கதை
கேட்பரீஸ்…

“ஏன்னா … கேட்டேளா இந்தக் கதைய?” – வழக்கமான ராகத்துடன் லக்ஷ்மியின் கேள்வி வந்து விழ, அன்றைய தினசரியை மேய்ந்து கொண்டிருந்த கணேஷ் தலையை நிமிர்த்தி, கண்ணாடியை மூக்கின் மத்தியப் பகுதிக்குச் சற்று இறக்கி, அதற்கு மேலே கண்களை ஊடுருவி, அவளிருக்கும் திசை பார்த்து, “என்னடி, என்ன ஆச்சு?” என்றான். “வேலண்டைன்ஸ் வீக் பத்தித் தெரியுமான்னா?” – தனது மொபைல் ஃபோனில் வந்து குதித்த லிங்க்கின் மூலம் படித்துத் தெரிந்து கொண்டு அவனிடம் கேட்டாள். “என்னா, வீக்கா?” […]
குவளைப்பாட்டி

காலை நேர பதட்டம். வேகமாக கல்லூரி போக தயாராகிக் கொண்டு இருந்தாள் அதிதி. வெளியில் அம்மாவின் கால்கள் தையல் இயந்திரத்தில் ஒட்டிய சத்தம் காதை கிழித்தது. அந்த சத்தம் பழகி போன எரிச்சலை கொடுத்தது அதிதிக்கு. சமையல் அறையின் உள்ளே சென்று மதிய உணவை நோட்டம் விட்டாள். அம்மா கொடுத்த மதிய உணவை எடுக்காமல் திருட்டுத் தனமாக கிளம்பினாள். “அதிதி. மத்தியானம் தயிர் சாதம் வெச்சுருக்கேன். எடுத்துட்டு போ. உடம்பு சூடு ஆகுது. வெளில சாப்பிட வேண்டாம்”. […]
இணைப்பின் வசதி: ஒரு நட்புக் கதை

அது ஒரு அழகான நட்பாகத் தொடங்கியது. நானும் என் மனைவியும்,பல வருடங்களாக ஒரே கட்டடத்தில் வசித்து வந்தோம். அதே கட்டடத்தில் ஆதவன், யாழினி என்ற கணவன் மனைவி வசித்து வந்தனர். அவ்வப்போது சின்ன சின்ன புன்சிரிப்புகள், விசாரிப்புகள் என்ற அளவில் தான் எங்கள் நட்பு இருந்தது. பின்னர் தொற்றுநோய் தாக்கியது. இரு குடும்பங்களுக்கும் அதிக நேரம் கிடைத்து, நெருக்கம் ஏற்பட்டது. உணவு, பானங்கள், புத்தகங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளைப் பரிமாறிக் கொண்டோம். நாங்கள் உண்மையான நண்பர்கள், கடவுளுக்கு […]
நானே சிந்திச்சேன் – ஜனநாயகத் திருவிழா

வீட்டுக் காலண்டர், அன்றைக்கு என்ன கிழமைன்னு சொல்லுதோ இல்லையோ, ஜனாவிடமிருந்து ஃபோன் வந்தால் அது ஞாயிற்றுக்கிழமையென்று அடித்துச் சொல்லலாம். ஃபோனை எடுத்து ‘ஹலோ’வென்று சொல்லும் முன்னரே “மச்சி .. லைன்ல யாரு இருக்குறதுன்னு சொல்லு?” என்றான். “இதென்னடா கேள்வி.. நீ ஃபோன் போட்டா நீ தான் லைன்ல இருப்ப .. கூட, வீணா போன வரது வேணா இருப்பான்..” “என்னடா இப்டி பொசுக்குனு இன்சல்ட் பண்ணிட்ட.. நல்ல வேளை அவன இன்னும் நான் ‘கான்ஃப்ரன்ஸ்’ பண்ணல.. இது […]
நானே சிந்திச்சேன் – கிரகப்பிரவேசங்கள்

சென்ற ஞாயிறன்று ஃபோன் போட்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த ஜனா, திடிரென்று, “வரதுக்கு ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டேன்றான்.. ஒரு நிமிஷம் இரு.. கான்ஃப்ரன்ஸ் போட்டுப் பாக்கலாம் “ என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் கூட காத்திராமல் வரதுவை அழைத்துவிட்டான். சில நிமிடங்களில் “சொல்லுங்கடா..எப்டி இருக்கீங்க” என்று கேட்டுக் கொண்டே வரது இணைந்துகொண்டான். “என்ன மாப்ளே … ஆளப் பிடிக்கவே முடில .. பயங்கர பிசி போல” என்றான் ஜனா. “ஆமாடா மச்சி .. வரிசையா கிரகப்பிரவேசமா […]
சுறை வேறு!

