கதை
க்ளோத்திங் ஆப்ஷனல்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்….. என்று அசுர தொனியில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது…. எதிர்பாராத நேரத்தில், தலையில் பெரிதாக ஏதோ விழுந்தது போல துள்ளிக் குதித்து எழுந்தாள் ஷாலினி. எழுந்து இருட்டில் சுற்று முற்றும் பார்த்தாள். இருட்டு கண்களுக்குப் பழகும் வரையில் ஒன்றும் புரியவில்லை. படுக்கைக்குப் பக்கத்திலிருக்கும் நைட் ஸ்டாண்டில் உள்ள அலாரம் க்ளாக் ஆறு மணி பதினைந்து நிமிடம் என்று நீல நிற நியான் ஒளியில் கண்களைக் கூசிக் கொண்டு, கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது…. இப்பதான் படுத்த […]
மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனி உண்டோ?
தொலைபேசி அழைக்கும் சத்தம் கேட்டது. கையை மடக்கி fit bit ஐ அழுத்தி அழைப்பது வாசு எனக் கண்டு கொண்டாள் . கடிகாரம் மணி 6 எனக் காட்டியது. அங்கே இப்போ மணி 5 தானே. தூக்கம் வரலையா? வியந்தபடி அழைப்பை இணைத்தாள் . “குட் மார்னிங் வாசு என்ன நம்ம ஊருTime zone லேயே இருக்கீங்களா?”. “ஆமாம் . சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பணும். பிரணவ் என்ன பண்ணறான் ?” “அவன் தூங்கறான். ஒரு அரைமணி […]
மாற்றம்
டாம் என்கிற தமிழரசன் முகத்தில் ஒரு பரபரப்புத் தெரிந்தது. மினியாபோலிஸ் இருந்து லாஸ் வேகாஸ் புறப்படத் தயார் ஆகி கொண்டிருந்தான். அதுவும் இல்லாமல் அவனுடைய நெருங்கிய நண்பனுடைய வருகைக்காகவும் காத்துக் கொண்டிருந்தான். நண்பன் ரஞ்சித் தொலைபேசியில் எவ்வளவு கேட்டும் டாம் பதில் சொல்ல மறுத்தான். “நேரில் வா பேசிக்கொள்ளலாம். இரண்டு நாளைக்கு வேண்டிய துணிமணி எடுத்துக்கொண்டு வா” என்றான். ரஞ்சித் தனது மனைவியை இழந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. திடிரென “வா […]
செம்புலப் பெயல் நீர்…….
“கமான்.. காந்தி கேரளாலதான் பொறந்தாரு”… மூன்றாவது முறையாக அடித்துச் சொல்லும் அருணாவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கணேஷ் என்ன சொல்வதென்று புரியாமல் திகைப்புடன் நிற்கிறான். “இல்லம்மா, நான் தான் சொன்னேனே… வந்து…” வாக்கியத்தை முடிக்கு முன்னர் கணேஷை இடை மறித்த அருணா, “நான் மம்மிக்கிட்ட கேட்டுக் கன்ஃபர்ம் பண்ணிக்கிறேன்” என்று முறைப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள். “ம்ம்…. இந்தப் பொண்ணையா நாம?….” என்று நினைக்கத் தொடங்கி, ”நோ நோ.. அப்டி நெனைக்கக் கூடாது” தன்னைத் தானே […]
லெக்ஸி
வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது. லிவிங் ரூமில் தனது விரிப்பில் படுத்திருந்த லெக்ஸி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு ஓடியது. மடிக்கணினியில் எதையோ பார்த்தவாறு, ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பவி “வாசல்ல யாரோ வந்திருக்காங்க போலருக்கு..நான் அப்புறமா கூப்பிடட்டுமா .. ம்ம்? சரி.. நீயே கூப்பிடு” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்துவிட்டு எழுந்தாள். அதற்குள் கதவோரக் கண்ணாடி வழியே ஒரு சிறுமி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த லெக்ஸி, பவியிடம் ஓடி வந்து வேகமாக வாலை ஆட்டியவாறு, கதவைச் சீக்கிரம் […]
எங்கிருந்தோ வந்த நட்பு
எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிடக் கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு குட்டி நாய் படுத்திருப்பதைப் பார்த்து உர்… என உறுமி இது என் இடம் என்று எதிர்ப்பைக் காண்பித்தது. இதனைக் கண்டவுடன் அந்த இடத்தில் இருந்த நாய் வாலைப் பின் கால்களில் நுழைத்து வளைந்து குழைந்து மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. போகும்போது கூட ஓரக்கண்ணால் இது எங்காவது தன் மீது பாய்ந்து விடுமோ எனப் […]
எது பெண்மை ?
