கதை
நானே சிந்திச்சேன்..

போன வாரத்துல ஒரு நாள் சாயங்காலம்.. வேலையெல்லாம் முடிச்சுட்டு, கொஞ்ச நேரம் விஸ்ராந்தியா உட்காரலாம்னு நெனச்ச நேரத்துல கரெக்டா, ஜனா ஃபோன் பண்ணினான்.. “ஏ மச்சி .. இந்த வீக் எண்ட் என்ன பண்ணப் போற?” ன்னு கேட்டான்.. இவன் எதுக்கோ தூண்டில் போடப்போறான்னு நெனச்சி “இந்த வாரமா? என் வொய்ஃப் ரொம்ப நாளா சொல்லிகிட்டே இருந்தா.. இந்தத் தோட்டத்துக்குச் செடியெல்லாம் வாங்கணும்.. ‘டாம்பா’ல ஒரு பெரிய ஆர்பரிட்டம் இருக்காம்.. போயிட்டு வந்துடலாம்னு.. அதான் ‘டாம்பா’ போலாம்னு […]
இளமையில் கொல்..

‘வாரன் லைப்ரரி’யைக் கடந்து இரண்டு மூன்று நிமிடங்களிலேயே ‘எலிசபெத் எஸ்டேட்ஸ்’க்கான என்ட்ரன்ஸ் வந்துவிட்டது. ‘பாம் பீச்’ பகுதி, ஃப்ளாரிடாவிலேயே மிக மிக வசதி படைத்தவர்கள் வசிக்கக் கூடிய பகுதி என்று தெரிந்திருந்தாலும், ‘எலிசபெத் எஸ்டேட்ஸின்’ கூடுதலான ஆடம்பரப் பகட்டு, மேசனுக்குப் பிரமிப்பு தந்தது. குறைந்தது மூன்று ஏக்கரில் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பங்களாவும், மற்றதை விட பிரம்மாண்டமாக இருப்பது போல் தோன்றியது. ஒவ்வொன்றும் எப்படியும் குறைந்தபட்சம் 20 மில்லியன் போகுமென மேசனின் மூளை கணக்கிட்டது. இரு புறங்களிலும் […]
கவரிமான் ராமாயி

உழைத்து உரமேறிய உடம்பு. நாவல்பழ நிறம். கண்களில் வைராக்கியம். அலங்காரமோ, நகைகளோ கிடையாது. பின்கொசுவம் வைத்துக் கட்டிய நூல் சேலை. அள்ளிச் செருகிய கொண்டை. கால்களில் ரப்பர் செருப்பு. ஆரம்பத்தில் அணிந்த தண்டட்டியால் வளர்ந்த காதுகள். இதுதான் ராமாயி. மானாமதுரையை அடுத்த கொம்புக்காரநேந்தல், அவள் பிறந்த ஊர். ஒரு தடவை, 1970 வாக்கில் அக்கரையில் இருக்கும் அம்மாவின் தோழி மதுரம் மாமி வீட்டுக் கொலுவிற்குப் போன போது அறிமுகம். நேர்த்தியாக அடுக்கப்பட்ட பொம்மைகள். சுத்தமாகத் துடைக்கப் பட்ட […]
கங்கா

“ஸாரிம்மா தீபிகா” என்றேன் உண்மையான மன வருத்தத்துடன். “இன்னும் ரெண்டே நாளில் அவளுக்கு பரிட்சை. கோபிச்சுண்டு அவள் “மூடை” அவுட்டாகிக்கியாச்சு. ஸாரி என்ன வேண்டிக்கிடக்கு? ஸாரியாம் ஸாரி…” என்று மனைவி உஷா படபடவென்று வெடித்தாள். பிறகு சுமுகமான சூழல் வரவேண்டுமே என்று எண்ணினாளோ என்னவோ, “எனக்கு வேணுமானால் வீட்டில் கட்டிக்க ரெண்டு ஸாரி வாங்கிக் கொடுங்கள்! ஸல்வார் நிறைய இருக்கு” என்றாள். என் தவற்றை உணர்ந்தேன். மேலும் ஏதாவது பதிலுக்குப் பேசினால் அது வீண் விவாதத்தில்தான் முடியும் […]
வேர்களை வெறுக்காதீர்!

