கவிதை
நிலாவில் உலாவும் மான் விழியே
கலையழகு மிக்க கயல்விழியே குலையாத காதல் கொண்டேன் அழகியே நிலையாக வாராமல் ஓடி ஒளிவதேன் அலையாக வந்து மோதிச் செல்கிறாய்! தேடவே கிடைக்கா தெள்ளமுதே நாடவே செய்திடும் உன் அழகு கோடான கோடி மக்களின் பேரழகி! பாடவே வைக்கிறாய் கவிஎழுதி! நிலாவில் உலாவும் மான் விழியே நிம்மதி தேடி அலைய வைக்காதே நினைவிலும் கனவிலும் உன் முகமே நிறைந்திடும் நீவந்தால் என் அகமே! கருகான பயிர்போல் நான் வாடுறேன் உருகாத மனம்போல் நீ நடிக்கிறாய் அர்த்தமற்ற […]
ஒற்றைப் பார்வையால் ….!!
வைகறைப் பொழுதினில் ஜன்னலிடை நுழைந்து எனை இழுக்கும் காலைக் கதிரவனின் கண்கூடக் கூசும் ஒரு நிமிடம் உந்தன் ஒற்றைப் பார்வையால் …..! அதிகாலை உறைபனியில் புல்நுனியில் படர்ந்திருந்த பனித்துளியாய் எனை என்னுள் உறைய வைத்தாயே உந்தன் ஒற்றைப் பார்வையால் …! யாமத்தைக் கூட்டவே கனவினில் புன்னகையைத் தெளித்தே பூக்கோலமிட்டு பல வண்ணங்களை என்னுள் தீட்டினாயே உந்தன் ஒற்றைப் பார்வையால் …! மழையின் ஸ்பரிசத்தை நடுநிசியில் அறிந்திட மின்சாரத்தை என்னுள் பாய்ச்சியே தென்றலின் தீண்டலைத் தந்தாயே உந்தன் ஒற்றைப் […]
கந்துவட்டி
அசல் பெற்ற பிள்ளையா? அசலின் நகலா? வட்டி! தனிவட்டி கூட்டுவட்டி தெரியாதவனுக்கு கந்துவட்டிக் கணக்கு யார் சொல்லிக் கொடுத்தது? கந்துவட்டி எண்ணெயில் கொப்பளிக்கிறது ஏழைகளின் உடல்கள்! வட்டியில் பிழைப்பவர்களே! நீங்கள் சம்பாதிப்பது பணத்தையல்ல… பாவத்தை! பல ஏழைகளின் உடல்களை எரித்துத் தின்கிறது உங்கள் குடல்கள்! வட்டிமேலே வட்டி போட்டு கழுத்தை இறுக்கும் கந்துவட்டிக் கயிறு… பல தாலிகளைத் திரித்து உருவான கயிறு! மஞ்சள் கயிறு நிறம்மாறிப் போகுது! ஏழைகளின் அழுகையைக் குடித்துக் குடித்து தினம் வாழுது! ஏதுமில்லா […]
கேள்வி
ஒரு கேள்வி.. பூமி எங்கும் குளிர் பரப்பி, வெளிச்சத்திற்காக மட்டும் சுடாத சூரியனை எழுப்பி, விடிந்திருக்கிறது இந்த நாள். தன் வாழ்வின் இறுதி நாளை வண்ணங்கள் பரப்பிக் கொண்டாடிவிட்டு, நளினமாகக் காற்றில் ஆடி, விழுதலை வெற்றியாக்கி, நிலத்தை அடைகிறது ஒரு பழுத்த இலை.. மரத்திலிருந்து நிலம் பார்த்த இலை, இப்பொழுது நிலத்தில் இருந்து மரம் பார்க்கிறது. உறவல்ல.., பிரிவு உணர்த்தும் பிரம்மாண்டம்… சருகிடம் அந்த மரம் கேட்கும் ஒரு கேள்வி அதனை மீண்டும் இலையாக்கும். அந்தக் கேள்விக்காக […]
கார்மேகங்கள்
பகலிலும் குளிருதோ கதிரவனுக்கு… போர்த்திக் கொண்டான் கார்மேகப் போர்வையை! நனையாமலிருக்க எவர் பிடித்த குடை கார்மேகங்கள்! பூமிக்கு முகங் காட்டிய மேகப் பெண்கள்… வானுக்கு முகங் காட்ட திரும்பிக் கொண்டதோ! அதன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்களோ மழைத்துளிகள்! கூந்தலின் வாசந் தானோ மண் வாசனை! கதிரவ மன்னனின் மனைவிமார்களோ இம்மேகங்கள்! அவன் நோய்வாய்ப்பட்டதால் கூடி அழுகிறார்களோ? இம்மேகப்பெண்கள்! ஆடையிழக்கும் பூமிப்பெண்ணிற்குப் பச்சை சேலை வழங்கும் கருமைநிற மாயக் கண்ணன் இக்கார்மேகங்கள்! வான் காரிகையின் மார்பகங்கள் மேகங்கள்! தாய்மையடைந்த […]
அடிப் பெண்ணே…!!
