கதை
பெண்ணின் பெருந்தக்க யாவுள
யாரோ தன் அறைக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு ,தூக்கம் கலைந்து , கண்களை மெல்லியதாய்த் திறந்தாள் காவ்யா. வார்டு பாய் வந்து பாலும் ரொட்டியும் வைத்துவிட்டுச் சென்றான். மெல்ல கட்டிலில் இருந்து எழுந்து ,தாங்கித் தாங்கி நடந்து சென்று முகம் கழுவி மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தாள் . இரவு நன்றாக மழை பெய்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரியின் மெல்லிய திரைச்சீலைகள் விலகி, கொஞ்சம் குளிர்ந்த காற்றைத் தந்தது. சூடான பாலைக் குடித்தபடியே திரைச் சீலைகளை ஒதுக்கியபடி […]
மாற்றமே உலக நியதி
அதிகாலை மணி நான்கு. திடீரென்று யாரோ உசுப்பியது போல எழுந்தார் சதானந்தன். ஒரு விநாடியில் முழுவதுமாக விழித்தும் விட்டார். இனம் புரியாத ஒரு சங்கடம் அவர் மனதில் உருவானது. அது என்னவென்று புரியவில்லை. சிறிது நேரம் கண் மூடி உறக்கம் செய்ய முயற்சித்தார். பலன் இல்லை. அருகில் வித்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். சிறிது நேரம் அவளைப் பார்த்தபடி அமைதியாகப் படுத்திருந்தார். உடல், மனம் இரண்டும் உறங்க மறுத்தது. இன்று அவர் வாழ்வின் முக்கியமான நாள். அவரது […]
மஞ்சள் ஹாஃப் சாரி
சுவாரசியமாகக் கல்லூரி நண்பன் ஒருவன் வாட்ஸப்பில் அனுப்பியிருந்த வீடியோவை பாத்ரூமில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சேகர். ‘ஏங்க.. யாரோ தொத்தாவாம் .. இந்தியாலேருந்து கூப்பிடறாங்க’ கதவைத் தட்டினாள் மகா. ‘இந்தியாவிலிருந்தா? திரும்பக் கூப்பிடறேன்னு சொல்லி நம்பர் வாங்கி வெச்சுக்கோ’ கண்ணை செல் ஃபோனிலிருந்து எடுக்காமல் சொன்னான் சேகர். ‘சீக்கிரமா வாங்க.. உள்ளே போய் அரை மணி நேரமாவுது’ வீடியோ முடிந்த பாடில்லை .. பாவ்லாவுக்காக ஃப்ளஷ் பண்ணிவிட்டு வெளியே வந்தான் சேகர். மகா கொடுத்த நம்பரைப் பார்த்தால் […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7
முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. […]
பணயம்
பார்க்கிங்கிற்குள் நுழையும் போது ஏழு இருபத்தி நான்காகிவிட்டிருந்தது. போச்சு. இன்று சரியான நேரத்தில் ட்ரெயினைப் பிடிக்க முடியாதெனத் தோன்றியது சாரிக்கு. வழக்கமாக பிடிக்கும் ட்ரெயினைப் பிடித்தாலே நார்த் ஸ்பிரிங்கிலிருந்து ஏர்போர்ட் போய்ச் சேர ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். ஏழு இருபத்தியாறை விட்டால் அடுத்த வண்டி ஏழு முப்பத்தி எட்டுக்குத் தான். எல்லாம் அந்த வால்வோ சண்டாளனால் வந்தது. வீட்டை விட்டு சரியான நேரத்துக்குத் தான் கிளம்பினான் சாரி. இத்தனைக்கும் வைஷூ ஸ்கூல் பஸ்ஸுக்கு லேட்டாகி […]
பொங்கக் காசு
பொங்கலோ பொங்க… பொங்கலோ பொங்க… ஊரு செழிக்க, ஊத்த, மழை பெய்ய.. பொங்கலோ பொங்க… நாடு செழிக்க, நல்ல மழை பெய்ய.. பொங்கலோ பொங்க… தனது கர்ண கொடூரக் குரலுடன் சத்தமாய்ப் பாடிக் கொண்டே, கையிலிருந்த தட்டு ஒன்றில் சிறு குச்சியால் தட்டிக் கொண்டே வீட்டு முற்றத்தில் பொங்கி வழியும் பொங்கல் பானையைச் சுற்றிக் கொண்டு நடந்து சென்றார் ராமச்சந்திர அம்பலம். அவரைப் பின்பற்றி அவரின் மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் முதல் மருமகள், […]
மாற்றம் தேவை
“Sorry sir, I will make sure it won’t happen again!” என ப்ரித்வியின் அம்மா பள்ளி முதல்வரிடம் கேட்டுக்கொண்டாள். அவள் கண்களில் கோபம் தெரிந்தது. ப்ரித்வி மெளனமாக பக்கத்தில் அமர்ந்திருந்தான். பள்ளி முதல்வர் கடும் குரலில் “He need to learn to share with others. Otherwise he will get into fight again and again. Prithvi, let this be the last time we call on […]
முக்தி
கோவிந்த ராஜய்யரின் கவலையெல்லாம் ஒன்றே. சில நண்பர்களிடம் மட்டும் சொல்லி அங்கலாய்ப்பார். “பகவான் நல்ல வாழ்க்கையைக் கொடுத்துட்டான், ஒரு குறை இல்லாம குடும்ப ஷேமத்தைப் பாத்துண்டான்… இருந்தாலும் மனசைப் போட்டு வாட்டற ஒரே விஷயம் நேக்கு ஒரு புள்ளக் கொழந்த இல்லையேங்கறதுதான்.. நானும் லக்ஷ்மியும் என் பொண்ணு பிரபாவைப் புள்ள மாதிரிதான் வளத்தோம்.. ஆனாலும் கட்டையில போற காலத்துல அவளால எனக்குக் காரியம் செய்ய முடியாதே… புள்ள கையால காரியம் செஞ்சுக்காம பரலோகத்துல முக்தி கெடைக்கறது எப்டி?” […]
மனதில் உறுதி வேண்டும்
மணி என்ன தான் இருக்கும் என்று பக்கத்தில் இருக்கும் டீக் கடையின் சுவர்க் கடிகாரத்தில் பார்த்தாள் கனகா . 11.30 மணி ஆகியிருந்தது . கிட்டத் தட்ட 2 மணி நேரமாய் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து கால் கடுத்துப்போய் இருந்தது. டீக் கடையில் நல்ல கூட்டம். நிறைய ஆண்கள், அரட்டை அடித்த படியும், பேப்பர் படித்த படியும் நின்று இருந்தார்கள். சிகரெட் புகை வேறு மூச்சு முட்டுவதைப் போல இருந்தது. என்னடா , இதோ வரேன்னு போன […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6
முன்கதைச் சுருக்கம்: (பகுதி 5) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு […]