கதை
வென்ச்சரஸ் வெகேஷன்
”ஏன்னா… அந்த ரிஸார்ட் பத்தி எல்லாம் படிச்சுப் பாத்தேளா?… இன்னும் ஒரு வாரங்கூட இல்லன்னா ட்ரிப்புக்கு.. தெரியாத நாடு, புரியாத பாஷை… ஏதோ பாத்து புக் பண்ணிட்டேன்.. கொஞ்சம் எல்லாத்தயும் படிச்சு ப்ரிப்பேர் பண்ணி வைங்கோ… ப்ளீஸ்…” சமையலறையில் பால் கேனைக் கையிலெடுத்து, காஃபி போடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி. “சரிடி… பாத்துடலாண்டி.. இன்னும் ஒரு வாரம் இருக்கே..” ஹாலில் உட்கார்ந்து கொண்டு, இன்னும் இரண்டு மணி நேரத்தில் தொடங்க இருக்கும் அமெரிக்கன் […]
கூகிளை நம்பினோர்
“மடேர் ” என்று தோசைக்கல்லால் கோபமாக அம்மு ரமேஷ் தலையில் அடித்தாள். ரமேஷ் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பேசுவதில் ஒரு கணம் கவனம் செலுத்தினாள். மறு கணம் அம்மு மீண்டும் “மடேர் ” என்று தோசைக் கல்லால் தலையில் தட்டினாள் . அவள் மனதிற்குள் நடக்கும் அந்த ரணகளத்தைத் தெரியாமல் ரமேஷ், அவன் பாட்டிற்கு பேசியபடி இருந்தான். வெளியில் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் சிரித்தபடி அவன் சொல்வதைக் கேட்டு தலையை ஆட்டியபடி, சமையல் அறையைச் […]
இண்டிபெண்டன்ஸ்
”ஏன்னா… இவா ரெண்டு பேரும் ஒரே எக்ஸைட்டட்… நாளைக்கு ஜூலை ஃபோர்த் ஃபையர் வொர்க்ஸ் ஷிகாகோவில பாக்கப் போறம்னு…” அடுக்களையில் பிஸி பேளா பாத்திற்குக் காய் நறுக்கிக் கொண்டே பேசத் தொடங்கினாள் லக்ஷ்மி. “ஆமாண்டி, இட் வில் பி டிஃபரண்ட் ஃபார் ஷ்யூர்…. ஐம் அல்ஸோ எக்ஸைட்டட்… ஷிகாகோல ஃபெட்னா ப்ரோக்ராம்ஸ் எல்லாம் பாக்கலாம்… சேம் டே…” லேப் டாப்பிலிருந்து தலையை நிமிர்த்தி, அடுக்களையிருந்த பக்கம் பார்த்து, பதிலளித்தான் கணேஷ். “நான் இப்பவே சொல்லிட்டேன்… தமிழ் ப்ரோக்ராம் […]
மாடர்ன் மதர் !
மங்கிய விளக்கொளி…. சிறியதான மேடை… அந்த மேடையின்மேல் இரண்டு மூன்று சிறிய இரும்புக் கம்பங்கள் பொருத்தப் பட்டிருந்தன. மேடையைச் சுற்றி நிறைய நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. அவற்றில் சில ஆண்கள் அமர்ந்திருந்தனர். மேடையிலிருந்து சில அடிகளில் தொடங்கி, அந்த அரங்கம் முழுவதும் பல டேபிள்களும், சேர்களும் அமைக்கப்பட்டு அவற்றில் பெரும்பாலானவற்றில் மனிதர்கள் அமர்ந்திருந்தனர். தொண்ணுத்தி ஒன்பது சதவிகிதம் ஆண்களும், ஒன்றிரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர். பல வெய்ட்டர்களும், சர்வர்களும் சுற்றிச் சுற்றி வந்து அனைவரையும் ‘கவனித்துக்’ கொண்டிருக்க, சாராயக் […]
காவியக் காதல் – பகுதி 2
பகுதி 1: சோஃபாவில் அயர்ந்து உட்கார்ந்திருந்தான் சித்தார்த். மயங்கி விழுந்த அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து ஹாலில் உட்கார்த்தி வைத்திருந்தாள். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துவந்து குடிக்கச் செய்து, ஆசுவாசப்படுத்தினாள். “ஏன்னா, என்ன ஆச்சு? என்ன பண்றது? தல சுத்தறதா? ஜூஸ் பண்ணித் தரவா?….” பதறிப் போய்விட்டாள் அமுதா.. “நேக்கு ஒண்ணுமில்லடி… ஒரு பெரிய கனவு… எப்டிச் சொல்றதுன்னுகூடப் புரியல… அப்டியே தத்ரூபமா இருந்துதுடி… அந்தக் கனவுல நானே இருந்தேன்… நீ காமிச்சியே அந்த ஆன்க்ளெட் அத……. […]
லவ் பேர்ட்ஸ்