ஒரு மாதிரி சமையல் வேலையை முடித்தாள் தேவி. சமையல் அறையின் மேஜையை அழுத்தி மறுமுறை அழுத்தி துடைத்து விட்டு கையை உதறி அதை குப்பையில் எறிந்தாள். “ஹ்ம்ம்” என்ற ஒரு பெருமூச்சு அவளை அறியாமல் வந்தது. இன்னும் அரை மணி நேரம் இருக்கு கிளம்ப, அப்புறம் மீது குட்டியை கூப்பிட்டுக்கிட்டு வரணும். சுவற்றில் இருந்த அந்த குட்டி மீதுவின் புகைப்படத்தைப் பார்த்தபொழுது ஒரு உற்சாகம் பொங்கியது. அந்த குட்டி வாண்டின் சேட்டைகளும்,விளையாட்டும் எப்பொழுதும் மகிழ்வு தான். இன்று […]
அப்பா…
மவுண்ட் ரோட் தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனை…. முப்பது மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு, நேரடியாக ஏர்போர்ட்டிலிருந்து ஹாஸ்பிடல் வந்திருந்த கணேஷ் கண்ணீர் விழிகளும், களைப்புத் தேகமுமாய் ஐ.சி.யூ. வாசலில் ட்யூட்டி டாக்டரின் வருகைக்காகக் காத்திருந்தான்… ஐ.சி.யூ.வின் உள்ளே அப்பா உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார், வெண்டிலேட்டரின் தயவில் சுவாசம் நடந்து கொண்டிருக்கிறது….. ஐ.சி.யூ கதவிலிருந்த வட்டமான சிறு கண்ணாடி வழியே உள்ளே பார்க்க, சுயநினைவில்லாமல் மருத்துவ உபகரணங்களுக்கும், குழாய்களுக்கும் நடுவே ஒரு திடப்பொருளாய்ப் […]
உச்சி தனை முகர்ந்தால்
வழக்கம் போல் அந்த அதிகாலை நேரம் விடிந்தது. ஒவ்வொரு நாளும் இதே தான் என்ற ஒரு அலுப்புடன் எழுந்தான் தேனப்பன். வாசலில் செல்வி கோலம் போட்டு கொண்டு இருந்தாள். உள்ளே கோபி ஒருக்களித்து திரும்பி படுத்தான். பழக்கமான உடல் வழக்கமான வேலைகள் செய்தது. ஆனால் மனம் அன்று ஒரு நிலையில் இல்லை. தேதியைக் கிழிக்கும் பொழுது இன்று காலையில் சீனுவை ரயில் நிலையம் சென்று கூட்டி வர வேண்டும். மூன்று நாட்கள் கும்பகோணம், சிதம்பரம், பட்டீஸ்வரம் செல்ல […]
எது தவறு?
“ராக்கி இந்த தபால் ஒரு வாரமா இருக்கே, அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்புனவங்களுக்கே அனுப்பிச்சுடு” என்றார் போஸ்ட்மேன் ராக்கி என்கிற ராக்கப்பனிடம் சாம்ராஜ் நகர் போஸ்ட்மாஸ்டர். “சார் அந்த அட்ரஸ்ல இருக்கறவரு இரண்டு மூணு நாளைக்கு முன்னாடி இறந்துட்டாராம், அதான் என்ன பண்றதுன்னு வச்சுருக்கேன்,” “தபால் எங்கிருந்து வந்திருக்கு? கோயமுத்தூர்ல் இருந்து சார்” “சரி அந்தக் கடிதாசிய நாளைக்கே திருப்பி அனுப்பிச்சுரு,” சரி என்று கடிதத்தை எடுத்தவன் கடிதம் பிரிந்திருப்பதைப் பார்த்து […]