருசத்துக்கு ஒரு வாட்டி கெஞ்சிக் கூத்தாடி வருவாண்டி…… கொஞ்சிப் பேசித் தலையாட்டி வஞ்சிக்க வழிபாத்து நிப்பாண்டி…… கையக் காலைப் புடிச்சுத்தான் பொய்யப் புளுகைச் சொல்வாண்டி செய்ய முடியாச் செயலெல்லாம் மெய்யா நடக்கும்னு விடுவாண்டி …… மானங் கெட்ட பொழப்பாலே போன வருசம் அடிச்ச கொள்ளை தானப் பிரபுவாத் தான் மாறி வானம் வழியாக் கொடுப்பாண்டி …. தண்ணி நீஞ்சும் மீன் புடிக்க பண்ணி வைச்ச புழுவதுடி….. கண்ணி வச்சு மான் புடிக்க பின்னிப் பிணைஞ்ச வலையதுடி […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad