கதை
பதிவுகள்
வீட்டுக்குள் நுழையும் போதே ஒரே சத்தமாக இருந்தது. ஸ்பின் சைக்கிளில் வாஷிங் மெஷின் வீட்டையே லேசாகக் குலுக்கிக் கொண்டிருந்தது. சமையலறையில் இரண்டு நாட்களில் இட்டிலியாகப் போகும் மாவு அரைபட்டுக் கொண்டிருந்தது. டீ.வி யில், ‘அய்யய்யோ ஆனந்தமே’ என யானையுடன் ஹீரோ ஆடிக்கொண்டிருந்தார். பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த திவ்யா என்னைப் பார்த்ததும் கழுவிய டம்ளரை ‘நங்’கென்று சத்தம் வருமாறு ஸ்டாண்டில் வைத்தாள். ’காப்பி குடிக்கிறீங்களா?’ ’இல்லம்மா.. வேணாம்’. ’அதானே … இன்னைக்கு காப்பி தேவைப்படாதே உங்களுக்கு..’ கிராதகி எப்படித்தான் […]
மரியாதைச் செலவு
சனிக் கிழமை இரவு 9 மணி… பாரி முனையிலுள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம். தோளில் மாட்டிய ஒரு லெதர் பாக் நழுவி விழாமல் நொடிக்கு நூறு முறை சரி செய்து கொண்டு, இடது கையில் தட்டைப் பிடித்துக்கொண்டு இரண்டாவதாக ஆர்டர் செய்த முட்டைத் தோசையின் வருகைக்காக கையேந்தி பவனின் முன் நின்று கொண்டிருந்தான் நம் நாயகன் கணேஷ்… சொந்த ஊரில் அவன் பெயர் கணேசன்.….. முட்டைத் தோசைக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்….. கணேஷ் வீட்டில் படு ஸ்ட்ரிக்ட் […]