சிறுவர்
மிஸிஸிப்பி நதி
அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய ஆறு மிஸிஸிப்பி நதி ஆகும். அதை ஆங்கிலத்தில் உச்சரிப்பதே சிறுவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி. MiS-SiS-Sip-Pi என்று பிரித்துக் கூறும்பொழுது சற்று வேடிக்கையாக இருக்கிறதல்லவா?. இவ்விடம் நாம் மணிக்கூட்டில் வினாடிகளைச் சரியாக எண்ணவும், கண்ணாமூச்சி விளையாடவும் One-Mississippi Two-Mississippi என்று உரத்துக் கூறி விளையாடுவதும் உண்டு. மிஸிஸிப்பி ஆறு ஆனது மினசோட்டாவில் வாழும் சிறுவர்கள் அறிந்த, பார்த்திருக்கும் பெரும் ஆறு ஆகும். இது மினசோட்டா மாநில ஐதாஸ்கா (Itasca) ஏரியில் ஆரம்பித்துப் பெரும் […]
சி்ப்பிக்குள் முத்து எப்படி வந்தது?
முத்துமாலை, தொங்கட்டான், சிமிக்கி எனப் பளபளக்கும் நகைகளை அம்மாக்கள், அக்காக்கள், பாட்டிமார் எனப் பலரும் பல சுப நேரங்களில் அணிந்திருப்பதைப் பார்த்திருப்போம். இந்த முத்துக்கள் ஒரு சிறு குறுமணி மணல் ஆனது சிப்பிக்குள் போய் உருவானது என்றால் நம்புவீர்களா? சிப்பியானது ஒரு கடலின் அடிப்புறத்தில் வாழும் உயிரினம். சி்ப்பியானது உலகளாவிய கடலின் பல இடங்களிலும் காணப்படும். ஆயினும் முத்துத்தரும் பெரும் சிப்பியானது உலகில் சில வெப்பமான கடல் மணற்தரைகளில் மட்டுமே காணப்படும். மிருதுவான உள்ளுடலையும் பலமான வெளிச்சுவரையும் […]
மொகஞ்சதாரோவின் மதுரா
ஒரு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காலை அழகிய அல்லிப்பூப் போல மலர்ந்தது. சேவல்கள் கூவின, பறவைகள் பாடின, பசுக்கள் கதறி கன்றுகளை அழைத்தன. ஆகா காலை நேரம் குழந்தைகளும், பெரியவர்களும் இலேசாகச் சோம்பல் முறிந்து எழுந்து கொண்டனர். குட்டி மதுரா தனது தாய் தந்தையினர் எழும்ப முதல் எழுந்துவிட்டாள். அவளும் செங்களுநீர் மொட்டுகள் போல அழகிய மழலை முகமுடையவள். காலையில் குயில் கூவலையும், கதிரவன் செங்கதிர்கள் வீட்டின் மரத்தூண்களினால் ஆன முகட்டுத் துவாரங்களினூடு தனது கட்டிலிற்கு […]
இனிய சந்திப்புக்கள்
முன்குறிப்பு – இந்தக்கதை 1600 களில் அமெரிக்க வடகிழக்குப்பாகத்தில் குடியேறிய ஐரோப்பிய மக்களுக்கும் ஆதிவாசிகளிற்கும் இடைப்பட்ட தொடர்புகளை விவரிக்கிறது. களைத்திருந்த புருவத்துடனான டார்சன் தனது கண்ணோட்டத்தை புல்மேட்டுக்கு அப்பால் மலைச்சாரலிடையே ஒடிவரும் ஆற்றை நோக்கிச் செலுத்தினார். ஆமாம் இன்றும் சரக்குப்பண்டங்களை ஏற்றிவரும் ஓடங்கள் வருவதாகத் தெரியவில்லை. மெதுவாக அடுப்பங்கரையில் எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குப் பக்கத்தில் உள்ள மேசை வாங்கில் குடும்பத்தினருடன் வந்து அமர்ந்தார். டார்சன் அவர் மனைவி, மகன் ஒலிவர், மகள் பெர்டசியுடன் புதிய இங்கிலாந்து என்று […]