காலையிலிருந்து மனது சற்று பாரமாய் இருப்பதாய் உணர்ந்தாள், கோமதி. என்ன காரணம் என்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தபோது கூட, திடமான காரணங்கள் ஏதும் பிடிபடவில்லை. எப்போதாவது இவ்வகையான உணர்வு அவளுக்குள் மேலோங்கும். அதை அனுபவிக்கும்போதெல்லாம், வாழ்க்கை என்ன வழவழவென்று இருக்கும் தேசிய நெடுஞ்சாலையா? ஒரே சீராய் மனம் பயணிக்க. மேடு பள்ளங்கள் நிறைந்த கிராமத்து மண் ரோடுதானே என்று சமாதானம் செய்து கொள்வாள். அவள் மேசை மீதிருந்த தொலைபேசி ஒலித்தது. எடுத்தாள். […]
பண்ணை வீடு

நேரம், அதிகாலை மணி இரண்டு முப்பது. பண்ணை வீட்டின் வெளிப்புற வீடாக அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் கண்மூடிய நிலையிலேயே விழித்திருந்தார் புண்ணியமூர்த்தி. பனிரெண்டு முப்பது மணி வாக்கில் திரும்பிப் படுத்தபொழுது முதுகுக்கு கீழே ஏதோ உறுத்துவது போல் தோன்ற, கண்விழித்து துழாவியவரின் கையில் அகப்பட்டது, பேத்திக்காக வாங்கியிருந்த விரல் நீள அழகிய மார்பிள் சிற்பம். கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தவர் அப்படியே உறங்கிப் போயிருந்தார். அப்பொழுது வந்த விழிப்புதான் இன்னமும் அவரை உறங்கவிடாமல் தொடந்துகொண்டேயிருந்தது. எண்ண […]
வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்

மிக்சியில் ஏதோ அரைக்கப்போனவள் வலது புறம் திரும்பி முன்னறையை ஏன் பார்க்க வேண்டும்? அப்படியே பார்த்தாலும் அந்தக் காட்சி ஏன் என் கண்களில் பட வேண்டும்? ஒரு கையில் காப்பி கோப்பை. மறுகையில் படிக்க வசதியாக நான்காக மடக்கியபடி செய்திகளைச் சுடச்சுடத் தரும் The Straits Times செய்தித்தாள். கால்கள் இரண்டும் கீழே இருந்திருந்தால்கூட என்னோட கிறுக்கு புத்திய அடக்கி வச்சிருப்பேன். காப்பி டேபிள் கால்கள் டேபிளாகி இருந்தது. தொலைக்காட்சியில் உலக நடப்புகளை உடனுக்குடன் ஒளிபரப்பும் CNN […]
பதியம் போட்ட உறவுகள்

(பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) “கிராமத்தில் தனியா இருக்கிற அம்மாவை, இங்கே வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு போகச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்…..” தயங்கியபடி யோசனையைச் சொல்லிவிட்டு, மனைவி சுகுனாவின் பதிலுக்காக காத்திருந்தேன். அம்மா உள்பட, கிராமத்து உறவினர்கள் எவரையும், குடும்பத்துக்குள் சேர்த்தால், ஒத்து வராது என்ற கருத்தில், கல்யாணம் ஆனதிலிருந்தே பிடிவாதமாக நின்றாள் அவள். சிறு வயதில் அம்மாவை இழந்து, அப்பாவின் ஒரே செல்லப் பெண்ணாக வளர்ந்து, நவீன […]
பலி-சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்ற கதை

“என்ன குழந்தை?” என்று ‘துவாசை’ நோக்கிப் போய்க்கொண்டிருந்த பெருவிரைவு ரயிலிலில் ஒரு குரல் தெறித்தது. மொழிப் பாகுபாடின்றி பல தலைகள் குரல் வந்த திக்கில் திரும்பின. தன்யாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என அதுவரை மனத்தில் ஆக்கிரமித்திருந்த தவிப்பு அகிலனைவிட்டுத் தற்காலிகமாக விலக, குரலுக்கு உரியவனின் மேல் பார்வையை அனுப்பினான். அகிலனுக்கும் அவனுக்குமிடையில் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தனர். அவனுக்கும் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த சீனர் ஒருவர் முணுமுணுத்தார். உறக்கம் கலைக்கப்பட்ட கோபம் அவரது வெளுத்த […]
ஃப்ளாஷ் பேக்

கல்லூரிக்குச் செல்வதற்குத் தயாரானான் கணேஷ். வெள்ளை நிறத் துணியில், உடலைச் சுற்றி கோடு போட்டது போல் ஊதா நிறத்தில் குதிரைப் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த சட்டை. குதிரைகள் பலவும் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பல வரிசைகளாக மேலிருந்து கீழாக வருமாறு தைக்கப்பட்டிருந்தது. ஒரு வரிசை மார்பைச் சுற்றிவர, மத்தியில் அமைந்திருந்தது சட்டைக்கான பட்டன். மேலிருந்து இரண்டு பட்டன்களைக் கழட்டி விட்டு, அப்பொழுதுதான் அரும்பத் தொடங்கியிருந்த பதின்பருவ ரோமங்களைக் காட்டிக் கொண்டிருந்தான் அவன். அதற்கு மேட்ச்சிங்க்காக […]