கவிதை
கயமைக்குக் கல்லடி
கடவுளரைப் பழித்திடும் கருங்காலிக் கூட்டமது கண்ணியம் இன்றியே குரைப்பதும் தொடர்ந்திடுது கைகளில் ஒலிப்பெருக்கி கைதட்டச் சிறுகூட்டம் கண்ணனின் லீலைகளைக் காலித்தனமாய்ப் பேசியது! கருத்துத் தெளிவாய்க் கைகுவித்துக் கேட்டிட்டால் கருணை பலகொண்டு கனிவாய் விளக்கிட கடுந்தவம் புரிந்து கைங்கரியம் பலசெய்த கடவுள்நிகர்ப் பெரியோர் கண்டம் முழுதுமுண்டு!! கலகம் விளைவித்தால் கல்லா நிறையுமென்றும் கண்மூடித் தாக்கிட்டால் கனகம் கிடைக்குமென்றும் கடவுளரை ஏசிட்டால் கணக்கின்றிக் கொட்டுமென்றும் காசொன்றே குறிக்கோளான கயவர்களை நிராகரிப்போம்! கயவான சொல்லதற்குக் கருத்தாய் மறுப்புண்டோ கதிகலங்கி நின்று கண்ணீர்விடும் […]
நாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன்
ஏதோ ஒரு நிறுவனத்தின் இலவசப் பரிசாக அவனிடம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வந்து சேர்ந்த நாட்குறிப்பு நான் ! புதிதாய்ப் பரவசத்துடன் என்னைக் கையிலெடுத்தப்போது என்னுள் அவன் உதிர்த்த உறுதிமொழிகளை அடிக்கடி நினைவூட்டியபடிதான் இருக்கிறேன் ! எழுதப்பட்டிருந்த வரிகளில் அவனது கடந்த காலத்தை காட்டிக் கொண்டிருக்கிறேன் என்றே என்னைப்பற்றி அவன் எண்ணுவதுண்டு ! ஏனோ அவனுக்கு வருவாயை வங்கியிலும் வாழ்க்கையை எனக்குள்ளும் சேமிக்கத் தெரியவேயில்லை ! அன்றாடமில்லை என்றாலும் என்றோ சில நாட்களில் எழுத்துப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தேன் நான் […]
நான் நானில்லை
நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்! வரிக்கிறீர்களே என்னைப்பற்றி அதுவல்ல நான்! வசப்பட்டதில் வசித்துக்கொண்டிருக்கிறேனே அதுவுமல்ல நான்! என் சிறகுகளை பார்த்திருக்க முடியாது நீங்கள். ஏனெனில் அவை முழுமையாய் விரிக்கப்பட விடவேயில்லை! ஒருவேளை கட்டுக்களை விடுவித்து என் சிறகுகளை விரித்திருந்தால் நான் யாரென பாதியாவது தெரிந்திருக்கும்! நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்! – ருக்மணி
ஆச்சர்யக்குறிகள்
கேள்விக்குறிகளான மெய்யை ஆச்சர்யக் குறிகளாக்கும் மாற்றுத்திறனாளிகளே! திறமைகளின் குவியலே! தன்னம்பிக்கையின் உருவமே! விழிகள் செயலிழந்தவர்களே! உங்கள் வாழ்க்கை விழி திறந்து படிக்கப்பட வேண்டிய பாடம்! கைகள் இழந்தவர்களே! தன்னம்பிக்கை தந்திடும் உங்களின் போராட்ட வாழ்க்கை! செவித்திறன் இழந்தவர்களே! உலகம் கேட்டுக்கொண்டே இருக்கட்டும் தொடர் வெற்றிகளை! மனவளர்ச்சி இல்லாதவராம் நீங்கள்! உங்கள் உதட்டினில் தானே தவழ்கிறது தூய புன்னகை! உலகின் கோணப்பார்வைக்குத் தானே குறை பிறை! நிலவுக்கு ஏது? திரும்பியிருக்கும் அரை உலகிற்கே இருட்டு! விழிகள் மூடுவதில்லை என்றும் […]
காமம்!!
