கதை
போதை
போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்தப் பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான்இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு.அநியாயம் முத்திப் போச்சுன்னா அவதாரம் எடுப்பேன்னு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்தப் பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டுச் சிரிப்போடு செவி மடுத்துக் கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்தச் சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது. ‘ஏன் அப்படிச் சிரிக்ரீங்க??’ ‘ஒண்ணுமில்ல’ ‘சரி விடுங்க. இந்த40 வருஷமா உங்களோட குடித்தனம் […]
நாவிதம்
“ஏண்டி… அதான் லாக் டௌன் கொஞ்சம் கொஞ்சமா கொறய ஆரம்பிச்சு, ஒண்ணொண்ணா தொறக்க ஆரம்பிச்சுட்டாளே… போய்ட்டு வரேனேடி…. ” சொன்ன கணேஷை எரித்துவிடுவது போலப் பார்த்தாள் லக்ஷ்மி. “என்ன நெனச்சுண்டு இருக்கேள்? ஆத்துல பெரியவா கொழந்தேள் எல்லாம் இருக்கா… எங்கயாவது வெளில போய், எதையாவது ஆத்துக்குக் கொண்டு வந்தேள்னா?” என்றவளிடம்,”என்னடி, மத்தவாளுக்கு வந்துடுமோன்னுதான் பயமா? நேக்கு வந்தாப் பரவாயில்லயா?” என்றான். “என்ன,அசடாட்டமா பேத்திண்டு, யாருக்கும் வரப்படாதுதான்.. அதுக்குத்தான் எங்கயும் போக வேண்டாம்னு சொல்றது…” என்றாள். “சரிடி,ரெண்டு மாசத்துக்கு […]
இராசி பலன்
இராமுவுக்கு ஒரு பெருத்த சந்தேகம்… தனக்குள்ளேயே பேசிக்கிட்டான்… தினமும் காலங்காத்தால டிவியில வர்ற இராசிபலன்கள்ல அப்படி என்னதான் இருக்குமோ தெரியல… ஏன், அம்மா அத மட்டும் மறக்காம பாக்கணும்? நான் பொதுவா இந்த மாதிரி ராசி பலன்கள் பத்தி கவலைப்படறதில்ல… ஆனா என் ராசி வரும்போது மட்டும் கொஞ்சம் கவனமா கேக்க முயற்சி பண்ணுவேன்… ஆனா 12ராசிகளையும் விடாம பாக்கறாளே…எதுக்குன்னு பல தடவை யோசிப்பேன்…. அதேபோல கோவிலுக்குப் போனா அர்ச்சனைத் தட்டு வாங்கி கொறஞ்சது ஒரு 10 […]
தல வருஷப் பொறப்புங்கோ!
அது என்ன தல வருஷப் பொறப்புன்னு கேக்கறவங்களுக்கு – கல்யாணத்திற்கு அப்புறம் வரும் முதல் வருஷப் பிறப்பைத் தல வருஷப் பொறப்புன்னு சொல்றது நம்ம பக்கத்திலே வழக்கம், தலை தீபாவளி மாதிரி தல வருஷப் பிறப்பு. எங்க திருமணம் நவம்பரில் நடந்திருந்தாலும் எனக்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்து நாங்கள் சென்னையில குடித்தனம் வைக்க வந்தது கிட்டதட்ட ஃபிப்ரவரி போல் ஆகி விட்டது. (ஏனென்றால் என் காதல் கணவர் முதலிலேயே மாற்றல் வாங்கிண்டு சென்னை வந்துவிட்டார்ன்னு என் டைபிங்க் […]
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை…
வெள்ளைத் தொப்பியணிந்து வியர்வையால் ஆடையெல்லாம் நிறம்மாறி அதிகரித்த வெயிலில் துவிச்சக்கரவண்டியை தனது சக்திக்கும்மீறி செலுத்தினான் ராசன். ”என்ன இது சைக்கிள் இண்டைக்கு ஓடுதில்ல பதினொரு மணிக்குள்ள மில்வோட்டுக்குப் போகலெண்ணா பாலும் திரண்டுறும்” என நினைத்துக்கொண்டு சைக்கிளின் வேகத்தை அதிகரித்தான். ஒவ்வொரு நாளும் பத்து மணிக்கெல்லாம் பெருமாவெளிக்கு வந்து குமரகுருவின் தேநீர்க் கடையில் தேநீரும் வடையும் உண்ணுவது ராசனின் வழக்கமான செயலாகும். ஆனால் அன்றைய தினம் உடலின் களைப்பு உற்சாகத்தைக் குறைக்க நேரத்திற்கு அவ்விடம் செல்ல முடியவில்லை. பதினொரு […]
அடி முதல்
“என்னடா எல்லாத்தையும் வித்துட்டயா?” கேள்வி இவனிடம் கேட்கப்பட்டாலும் பார்வை அவன் மனைவி பார்வதி மேல்தான் இருந்தது. உங்களை மாதிரி ஆளுங்க இருந்தா எங்களை மாதிரி ஏழைகள் பிழைக்க முடியுமா? இதை மனதுக்குள் நினைத்தாலும், “இல்லைங்க ஏட்டய்யா?இன்னும் நிறைய மீந்து கிடக்குது.,” மெல்ல சொன்னான் பரமன். “மணி இப்பவே ஒன்பதாயிருக்குமேடா?” இப்பொழுதும் பார்வை பார்வதியை மேய்வதில்தான் இருந்தது ஏட்டையாவுக்கு. தூத்தேறி என்று வசவை விசிறிய பார்வதி சட்டென திரும்பி எச்சிலை துப்புவது போல திரும்பித் துப்பினாள். போலீஸ்காரன் சட்டென […]
முற்பகல் செய்யின்….
