\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கதை

யாரடியோ?

யாரடியோ?

கட்டழகுப் பெட்டகமே, கன்னியருள் தாரகையே
கடைவிழிப் பார்வையாலே காளையரை வீழ்த்தினளே!
கானல் நீராய்ப் போனவனைக் கண்ணாரக்காணக்
கதவோரம் நாணிநின்று கசங்கியஆடை முடிந்தவளே !

வெண் தாமரையாள் ஆதவனை எதிர்பார்த்து
மெலிந்த தேகத்தால் ஊர்ப்பழிக்கு ஆளாகி
பொலி விழந்த வெண்ணிலவே வெட்கமென்ன
மெல்ல வந்தே வெளியுலகுக்குச் சொல்லிடடி!

Continue Reading »

பக்குவக் காதல்

பக்குவக் காதல்

சூரியன் மெதுவாக மேற்கில் சாயும் மாலை நேரம். நாள் முழுவதும் சற்று மழை மேகமாகவே இருந்த தினமாதலால், அந்தச் சாயுங்கால நேரத்தில் சற்றே சில்லென்றிருந்தது. அந்தக் கிராமத்தில் ”சீமைக்காரர் வீடு” என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் மிகவும் அழகான வீடு. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து, தனது ஓய்வுக் காலத்தில் அந்தக் கிராமத்தில் வந்து செட்டில் ஆகியிருந்ததால் அந்தப் பெயர். அவ்வளவு பெரிய பங்களா என்று சொல்ல முடியாதெனினும், நான்கு அறைகளுடன் நகரத்திலிருக்கும் அத்தனை வசதிகளும் பொருந்திய, ஆடம்பரம் […]

Continue Reading »

சிதம்பரம் – பாகம் 1

Filed in இலக்கியம், கதை by on January 29, 2017 0 Comments
சிதம்பரம் – பாகம் 1

“சிதம்பரம்” என மஞ்சள் நிறச் சுவரில் எழுத்துக்களுடன் இரயில் நிலையம் வரவேற்றது. அமலா இரயில் வாகனத்தின் வாசற்படியில் இருந்தே வெளியில் எட்டிப் பார்த்தாள். இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சற்று தயக்கத்துடன் இறங்கி, தன் கையில் உள்ள காகிதத்தில் எழுதியிருந்த முகவரியைப் பார்த்தாள். அவளிடம் டிக்கெட் இருக்கிறதா எனச் சோதிக்கக் கூட அந்த இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சிதம்பரம் எவ்வளவு பெரிய நகரம். அந்த நகரத்தைப் பற்றிப் பல வதந்திகள் வந்தாலும் அதைச் சற்றும் நம்பாமல் […]

Continue Reading »

அஞ்சலம்மா

Filed in இலக்கியம், கதை by on January 29, 2017 0 Comments
அஞ்சலம்மா

ஞாயிறு காலை ஏழு மணி. எப்பொழுதும் கேட்கும் M.S சுப்ரபாதம் ஒரு புறம், அந்த காலை நேரத்தை உறுதிப் படுத்திக் கொண்டு இருந்தது. இன்னொரு புறம் அம்மாவின் ஃபில்டர் காஃபி மணம். வெந்து கொண்டிருக்கும் இட்லி மணம் சமையல் அறையில் இருந்து வந்து கொண்டு இருந்தது.   சமையல் அறை வாசலுக்கு முன்பு அமர்ந்து பாட்டி தேங்காய் துருவிக் கொண்டு இருந்தார். அவரால் செய்யக் கூடிய வேலையை எப்பொழுதும் செய்ய நினைக்கும் மனம். மிக மெலிந்த தேகம். […]

Continue Reading »

பீனோ க்ரிஜோ…

Filed in இலக்கியம், கதை by on January 29, 2017 0 Comments
பீனோ க்ரிஜோ…

விடிந்தும் விடிந்திராதிருந்த அந்தக் காலை நேரத்தில், அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங்க் ஸ்பாட்டில் காரை நிறுத்தினான் விஷ்வா.. ஒரு தனியார் அலுவலகத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அவன், ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்து சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியைத் தொடங்கியவன். பல நிலைகளிலும் பணி புரிந்து, கடைசியாக சி.டி.ஓ. ஆகப் பதவி உயர்வு பெற்றவன். கார்ப்பரேட் வார்ல்ட்க்குத் தேவையான அனைத்து சாமர்த்தியங்களையும், டிப்ளமஸிகளையும் கற்றுக் கொண்டவன். பல வெள்ளைக்கார எக்ஸிக்யூடிவ்ஸ் மத்தியில், […]

Continue Reading »