“ஏன்னா, நோட் பண்ணேளா நம்ம பாரதிய? நேத்து அந்த சினிமாவுக்குப் போய்ட்டு வந்ததுல இருந்து ஒரே டல்லா இருக்காளே?” ஹாலில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷைக் கேட்டுக் கொண்டே அடுக்களைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் லக்ஷ்மி. டி.வி.யில் ரங்கராஜ் பாண்டே வழக்கம்போல் அந்த தேவேந்திரனைப் பிரித்து மேய்வதை ரசித்துக் கொண்டே, கவனத்தை டி.வி.யை விட்டு விலக்காமல், சற்றும் ஈடுபாடில்லாமல் “என்னடி சொல்ற?” என்று கேட்டான் கணேஷ். “அதானே, நான் சொல்றதுல என்னக்கு கவனமிருந்துது உங்களுக்கு; எப்பப்பாத்தாலும் ஏதோ […]
இப்படியோர் தாலாட்டுப் பாடவா?

டாக்ஸி வீட்டின் முன் வந்து நின்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள் காஞ்சனா. உள்ளேயிருந்து வேகமாக வந்த குமுதவல்லி கைக்குழந்தையை வாங்கிக் கொண்டு மகளின் தலையைக் கோதியவாறு உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். காஞ்சனாவின் அப்பா டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு பையை உள்ளே தூக்கிக் கொண்டு வந்த போது ‘‘இப்போதும் ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?’’ கொஞ்சம் கோபம் கலந்த தொனியோடு கேட்டார். ‘‘அவள் சோகம் அவளோடு. அவளை ஏன் வீணாகக் கடிந்து கொள்கிறீர்கள்?’’ என்றாள் குமுதவல்லி […]
செம்புலம்

முன் குறிப்பு: நிஜங்களின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் நினைவான நிழற்கதை! 1919 ஆம் வருடம், ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் திகதி, அறுவடை முடிந்து பஞ்சாப் மக்கள் சூரியனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடும் பைசாகித் திருநாள். மாலை சுமார் நான்கு மணி முப்பது நிமிடம்!!! அமிர்தசரஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அக்ரஹாரம். பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து குடி பெயர்ந்த பல குடும்பங்கள் தங்கியிருந்த அந்த வீதியை அவர்கள் அக்ரஹாரம் என்று அழைத்தனர். அங்கிருந்து ஒரு ஃபர்லாங்க் தூரம் […]
நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா?

நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா? “என்னதான் சொல்லு.. ‘டன்கின்ஸ்’ காஃபியை அடிச்சுக்க முடியாது மச்சி” – காபி கப்பை மேஜையில் வைத்துவிட்டு, ‘கிளேஸ்ட் டோனட்’ ஒன்றைப் பக்குவமாகப் பிடித்தபடி, பேச்சைத் தொடங்கினான் ஜனா. “ஆமாமா.. அதுக்குத்தானே ‘அமெரிக்கா ரன்ஸ் ஆன் ‘டன்கின்ஸ்’ன்னு சொல்றாங்க..” “எவன் அப்டி சொன்னது.. ‘டன்கின்ஸ்’ ரன்ஸ் ஆன் யூ.. நம்ப குஜ்ஜு ஆளுங்கதான் இந்த காஃபி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆளறாங்க.. குஜராத்துன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பாத்தியா? செம […]
யாரவள்?

தீ ஜுவாலை போல் அதிகாலை சூரிய வெளிச்சம் தொலைவிலிருந்த நீர்த்தேக்கத்தில் பட்டு அந்தப் பகுதியையே ஜொலிக்கச் செய்துகொண்டிருந்தது. மஞ்சளையும், குங்குமச் சிவப்பையும் கலந்து, குழைத்தெடுத்துத் திட்டுத் திட்டாய்ப் பூசியது போன்ற வர்ண ஜாலம். குளப் பகுதியின் அருகில், சிறிய நாரைக் குடும்பம் ஒன்று, சுறுசுறுப்புடன் இரை தேடி இங்குமங்குமாய் நடந்துகொண்டிருந்தது. அதிலும் அந்த குட்டி நாரைக்கு அதிகப் பசி போல. பெரிய நாரைகளுக்கு முன்னால் நடந்தவாறு, அலகினால் நிலத்தில் குத்திக் குத்தி பசியாற்றிக் கொண்டது. பின்புல சூரிய […]