கதை
நூறுரூபாய் தாள்
“இன்னைக்கு சண்டே. இருந்த ஆயிரம் ரூபாயும் காலியாகிடுச்சு. கையில ஒரு பைசா கூட இல்லை. திடீர்ன்னு சொந்தக்காரனுங்க எவனாவது வந்துட்டாங்கன்னா, அவ்வளவு தான் என்னோட நிலைமை. உடனே என்னோட பொண்டாட்டி போய் கறி எடுத்துட்டு வாங்கன்னு சொல்லிப்புடுவா… காசு இல்லன்னு சொன்னேன்; என்னை தூக்கிப் போட்டு மிதிச்சுடுவா… அப்புறம் இந்த பொழப்பு பொழைக்கிறதுக்குச் சாகலாம் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவா. அடேய்… சொந்தக்காரனுங்களா… தயவு செய்து எவனும் வீட்டுப்பக்கம் வந்துறாதீங்கடா… யாரும் வரதுக்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன். […]
இதெல்லாம் சாதாரணமப்பா!
மகேஷ் தனது பல்சர் பைக்கை கல்யாண மண்டபத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அவன் ஒரு பைக் பைத்தியம். மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்னரே, கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்திற்கு முன்பதிவு செய்து, 9 விகித வட்டிக்கு வாங்கிய புதிய மாடல் பல்சர் பைக் அது. தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலைப் பார்க்கிறான். ““என்ன தம்பி, புது மாடல் போல! பல்சர் பைக் ஹெட் லைட்டே அழகுப்பா! கருப்பு கலர்ல ராஜா […]
கலைஞன்
“கண்களுக்குள் கசிகின்ற கண்ணீரை இமைகளுக்குள் வாழ்க்கையாக ஒளித்துக் கொண்ட இருக்கிறான் – கலைஞன்” “என் வயிற்றுக்குள் எலிக்குட்டி அளவான பயம் ஒன்று கத்திக் கொண்ட இருக்கிறது. இன்னும் இரு நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். நீ ஓடவில்லை என்றால், மூன்றாவது நிமிடத்தில் நான் பூனை ஒன்றை வளர்க்கப் போகிறேன்.” பல வருடங்களுக்கு முன் எனக்குள் நான் எழுதி ஒளித்த நகைச்சுவை ஒன்று இன்று ஞாபகம் வருகிறது. ஏனென்றால், நான் வாழ்க்கையில் முதற் தடவையாக பறக்கப் போகிறேன். அம்மா என்னை […]
பனி விழும் மலர்வனம்
வாரத்தில் 6 நாள் உழைத்து களைத்து சனிக்கிழமை முன்னிரவில் சனி நீராடும் நிகழ்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தேன் நான். சும்மா ரெண்டு பீர். அவ்வளவுதான். தனியே அறை எடுத்து தங்கியிருக்கும் எனக்கு இதுதான் வசதி. மற்றபடி நான் நல்ல பையன் தான்.நம்புங்கள். அழைப்பு மணி ஒலித்தது. சைடு டிஷ்ஷும், வறுத்த அரிசியும் அதான் ப்ரைடு ரைஸும் சொல்லியிருந்தேன் ஸோமோட்டோ-வில். அவனாகத்தான் இருக்கவேண்டும். கதவைத்திறந்தேன். சிலீர் என்று பனிப்புயல் என்னை தாக்கியது. அங்கே மெர்லின் நின்று கொண்டிருந்தாள். “இவள் ஏன் இங்கு […]
சவால்
“என்னது…? சைக்கிளோட்ட தெரியாதா?” தோழிகள் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் உள்ளுக்குள் சிதைந்து போனேன். நான்கு வீட்டுச் சாப்பாட்டையும் ரசித்து ருசித்துச் சாப்பிட்ட இனிய உணர்வு மனத்தைவிட்டு அகலுவதற்குள் ‘சைக்கிளோட்டலாமா?’ என்ற கேள்வியை எழுப்பியவளை மனத்துக்குள் திட்டித் தீர்த்தேன். உண்ட மயக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ளாதவளை நொந்துகொள்வதா அல்லது அவள் கேட்டவுடன் குதித்துக்கொண்டு கிளம்பியவர்களைக் குறை சொல்வதா என ஒன்றும் புரியவில்லை. பிள்ளைகள் அனைவரும் சாப்பிட்டவுடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தனர். அரட்டைக் கச்சேரியுடன் அமர்க்களப்பட்ட அந்த நாள் என்னளவில் […]