மழைத் தூரலில் வானம் இலைகளின் உரசலில் மரம் உறைபனியிலும் மலரின் மணம் அடை மழையிலும் உறை பனியிலும் என்னவளின் ஆலய தரிசனம் ….!! எனக்கோ அவளின் நித்திய தரிசனமே….!! இரவின் மடியில் நிலவோ சற்றே இளைப்பாற பறவைகளின் கிரிச் ஒலியின் இசையில் தென்றலும் சங்கீதம் இசைக்க ரம்மியமான இரவில் என்னவளின் சலங்கை ஒலிக்க … மழையின் சாரலில் மெய்சிலிர்த்துப் போனேனடி …! அருகினில் நீ … குளிர்காய்கிறேனே நான் …!! உதட்டோரப் புன்னகையில் கரைகிறேனே….! மின்னல் இடையசைவில் […]
கவித்துளிகள்
நீ எனக்குத் தேவையில்லை…!! தனிமையின் சொற்களை விழுங்கி செரித்துவிட்டேன். நீ எனக்குத் தேவையில்லை… நடுங்கும் விரல் கொண்டும் தழல் மூட்டத் தெரிந்து கொண்டேன். நீ எனக்குத் தேவையில்லை… அட்சய பாத்திரம் அதை நான்கு வாங்கி வைத்துவிட்டேன். நீ எனக்குத் தேவையில்லை… சகாய விலை பேசி உடல் புகுந்து பழகிவிட்டேன் .. நீ எனக்குத் தேவையில்லை… எரியும் பகலொன்றில் உன் எச்சில் தேடும் நிமிடம் வரை நீ எனக்குத் தேவையே இல்லை .. எரியாத பகலென்று ஏதும் உண்டா […]
அரவணைப்பு
அரவணைத்து உறவு சொல்லும் அன்பான பரிமாற்றம் அரண் அமைத்துத் தடுக்காத அன் பாற்றுப் பிரவாகம் !! கன்றொன்று பசுவதனைக் களித்தணைத்தல் வாத்சல்யம் ! கதிரொன்று தலை கவிழ்ந்து நிலமணைத்தல் பெரும்போகம் ! உயிரோடு உடல் தந்த அவர் அணைத்தல் அது நேசம் ! உடன் பிறந்து உடன் வளர்ந்த அவர் அணைத்தல் பாசம் ! நிலவோடு நிதம் பேசி அணைத்தல் ஒரு பருவம் நிழலான நட்பதனையே நிதம் அணைக்கும் இளம் பருவம் இதழோடு இதழ் சேரும் அவர் […]
மறு பிறவி
சிவந்த மண்ணில் புதைந்தேன். தளிர் விட்டு முளைத்தேன். தண்ணீர் குடித்து வளர்ந்தேன். உரம் உண்டு செழித்தேன். கிளைகள் பல விட்டேன். நிழலைப் பலருக்குக் கொடுத்தேன். பூக்கள் பலர் கவரப் பூத்தேன். தேனீக்களைத் தேடி வரச் செய்தேன். சுவையான கனியானேன். சிறார்களிடம் கல்லெறி பட்டேன். அணில்கள் சுவைக்கும் பழமானேன் ரசித்து உண்ண பழம் கொடுத்தேன் இறைவனுக்கு என்னை அற்பணித்தேன் புயலில் நான் சரிந்தேன் கேட்பார் அற்று கிடந்தேன் என் முடிவை நெருங்கினேன் அடுப்புக்கு காய்ந்த விறகானேன் சுவைத்து […]
வீடற்ற மனிதர்கள் யாம்
வீடற்ற மனிதர்கள் யாம் வீணாகிப் போனோமே வீடேறும் காலம் வரை வீதியிலே வாழ்வோமே விதியாலே நொருங்கி நின்றோம் வித்தையெல்லாம் மறந்து நொந்தோம் வீராப்பு, விறல் எல்லாம் விரைவாக களைந்து நின்றோம் விலங்கு போலே நடத்திடுவார் விரைந்து எம்மை கடந்திடுவார் விரல் பட யோசிப்பார் விலக்கி வைக்க முயன்றிடுவார் வீடற்ற மனிதர்கள் யாம் வீணாகி போனோமே வீடேறும் காலம் வரை வீதியிலே வாழ்வோமே வினா ஒன்று கேட்கின்றேன் விளக்கிடுவீர் விடை தெரிந்தால் […]