கதை
‘அந்த’ வைரஸ்

காரில் ஏறி உட்கார்ந்ததும் எதோ ‘காக்பிட்டுக்குள்’ நுழைந்த மாதிரி இருந்தது ரகுவுக்கு. ஏழெட்டு மாதங்களாகிவிட்டது சொந்தக் காரில் உட்கார்ந்து. லிவிங் ரூம் விட்டால், ஆஃபிஸ் ரூம்; அரை மணிக்கொருமுறை பாத்ரூம்; அசந்த வேளையில் பெட்ரூம் என்று மாறிப் போயிருந்தது வாழ்க்கை. சில சமயங்களில்,’ஊபர் ஈட்ஸ்’ காரன் கொண்டு வந்து வைத்துவிட்டுச் செல்லும் உணவையும், சுலோவின் அமேசான் ஷாப்பிங் பெட்டிகளையும் அள்ளிக் கொண்டு வர ஒரு நாப்பது நாப்பத்தியைந்து நொடிகள் வாசல் ‘போர்ச்’க்குப் போவதுண்டு. அந்த நாப்பது நாப்பத்தியைந்து […]
இதயத்தில் முள் தோட்டம்

தென்னை மரங்களைத் தழுவியபடி கடலிலுருந்து சுகமான காற்று வீசியது. காலைப் பதினோரு மணி. இது அரையாண்டு பள்ளி விடுமுறை நேரம். முட்டுக்காடு ‘பேக்வாட்டர்ஸில்’ சுற்றுலாப் படகுகளுக்கு நடுவே கொஞ்சம் தண்ணீர் தெரிந்தது என்று கூடச் சொல்லலாம். குற்றப்பிரிவு சி.ஐ.டி. பிரிவைச் சேர்ந்த போலீஸ் ஜீப் சுழலும் விளக்குகளைப் போட்டபடி வேகமாக முட்டுக்காடு பாலத்தைத் தாண்டிச் சென்றது. மக்கள் அதை ஒரு பொருட்டாக மதித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் போலீஸ் ஜீப்பை விட வேகமாகப் பயணிக்கவே முயற்சித்தனர். துணை போலீஸ் […]
உடல் மாறிய உறவுகள்

நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வாசுகியை, ஒலிப் பெட்டியில் இருந்து வந்த பைலட்டின் குரல் தட்டியெழுப்பியது. இன்னும் ஒரு மணி நேரத்தில் சியாட்டில் டோகோமோ ஏர்போர்ட்டை அடையப் போவதாக அவர் அறிவித்தார். வாசுகி தன் பக்கத்தில் இருந்த கணவன் மனோகரைத் தட்டியெழுப்பி. “மாமா, இன்னும் ஒரு மணி நேரத்துல லேண்ட் ஆகும் போல இருக்கு. நீங்க டாய்லெட் போகணும்னா போயிட்டு வாங்க” “ஐ அம் ஃபைன், நீ போகணுமா?” “இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்” […]
சந்தித்த போராட்டம்

சூரியன் வழக்கம்போலத்தான் விடிந்தது, அவளை பொறுத்தவரை எல்லாமே வழக்கமாகத்தான் நடந்தது. காலையில் மகன் அருணுடன் சத்தமிட்டது, “பொறுப்பில்லாமல் தூங்கி கொண்டிருக்கிறான், கல்லூரியில் படிக்கும் இளைஞன் இப்படி எட்டு மணி வரைக்கும் தூங்கினால் எப்படி?” அவனைத் தட்டி எழுப்பியதற்குத் தான் அப்படி சண்டையிட்டான். “உனக்கு நேரமாச்சுன்னா கிளம்ப வேண்டியதுதானே, என்னை ஏன் எழுப்பி சிரமப்படுத்தறே?” எகிறினான். அவனுடன் கிளம்பும் அவசரத்தில் மல்லு கட்ட முடியவில்லை, மெல்ல பின் வாங்கினாள். “வேண்டாம், இவனோடு எதற்கு வம்பு” ஆனால் அவனோடு மட்டுமே […]
குழந்தை பெறாத தாய்

“ஏன்டீ…நாசமாப்போனவளே…இங்க என்னோட ரூம்ல தண்ணி வைக்க கூடாது…தண்ணி இல்லாம நான் சாவனும்….அதானே உன் நெனப்பு…சீக்கிரமா தண்ணி கொண்டா டீ” என்று கத்திக் கொண்டிருந்தாள்….ரேவதியின் மாமியார். ரேவதிக்கும்…ராகேஷ்க்கும் கல்யாணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. திருமணமான புதிதிலே…இப்படி எல்லாம் இல்லை…மாமனார் மாமியார் இருவரும் பாசமாகத் தான் இருந்தனர். ஆண்டுகள் உருண்டு ஓட…ரேவதிக்கு குழந்தைப் பேறு கிடைக்காமல்…தவித்துக் கொண்டிருக்கும் வேளையில்…மாமனாரின் இறப்பும்…மகனுக்கு குழந்தை இல்லாமல் போனதற்கு காரணம் இவள் தான் என்ற கோபமும்… சேர்ந்து கொண்டதால் ….தன் வெறுப்புகளையும்…வருத்தங்களையும்..ரேவதியின் […]
செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது

கடந்த சில நாட்களாகவே செல்லத்தாயிப் பள்ளிக்கு வரவில்லை என்பது ஒரு வாரம் கழித்து அவளுடைய கணக்கு டீச்சர் மரியபுஷ்பம் சொல்லித்தான் செல்வராணிக்கே தெரிந்தது. அவளுடன் படிக்கும் யாருக்கும் அவள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கான காரணம் தெரிந்திருக்க வில்லை. “ஒருவேளை வயசுக்கு வந்தாலும் வந்துருப்பா டீச்சர். அதான் அவங்க வீட்டுல பள்ளீயூடத்துக்குப் போக வேணாமின்னு நிறுத்தியிருப்பாங்க….” என்றாள் செல்லத்தாயினுடனேயே எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் மரிக்கொழுந்து இலேசான குறுநகையுடன். அவள் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம் என்று செல்வராணிக்கும் […]
அவலங்கள்

உள்ளேயிருந்து குழந்தை வீறிட்டழுவது, வெளியே ஒரு பாறையில் அமர்ந்திருந்த சின்னசாமிக்குக் கேட்டது. மகள் வள்ளிக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அவள் வேலைக்குப் போகத் தொடங்கவில்லை. பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு உடல் தெம்பாக சிறிது காலமெடுக்கும்தான். ஆனால் அவளும் கொழுந்து பறிக்கப் போனால்தான் அந்த வீட்டில் புகை போலப் படிந்திருக்கும் பட்டினி கொஞ்சம் விலகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மழைக்காலத்தில் ஒரு நாள் திடீரென அம் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, தட்டுத்தட்டான மண் போர்வைகளுக்குக் […]
தாதுண் பறவை

அச்செய்தி அவளது காதினில் விழுகையில், நெஞ்சுரைக்கூட்டுக்குள் இடி இறங்குவதைப் போலிருந்தது. அவள் ஓடிச்சென்று அவளது அப்பனை எழுப்பினாள். அவரோ நிறைமது மயக்கத்தில், எழுப்பியக் கையைத் தட்டிவிட்டபடி, போர்வையை இன்னும் தலை வரைக்குமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவராக இருந்தார். பூங்குழலிக்குத் தெருவை எழுப்புவதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை. நடுநிசி நேரம். மச்ச இருட்டு. கூகை, சாத்தான் சொல்லும் செய்திக்கு ‘இம்’ போடுவதைப் போல முணங்கிக்கொண்டிருந்தது. அதைக் கேட்கயில், நிணநீர் உறைவதைப் போலிருந்தது. இந்தக் கூகையைப் பிடித்து […]
துறவு

“என்ன டீச்சர், சாப்பாட்டுப்பைய மறந்துட்டுப் போறீங்க, வேணாமா?” நடத்துனர் பேருந்துக்குள்ளிருந்து நீட்டிய பையை வாங்கிக் கொண்ட தங்கம், அவனுக்கு நன்றி கூறுவது போலத் தலையசைக்க, பேருந்து நெடுஞ்சாலையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பஸ் சென்று வளைவில் திரும்பும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த தங்கம், வலது கையில் இருந்த டிஃபன் பாக்ஸ் பையைப் பார்த்துக் கொண்டாள், ‘இனி இது தேவையில்லைதான்.. இந்தப் பேருந்துக்கும் எனக்கும் இருந்த தினசரி தொடர்பு கூட இனி இருக்கப் போவதில்லை’ மனதுக்குள் ஏதோ பாரமாய் […]
பாலு ஒரு நிலா

“ஏன்னா…. என்ன பண்ணிண்ட்ருக்கேள்? டி.வி.மாட்டுக்கு ஓடிண்டு இருக்கு” புடவையின் முந்தானையால் நெற்றியில் மெலிதாய்த் தோன்றியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே, கணவனைக் கேட்டுக் கொண்டு, அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள் லக்ஷ்மி. “ஏண்டி… ஏன்… என்ன கேக்குற?“… ஒன்றும் புரியாதவனாய்த் தலையை உயர்த்தி, சற்றே சாய்த்து, ரீடிங்க் க்ளாஸ் மேல் கண்களை ஓட்டி, மனைவியைப் பார்த்தபடி கேட்டான் கணேஷ் ..டி.வி.யில் அன்றைய தினத் தலைப்புச் செய்திகள் ஓடிக்கொண்டிருக்க, அவனோ சோஃபாவில் அமர்ந்து லேப் டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தான். தலையை […]