சிறுவர் உலகம்
அபூர்வமான தேங்காய்
உங்களுக்குத் தேங்காயானது எவ்வளவு மகிமை வாய்ந்தது என்று தெரியுமா? தமிழர் பாரம்பரியத்தில் தேங்காயானது பல்விதமாகப் பாவிக்கப்படும் பயனுள்ள ஒரு காய். தேங்காயானது வட அமெரிக்காவில் கடைகளில் சிறிய, உருண்டை மண்ணிறம், இளம் பழுப்பு மஞ்சள் போன்ற நிறங்களில் காணப்படும். மேலும் தின்பண்டங்காக, தேங்காய் பர்ஃபி, மக்கரூன் (macaroons), பிளாஸ்திக் பைகளில் உதிரித் தேங்காய்த் துருவல்கள் (shredded coconut), மற்றும் தேங்காய்ப் பால் தகர டப்பா, உலர்த்திய தேங்காய்ப் பால் மா போன்றவைகளாகவும் கடைகளில், சந்தைகளில் பெற்றுக் கொள்ளலாம். […]
பனித்துளிகளைக் கத்தரிப்போம்
பனித்துளிகளைக் கத்தரிப்போம் தம்பி, தங்கைகளா வாருங்கள், பனிக் காலத்தில் கத்தரிக்கோல் கலைகளைப் பழகுவோம். கீழே உள்ள வடிவங்களையும், பல் வேறு பனிமழைத் துளி உருவங்களையும் வெட்டியெடுத்து அலங்கரிப்போம். செய்முறை சதுரக் காகிதத்தை 6 முனைகளாக மடிக்கவும். முடித்த ஒரு கோணத்தில் கீழேயுள்ள பனித்துளி உருவங்களை வெட்டியெடுங்கள் மாலையாகக் கோர்த்தும், சோடனையாக யன்னல் கண்ணாடிகளில் ஒட்டி அலங்கரி்த்தும் அழகு பார்ப்போம்.
உருவகங்களின் தொடர்புகள் புதிர்
கீழே உள்ள ஒவ்வோரு நிரையிலும் (every row) உள்ள 5 பெட்டிகளில் 4 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருக்கும். வேற்று இருக்கும் பெட்டிகளை அடையாளம் காணவும்.