“நாராயண….. நாராயண….” சப்ளாக் கட்டையை இடது கையில் அசைத்துக் கொண்டு, இடது தோளிலிருந்து குறுக்குவாட்டாகத் தொங்கிக் கொண்டிருந்த தம்பூராவை வலது கையால் இசைத்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார் நாரதர். நாரதர் என்றவுடன் ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் வரும் சிவாஜி கணேசன் போலக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். வேதங்கள் நான்கினையும், உபநிஷத்துகள் நூற்றுப் பதினெட்டையும், வியாகரணங்கள் பலவற்றையும், புராணங்களையும், இதிகாசங்களையும், இன்னும் பல நீதி நூற்களையும் கற்றறிந்த தேஜஸ்வியான நாரதர், சிவாஜியின் தேஜஸுக்குச் சற்றும் ஈடு […]
கொரோனா… கொரோனா…
குறிப்பு: உலகம் முழுவதையும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இது குறித்துப் பலவிதமான புள்ளி விவரங்களும், பாதுகாப்புக் குறிப்புக்களும் வந்த வண்ணமுள்ளன. அவையனைத்தையும் படித்துப் பயன்பெறும் அதே வேளையில், இதனையே சற்று நகைச்சுவையாக அணுகலாம் என்ற எண்ணத்தில் விளைந்த கற்பனையே இது. “வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற நம்பிக்கையில் படிக்க வேண்டிய, சாதாரணப் பொழுது போக்கு மட்டுமே!. “ஏன்னா… இருபத்தியோரு நாள் ஆத்துக்குள்ளயே மொடங்கிண்டு இருக்கிறது எப்டி?” நீட்டி முழக்கிக் கேட்டுக் கொண்டே, […]
Kutty Story
‘வெல்கம் டு தி டுமீல் டாக்கீஸ் டாட் நெட். திரைவிமர்சனம் நிகழ்ச்சியில இன்னைக்கு நாம் பாக்க போற படம் டேஷ். டேஷ்னு’ சொன்ன உடனே எதோ கெட்ட வார்த்தைப் படம்னு நினைச்சிக்காதீங்க. ‘டேஷ்’ னா கோடிட்ட இடம். ஏன்னா, குவாண்டின் டாரண்டினோவே வந்து தமிழ்ப் படம் எடுத்தாலும், நான் இதையே தான் சொல்லப் போறேன். டெம்ப்ளட்ல டேஷ் போட்டு வச்சுக்கிட்டா படத்தோட பேர மட்டும் அதுல போட்டு புது வீடியோவ ரிலீஸ் பண்ணிடலாம். நீங்களும் வேற வேலை […]
உலகம் உன் பக்கம்
அடுத்த வகுப்புக்குக் கணக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்பதால், தனது சீட்டில் உட்கார்ந்து அன்று பாடம் எடுக்கப் போகும் கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிரேசன். அப்பொழுது உள்ளே வந்த தாளாளரின் அலுவலக உதிவியாள் தாளாளர் அவனை அழைப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். கதிரேசனுக்கு அப்படியே ஜில் என்று பயம் வந்து ஒட்டிக் கொண்டது. தாளாளர் எதற்குத் தன்னை வரச் சொல்லுகிறார்?. எப்பொழுதும் பிரின்ஸ்பால்தான் கூப்பிட்டுப் பேசுவார். இன்று அதிசயமாய் இவர் கூப்பிட்டிருக்கிறாரே, நினைக்கும்போதே பயம் வந்தது. என்ன […]