2019 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரி மாதம், பதினான்காம் தேதி… மாலை ஐந்து மணி……… பாக்மேன்ஸ் ஃப்ளவர் ஷாப்…. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில், மனைவி லக்ஷ்மிக்கு வேலண்டைன்ஸ் டே ரோஸஸ் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று திட்டம். பாக்மேன்ஸ் பார்க்கிங்க் லாட்டுக்குள் நுழைந்தால், எங்கெங்கு காணினும் கார்களடா எனும் வகையில், தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டம். பார்க்கிங்க் லாட்டில், இரண்டு மூன்று முறை சுற்றி, ஒரு வழியாக கடையின் எண்ட்ரன்ஸிலிருந்து வெகு தொலைவில் ஒரு ஸ்பாட் கிடைத்து, […]
ஆசையில் ஒரு கடிதம்
வேகமாக வண்டியைத் திருப்பி வீடு நோக்கிச் செலுத்தினாள் கயல். வண்டியின் கைச் சக்கரத்திற்கு பின் மணி ஆறு எனக் காட்டியது . சாலையில் கூட்ட நெரிசல். ஏதோ கட்டுமானப் பணி நடந்து கொண்டு இருப்பதால் இரு பகுதிகள் ஒன்றாக ஆக்கப்பட்டு இருந்தன. மெல்ல ஊர்ந்த வண்டிகளுக்குள் கயலும் தன் வண்டியைச் செலுத்தினாள். பாட்டு கேட்பதற்கு மனம் செல்லவில்லை. பரபரவென்ற வாழ்க்கை வெறுப்பாக இருந்தது. சின்னக் குருவி, பசுமையான தோட்டம், அம்மா கைகள், அழகிய மருதாணி, கருவேப்பிலைச் செடிகள், […]
காவியக் காதல் – பகுதி 1
திடீரென்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான் சித்தார்த். அவனால் விவரிக்க முடியாத கனவு அது. ஏ.சி. யின் முழுவதுமான குளிர்ச்சியிலும், அவன் முகம் முழுவதும் வியர்த்திருந்தது. அது கனவுதான் என்று உறுதிப் படுத்திக் கொள்வதற்கே அவனுக்குச் சில வினாடிகள் பிடித்தன. அந்தக் கும்மிருட்டில், தனது வலதுபுறம் இருந்த சிறிய அலார்ம் க்ளாக் மூன்று மணி, பதினேழு நிமிடம் எனக் காட்டி, சிறிதளவு ஒளி வீசிக் கொண்டிருந்தது. கண்களை இடுக்கி, இருட்டிற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு இடதுபுறம் திரும்பிப் பார்க்க, மனைவி […]
பெஸ்ட் தேங்க்ஸ்கிவிங்க் எவர்
”ஹே… விஷ்… டு யூ ரிமெம்பர் தட் ஐ நீட் டு லீவ் எர்ளி இன் த மார்னிங்…..” கேட்டுக் கொண்டே பெட் ரூமிலிருந்து லிவிங்க் ரூமுக்குள் நுழைந்தாள் டெப்ரா…. லிவிங்க் ரூம் சோஃபாவில் அமர்ந்து மும்முரமாக கால்ஃப் சேனல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, “யெஸ் டார்லிங்க், ஐ டு ரெமெம்பர்…. ஐம் கோயிங்க் டு மிஸ் யூ….” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கட்டியணைத்து, கிடைத்த சந்தர்ப்பமாக நினைத்து இதழோடு இதழ் பதித்தான் ……. […]
ஒரு நாள் இரவு ..
மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. மாலை சுமார் நான்கு மணியளவில் தொடங்கிய பனிப்பொழிவு இன்னும் நிற்கவில்லை. சுழன்று, சுழன்று அடித்த காற்று ஜன்னல் கண்ணாடியைச் சடசடவென அதிரச் செய்தது. தெருவோர மஞ்சள் விளக்கில் நாலாபுறமும் பறந்த பனித்துகள்களுடன், ஏற்கனவே தரையில் விழுந்திருந்த பனியும் கிளம்பி பெரிய பனிப்படலத்தை உருவாக்கியிருந்தது தெரிந்தது. இதுவரையில் ஏழெட்டு அங்குல பனி விழுந்திருக்கலாம். நாளை மாலை வரை இந்நிலை நீடிக்குமெனவும், மேலும் சுமார் ஒண்ணரை அடிக்கான பனிப்பொழிவு தொடருமெனவும் ரேடியோவில் சொன்னார்கள். டேபிளிலிருந்த […]