அனுபவ வாழ்க்கை

Filed in இலக்கியம், கதை by on December 25, 2016 8 Comments
அனுபவ வாழ்க்கை

வண்டியை  நிறுத்திவிட்டு, பக்கத்தில் இருந்த கைப்பையை எடுத்தாள் த்ரிவேணி. கைப்பை அருகில் இருந்த கோப்பையும்  எடுத்துக் கொண்டாள் . அன்றைய நாளை மனதில் ஒட்டிய படி இறங்கினாள் . இன்றைய பொழுது ஒரு புதிய பெண் வந்து வகுப்பில் இணைவதாக, ஒரு வாரம் முன்பே பள்ளி முதல்வர் வேணியிடம் அறிவித்திருந்தார். வண்டியைப் பூட்டி விட்டு வகுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.  கருமையான நிறத்தில் ஒரு “ஃபார்மல்” பாண்ட் , வெளிர் நிறத்தில் ஒரு முழுக்கைச் சட்டை. தோள் […]

Continue Reading »

கிறிஸ்மஸ் கிஃப்ட்

Filed in இலக்கியம், கதை by on December 25, 2016 1 Comment
கிறிஸ்மஸ் கிஃப்ட்

வழக்கம்போல காலை ஐந்தரை மணிக்கு அலாரம் தலையில் சம்மட்டி போல் அடிக்க, போர்வையை விலக்கி விட்டு எழுந்தான் கணேஷ். திரை நீக்கித் திறந்திருந்த ஜன்னலின் வெளியே பார்க்க, இன்னும் கும்மிருட்டு நிரம்பியிருந்தது. ”யப்பா, இன்னிக்கு ஒரு நாள் ஆஃபிஸ் போனாப் போதும், கிறிஸ்மஸ் நியூ இயரோட சொந்த லீவையும் சேத்து பத்து நாள் எங்கயும் போக வேண்டாம்”.. சிறு குழந்தை போல விடுமுறையை நினைத்துக் கொண்டே குளியலறை நோக்கிச் சென்றான். பல் தேய்க்கலாம் என்று குழாயைத் திறந்தால் […]

Continue Reading »

 கதவடைப்பும் கழுமரங்களும்

Filed in இலக்கியம், கதை by on December 25, 2016 0 Comments
 கதவடைப்பும் கழுமரங்களும்

1996. “வீணாப்போனவங்க. இப்பிடி பண்ணிட்டாங்களே…”அங்கலாய்த்தபடி  தொழிற்சங்க அலுவலகத்துக்குள் பிரவேசித்த விஜயன் காலியா யிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமியின் முகத்திலும் கலவரச்சாயல் படிந்திருந்தது.கவலையால் ஏற்கனவே கருத்திருந்த முகம் மேலும்  கறுப்பாகியிருந்தது. “எல்லாம் மொதலாளிங்க பாத்து செய்ய வேண்டியது.இப்ப பாரு எல்லாத்துக்கும் பிரச்சினை” என்றார். “ஆமாங்கண்ணே.வேலூர் சிட்டிசன் வெல்பேர் அசோசியேஷன் தான் கேஸ்ஸ ஃபைல் பண்ணியிருக்காங்க.அவங்க பார்வைல இது சரி தான்.ஆனா நம்ம வயித்து பொழப்பப்பத்தி நெனச்சி பாத்தாங்களா இல்லையான்னு தான் தெரியில”. ”எல்லாஞ் […]

Continue Reading »

கண் முன் கடவுள்

Filed in இலக்கியம், கதை by on November 27, 2016 0 Comments
கண் முன் கடவுள்

காக்கிச் சட்டையில் மடிப்புக் கலைந்ததைப் பொருட்படுத்தாது உதறி விட்டு நடந்தார் கன்னியப்பர். அவர்கள் வீட்டு, சின்ன முகப்பில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தார்.  முன் நெற்றி வழுக்கையை மறைக்கும் விதமாக இருந்த சிறிய முடியை  வலப்பக்கம் திருப்பி வாரினார். முகத்தின் சுருக்கங்கள் கண்ணாடியில் தெரிந்தன.  ஆயிற்று வயது…. இந்தத் தை  பிறந்தா 58 வயசு ஆயிடும். மிடுக்கு, வீம்பு எல்லாம் தளரும் வயது தொடங்கித் தான் விட்டது. சிவகாமி போன போதே பாதி ஆயுள் போயாச்சு. கண்ணாடிக்குப் […]

Continue Reading »

காதல் பிசாசே ..

Filed in இலக்கியம், கதை by on October 31, 2016 0 Comments
காதல் பிசாசே ..

ஒன்பது மணிக்கே வெயில் சுட்டெரித்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் வெயிலைப் பொருட்படுத்தாது  கூட்டம் நிரம்பி வழிந்தது. நீலப் புடவை கட்டிய பெண் ஒருத்தி ‘பரக் .. பரக்’ என்று இரண்டு கைகளிலும் தென்னந் தொடப்பத்தைப் பிடித்து பெருக்கிக் கொண்டிருந்தார். யாரோ சாப்பிட்டுவிட்டுப் போட்ட கொய்யாப் பழத்தின் ஒரு பாதி உருண்டோடியது. எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்த காகம் அரை செகண்ட் அமர்ந்து, தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, கா கா என்று கரைந்து பழத்தைக் கொத்திக் கொண்டு […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad