சிறுவர்
பேராசை கொண்ட போக்கிரி ரக்கூன்

சூப்பீரியர் காட்டில் ஒரு போக்கிரி ரக்கூனிற்கு நீண்ட நாட்களாக ஒரு பேராசையிருந்து. அது தான் எப்படியாவது ஒரு நாள் காட்டிற்கு தலைவனாக வேண்டும் என்று ஆசைப்பட்டது. இதற்காக எத்தனையோ திட்டங்களையெல்லாம் தீட்டியது. தனது போக்கிரித்தனத்தினால் பல குறுக்கு வழித்ததந்திரங்கள் எல்லாம் செய்தது. ஆனால் அவையொன்றுமே பயனளிக்கவில்லை. காரணம் காட்டின் சமூகத்தின் நலன்கருதி வாழும் ஓநாய் மூதாட்டியையே வனவிலங்குகள் தலைவியாகக் கருதின. எனவே காட்டு ஓநாய் மூதாட்டி உயிரோடு இருக்கும் வரை தனக்கு வழியேயில்லை என்று புரிந்து கொண்டது. […]