சந்திர மண்டலம் சடுதியில் செல்பவரும் இந்திரிய இன்பத்திற்காகத் திரும்ப வந்திடுவர்! மந்திரம் மாயமென கபடம் பேசுபவரும் தந்திரம் செய்தாவது திரைமறை சுகித்திடுவர்! இயந்திர கதியில் இல்வாழ்வு நடத்துபவரும் இதந்தர வேண்டி இரவினில் கூடிடுவர்! மதந்தரு போதனைகள் மாண்புடன் கற்றவரோ பயன்தரு வகையினிலே பண்புடனே கடன்புரிவர்! இச்சையாய்ச் சேருவதே இறைவனின் படைப்பென்றால் கொச்சையாய் அதனையும் கூவிடுவது எதனால்? சர்ச்சையாய் ஒருவரின் இணக்கமும் இன்றியே பச்சையாய்ப் புணர்ந்திட முயல்வதொன்றே பாவம்! இருவரும் வளர்ந்து வயதிற்கு வந்தவரெனின் இருவரின் ஒப்புதலும் இனிதே […]
பட்டாசில்லா தீபாவளி!!
பஞ்சணையில் நாம்துயில பஞ்சத்திலே தனையிழந்து பரிதவிக்கும் நிலையினிலே பலகுடும்பம் இருக்குதிங்கே! பட்சணங்கள் இனிப்புகளென பலவிதமாய்க் கொண்டாடுகையில் பசிக்கொடுமை தாங்காது பட்டிதொட்டி துடிக்குதங்கே! பட்டங்கள் பெற்றிட்ட பட்டிணத்து நீதியரசர்கள் பட்டாசுக்கு விதியமைக்க பட்டதுயர் விளக்கிடுமுன் பச்சிளஞ் சிறார்களும் பள்ளிக்குச் சென்றிடாமல் பட்டாசுத் தொழில்புரிவது பலகாலம் நடப்பதென்று பக்குவமாய் உணர்ந்துநாமும் பழிபாவம் ஒன்றறியா பச்சிளம் பாலகரின் படிப்பினை நெஞ்சிலிட்டு பலர்பேசும் வம்பதனை பயனில்லையென ஒதுக்கிவைத்து பட்டாசில்லா தீபாவளியை பண்போடு கொண்டாடிடுவோம்! – வெ. மதுசூதனன்
முயன்றிடு …
செயலைச் செய்யும் முன் முயன்று தான் பார்ப்போமோ என்று முனைப்பதல்ல முயற்சி எண்ணங்கள் கூட செயல்களும் செம்மையாய்ச் செய்தல் வேண்டும் விளைவுகள் எண்ணாது விடியலைப் படைத்திட வேண்டும் பலவித முயற்சிகள் வரையற்ற தோல்விகள் காயங்களில் படர்ந்த அனுபவங்கள் இவையெல்லாம் ஒரு நாள் மலரும் வெற்றி என்ற கனியாய் … ச.கிருத்திகா
ரோஜா
பலர் உன்னைப் பார்த்து புகழ்ந்தார்கள் அவர்களுக்கு உன் அழகு மட்டுமே தெரிந்தது! உன்னை உன் தாயிடமிருத்து பிரித்தவர்களென அவர்களை நீ வெறுக்கவில்லை! இப்போது உணர்ந்தேன் உனது அழகு – உன் தியாகம் மட்டுமே! ச.கிருத்திகா பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி கோபி.
இதுவும் கடந்து போம்
மனதிற்கு இனிய மழலையாய் வந்துதித்தேன்.. மழலையும் மெதுவாய்க் கடந்தே போனது…… கொள்ளை அழகுக் குழந்தையாய்த் தவழ்ந்திருந்தேன் கொடுத்ததை எடுத்ததுபோல் கடந்தே போனது…. படிப்பதில் பிடிப்பால் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.. பள்ளிப் பருவமதுவும் கடந்தே போனது.. கட்டிளங் காளையாய்க் கல்லூரியை வலம்வந்தேன்.. கல்லூரி நாட்களும் கடந்தே போனது… காளைப் பருவத்தில் காதலிக்காகத் தவமிருந்தேன் காதலும் மறைந்து கடந்தே போனது.. துயரத்தின் மத்தியில் தொழில்பல புரிந்திருந்தேன் துயரமும் கூட கடந்தே போனது…. மனையாளின் சுகமதை மலரென நுகர்ந்திருந்தேன் மனத்தாங்கலால் சுகமது கடந்தே […]