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 3
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2 குருசாமி, ராஜீவ் மற்றும் ராஜேந்திரன் போலீஸ் ஜீப்பில், சுந்தரின் பழைய அலுவலகத்தை நோக்கி பயணித்தனர். ராஜீவ் குருசாமியிடம் நடந்த விஷயங்கள் ஒன்று விடாமல் விவரித்தார். “சார், மாணிக்கம் நாம போற இடத்தைச் சொன்னவுடனே குஷியாகிட்டான் சார்!” என்று சற்று நக்கலாகச் சொன்னார் ராஜேந்திரன். “என்னையா, எப்பவும் வீட்டுக்கு போற நேரத்தில, வெளியே போக சொன்னா, சின்னப் பசங்க மாதிரி மூஞ்சிய தூக்கி வச்சுப்ப. என்ன […]
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 1 இரண்டு வாரங்கள் ஓடியது. ராஜீவ் மற்றுமொரு ஹை ஃப்ரொபைல் வழக்கைப் பார்த்து கொண்டிருந்தாலும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், சுந்தர் வழக்கில் தனது விசாரணையைத் தொடர்ந்தார். குருசாமி விசாரித்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். சுந்தரின் அலுவலகத்துக்குச் சென்று அவனது நண்பர்கள், அவனது மூத்த அதிகாரிகள் என்று ஒருவரைக் கூட விடாமல் விசாரித்தார். ராஜேந்திரன் அந்த ஏரியாவில் உள்ள ரவுடி, மற்றும் சில சந்தேகப் பேர்வழிகளிடமும் விசாரணை […]
கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை
‘கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை’, இது என்னப்பா பேர் புதுசா இருக்கேன்னு தோணுதுல்ல? எனக்கும் அந்த டவுட் வந்தது. தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நகரில் ஜவுளிக்கடைகளுக்குப் பஞ்சமே இல்லை. சிறிய கடைகள் முதல் பிரமாண்டமான பல அடுக்கு மாளிகைகளை உள்ளடக்கிய ஜவுளிக்கடைகள் இந்த நகரில் நிரம்பி வழியும். அதிலும் சென்னை தியாகராயநகரில் அமைந்திருக்கும் ரங்கநாதன் தெரு இதற்கு மிகப் பிரசித்தம். ரங்கநாதன் தெருவுக்குப் போட்டிப் போடுவது என்று சொன்னால் புரசைவாக்கம் தான். வேறு எங்கிலும் மக்கள் கூட்டத்தை […]
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 1
பின்னணி தகவல் : டி.எஸ்.பி ராஜீவ், அவரது சைடு கிக் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் டிரைவர் மாணிக்கம் சென்னை நகரத்தில் நடக்கும் குழப்பமான குற்ற வழக்குகளைத் தனது கூர்மையான துப்பறியும் திறன் மூலம் தீர்ப்பதில் வல்லவர்கள். அவர்களால் தீர்க்கப்பட்ட பிற குற்ற வழக்குகளை படிக்க இந்த பனிப்பூக்கள் இணைப்பைச் சொடுக்கவும். ***** திருவான்மியூரில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராஜீவின் குடியிருப்பில் டிரைவர் மாணிக்கம் போலீஸ் ஜீப்பை நிறுத்தினான். அந்தச் சத்தத்தைக் கேட்டு உள்ளிருந்து வெளியே […]
திருமதி. ‘ஆகாச’ வேணி
2021 சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை “ஒரே தலையிடியா இருக்கே, புரூ காபி குடிச்சா தான் ஆகும்” என்றபடி துயில் கலைந்து எழுந்தாள் வேணி சுற்றும் முற்றும் பார்த்து குழம்பியவள், “நா எங்கிருக்கேன்? இது எந்தூரு? எங்கிருக்கீங்க மாமா?” என பதறியபடி எழுந்தமர்ந்தாள் “பெண்ணே” என்றபடி ஒரு வெண்தாடி உருவம் அருகே வர .. “யாருங்க நீங்க? வள்ளுவர் தாத்தா மாதிரி இருக்கீங்க” “நான் வள்ளுவனல்ல பெண்ணே, வல்லவன்” “அது சிம்பு நடிச்ச படமாச்சே” “யாரவன் சிம்பு?” “டி.ஆர் புள்ள” “டி.ஆரா?” “என்னங் […]