சிறுவர்
தைப் பொங்கல்
தைப் பொங்கல் தைப் பொங்கல் தமிழரின் திருநாள். இது தமிழ் நன்றி நவிலல் நாள். அறுவடை தந்த சூரியனிற்காகப் பொங்கப்படும் தைப் பொங்கல் ஆனது தை மாதம் முதலாம் திகதியில் கொண்டாடப்படும். அக்கா முற்றத்தில் கோலம் போடுவார். அண்ணா தலை வாழையிலை விரிப்பார் அப்பா நிறைகுடம் வைப்பார். தேங்காய், மா இலைகள், பூக்கள் உடன் அமைந்த நிறைகுடம் கும்பம் எனப்படும் அம்மா குத்து விளக்கை ஏற்றுவார். அண்ணா தோரணம் கட்டுவார் அக்கா வெற்றிலை, பாக்கு, கரும்பு, பழங்களைப் […]
கிறீஸ்மஸ் மரம் காகித கைவேலை
வணக்கம் தம்பி, தங்கைகளே! இம்முறை எமது பனிகால விடுமுறைக்கு ஹானிபால் மாமா உங்களுக்கு எவ்வாறு கண்ணுக்குக் கவர்ச்சியான கிறிஸ்மஸ் மரம் செய்வது என்று கற்றுத்தரப் போகிறார். இதற்கு நீங்கள் டெடியா? சிறிய தம்பி, தங்கைகள் அம்மா, அப்பா, பெரியவர்கள் உதவியுடன் கத்திரிக்கோல் மூலம் காகிதம் வெட்டுதலைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளுகிறோம் இதைப் பிடித்திருந்தால் நீங்களாகவோ இல்லை பெரியவர் உதவியுடன், கீழே உங்களுக்கு இது பிடித்ததா, வேறு என்ன காகித உருவகம் எல்லாம் பிடிக்கும் என்றும் எமக்குக் கூறுங்கள். […]
பனிக் காலம்
பனி காலம் பற்றி ஆராய்வோம் வாருங்கள்! உடம்பு நடுங்குகிறது. வெளியில் குளிர், வெய்யிலின் வெளிச்சம் குறைந்தவாறே போகிறது, இருட்டு அதிகரித்தவாறே போகிறது. சூரியனைப் பார்த்தால் சுடுவதும் இல்லை. அதுவும் ஒளிமயமான பகலிலும் ஒப்புடைய வெப்பமும் கிடையாது. அது சரி பூக்கள், பூச்சிகள், புற்திடர்கள் எங்கே போயின? பொதுவாக வட அமெரிக்காவில் எமது மாநிலம் ஆகிய மினசோட்டாவிலும், எமது மாகாணம் ஆகிய ஒன்டாரியோவிலும் மற்றைய வடக்குப் பிரதேசங்களிலும் பனிமழை கொட்டோ கொட்டும். ஆனால் ஏன் எமக்குப் பனி வருகிறது? […]
அபூர்வமான தேங்காய்
உங்களுக்குத் தேங்காயானது எவ்வளவு மகிமை வாய்ந்தது என்று தெரியுமா? தமிழர் பாரம்பரியத்தில் தேங்காயானது பல்விதமாகப் பாவிக்கப்படும் பயனுள்ள ஒரு காய். தேங்காயானது வட அமெரிக்காவில் கடைகளில் சிறிய, உருண்டை மண்ணிறம், இளம் பழுப்பு மஞ்சள் போன்ற நிறங்களில் காணப்படும். மேலும் தின்பண்டங்காக, தேங்காய் பர்ஃபி, மக்கரூன் (macaroons), பிளாஸ்திக் பைகளில் உதிரித் தேங்காய்த் துருவல்கள் (shredded coconut), மற்றும் தேங்காய்ப் பால் தகர டப்பா, உலர்த்திய தேங்காய்ப் பால் மா போன்றவைகளாகவும் கடைகளில், சந்தைகளில் பெற்றுக் கொள்ளலாம். […]
பனித்துளிகளைக் கத்தரிப்போம்
பனித்துளிகளைக் கத்தரிப்போம் தம்பி, தங்கைகளா வாருங்கள், பனிக் காலத்தில் கத்தரிக்கோல் கலைகளைப் பழகுவோம். கீழே உள்ள வடிவங்களையும், பல் வேறு பனிமழைத் துளி உருவங்களையும் வெட்டியெடுத்து அலங்கரிப்போம். செய்முறை சதுரக் காகிதத்தை 6 முனைகளாக மடிக்கவும். முடித்த ஒரு கோணத்தில் கீழேயுள்ள பனித்துளி உருவங்களை வெட்டியெடுங்கள் மாலையாகக் கோர்த்தும், சோடனையாக யன்னல் கண்ணாடிகளில் ஒட்டி அலங்கரி்த்தும் அழகு பார்ப்போம்.