கதை
கடலலை
இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை, ”நேரமாகி விட்டது” என்று குழந்தைகளையும், தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள், வியப்பாய்ப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். ஒரு சிலர் பாவம் என்ற தோரணையில் கூடப் பார்த்துச் சென்றிருக்கலாம். மனிதக்கூட்டங்கள் தன்னை அதிசயமாய்ப் பார்த்துச் செல்வதையோ, இல்லை பாவமாய்ப் பார்த்துச் செல்வதையோ கண்டு கொள்ளும் மனோ நிலையில் பெரியவர் இல்லை. இப்பொழுது பெரியவர் இன்னும் வரக்காணோம் என்று பதட்டப்பட்டு தேடுவோர் யாருமில்லை. காணாமல் […]
சைக்கிள்
இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய்ப் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு, போக வர வழியில்லாமல்..மனைவியின் கத்தலால், பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான் என்னமோ ஏதோவென்று ஓடி வந்தேன். என்ன கமலா ஏன் இப்படிக் கத்தற? இப்ப சைக்கிள் என்ன பண்ணுச்சு? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆங்காரத்துடன் என்னைப் பார்த்தவள் இருக்கற இரண்டே முக்கால் செண்ட் வீட்டுல இதை வேற அலங்காரத்துக்கு வாசலில நிக்க வச்சுக்கறீங்க. போக வர வழிய அடைச்சுகிட்டு, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. […]
புதர்க் காடு
பரந்து விரிந்த இந்த இடத்தைக் காடு என்றும் சொல்லலாம், ஆனால் காடு என்று சொன்னாலும் பெரிய பெரிய மரங்கள் எதுவும் இல்லை. புதர்களும், புற்களுமே அதிகமாகக் காணப்பட்டன. புதர்க்காடு என்று சொல்லிக்கொள்ளலாம். புதர்கள் என்றால் அப்படி ஒரு இறுக்கமான காடுகள் கொண்டது. அடர்த்தியான புதர்கள், செடிகள் இணைந்து அதன் மேல் கொடிகள் படர்ந்து பொதுவாக உள்ளே நுழைவது என்பது சிரமப்படக்கூடிய விசயம்தான். காலை ஆறு மணி இருக்கலாம். அந்த இடத்தின் மண்மேட்டில் காணப்பட்ட பொந்து ஒன்றிலிருந்து மெல்ல […]
சாகித்ய அகாடமி
கண்ணபிரான் காலை பத்து மணிக்குள் ஐந்தாறு முறை வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்து விட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியைக் கேள்விப்பட்டு செல்ஃபோனில் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர் தபாலில் அதைப் பார்த்து உறுதி செய்த பின்தான் மேற்கொண்டு உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லி விட்டார். இருந்தாலும், மனதின் பரபரப்பை அவரால் கூட அடக்க முடியவில்லை. அங்கிருந்த நாற்காலி […]
வாடிக்கை மறந்ததும் ஏனோ…!
சட்டுச் சட்டென்று மின்னலாய்த் திரும்பி மறைந்து விடுகிறான் அவன். என்னவொரு சுறுசுறுப்பு. அவன் சைக்கிள் போகும் வேகத்திற்கு, பின்னால் பிளாஸ்டிக் டப்பாவில் அடுக்கியிருக்கும் பால் பாக்கெட்டுகள் துள்ளிக் கீழே விழுந்து விடக் கூடாதே என்றிருந்தது இவனுக்கு. அத்தனை குதியாட்டம் டப்பாவுக்குள். அவன் பரபரக்கும் அந்தப் பகுதித் தெருக்கள் அனைத்தும் மேடும் பள்ளங்களுமாகத்தான் இருக்கின்றன. அது ஒரு தனிக் காலனி. அதிலேயே இஷ்டத்திற்கு விட்டு அடித்துக்கொண்டு போகிறான் அவன். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்கிற […]
சர்ப்ரைஸ் கிஃட்
“ஏன்னா.. வேலண்டைன்ஸ் டே வர்ரதே, என்ன கிஃப்ட் தரப் போறேள்”, ஞாயிற்றுக் கிழமை மாலை வேறேதும் வேலையில்லையென ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி சேனலை மாற்றிக் கொண்டிருந்த கணேஷின் அருகில் வந்தமர்ந்து கேட்டாள் லக்ஷ்மி. நாற்பதுகளில் இருப்பினும், இளமையும் காதல் உணர்வும் சற்றும் குறையாத தம்பதி. “என்னடி பெரிய வேலண்டைன்ஸ் டே, அது கிதுன்னு…” அவள் அளவு அதிகமாக வெளிப்படுத்தாத அவனின் பதில். “நேக்குத் தெரியாதா, இப்படித்தான் சொல்வேள், ஆனா எதாவது சர்ப்ரைஸ் வெச்சிருப்பேளே” என்றவளை உடனடியாக நிறுத்தி, […]
மினியாபொலிஸில் ஒரு காதல் கதை
‘கூதலான மார்கழி.., நீளமான ராத்திரி..நீ வந்து ஆதரி.!!! இது மௌனமான நேரம், இள மனதில் என்ன பாரம்..’ என்ற ஜானகியின் கொஞ்சலை ரிமோட் கொண்டு நிறுத்திய பிரியா, படுக்கை அறைக்குள் நுழைந்துகொண்டே கேட்டாள். “கார்த்திக், ஹீட்டர்ல 72 வைக்கவா..? ரொம்பக் குளுருது டா.” “நோ .. 68 இருக்கட்டும். உன் குளிருக்கு நான் ஒரு வைத்தியம் சொல்றேன். இங்க வா”, என மெத்தையில் படுத்துக்கொண்டு அழைத்தான் கார்த்திக். “வேணாம்பா.. வேணாம்.. நான் போர்வையே போத்திக்குறேன்.” “ஹீட்டரையும், […]
வட்டிக்காரி
வட்டிக்கு பணம் கொடுக்கும் மாரியம்மாளிடம் குப்பக்கா சொன்ன செய்தி அவள் வயிற்றில் அக்னி ஜூவாலையை உருவாக்கியது. கோடி வீட்டு சுப்பத்தாள் நன்றாகத்தானே இருந்தாள். நேற்று மாலை மூன்று மணிக்கு வந்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பணம் பத்தாயிரம் வாங்கி சென்றாளே ! குப்பக்கா கதவை திறந்த உடன் இந்த செய்தியை சொல்லுகிறாளே, உண்மையாய் இருக்குமா? அப்படி பொசுக்கென்று போகிற உடம்பா அது ? ஆள் நல்ல திட்காத்திரமாகத்தானே இருந்தாள். பணம் வேறு பத்தாயிரம் வாங்கிட்டு […]
வென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 3
பகுதி 2 அத்துவானக் காட்டுக்கு மத்தியில், அழகாக அமைக்கப்பட்டிருந்த இரயில் நிலையம். சுற்றி கண்ணுக்கெட்டும் தொலைவு வரையில் கும்மிருட்டு. அந்த இரயில் நிலையத்திலும், அதன் உள்ளிருந்த ஒரு ரெஸ்ட்டாரண்டிலும் ஒளி மயமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அவைதவிர எந்தவித வெளிச்சமும் எங்கும் காணப்படவில்லை. ஆனால் இரவு நேரமதிகமாகிவிட்டதால், அந்த ரெஸ்டாரண்ட் மூடப்பட்டு, ஓரிரு விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன. இரயில் நின்று, கதவு திறந்தவுடன் கணேஷ் மெல்லமாகத் தலையை எட்டிப் பார்த்தான்; மனது முழுதும் யாரேனும் மனிதர்கள் […]
வென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2
பகுதி 1 அந்த கரிய நிற மெஷின் கன்னைப் பார்த்தவுடன் சர்வ நாடியும் ஒடுங்கியது கணேஷிற்கு. உடனடியாகத் திரும்பி, அந்த ஜெர்மன் டிரைவரைப் பார்க்க, அவருக்கும் குண்டலினி தொடங்கி துரியம் வரை குளிர் ஜுரம் பற்றிக் கொள்ள, இதுவரை வெறுத்த இந்த ப்ரௌன் ஸ்கின் இண்டியனை ஒரு ஆதரவுடன் பார்த்தார். “டிரைவ்…. டிரைவ்….. கோ … கோ.. கோ… டோண்ட் ஸ்டாப்….” என்று சைகையுடன் ஆங்கிலத்தில் இன்ஸ்ட்ரக்ஷனஸ் கொடுத்துக் கொண்டிருக்க, அவரும் திடீரென் வின்ஸ்டன் சர்ச்சிலாக மாறி, […]