போட்டிகள்
எழுதுங்கள் வெல்லுங்கள் – கவிதைப் போட்டி முடிவுகள்
பல மாதங்களாக எங்களுக்கு வரும் பின்னூட்டங்களை ஆழ்ந்து படிக்கையில் ஒவ்வொரு வாசகருக்குள்ளும் புதுமையான கவித்திறன் ஒளிந்திருப்பதை உணர முடிந்தது. இவர்களின் திறமையை வெளிக்கொணரும் முயற்சியாக கவிதைப் போட்டி ஒன்றை நடத்த எண்ணினோம். இவர்களின் கற்பனைத் திறனுக்கு ஒரு தலைப்பைக் கொடுத்து எண்ணங்களைச் சிறைப்படுத்தாமல், அதே சமயம் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ, விஷயத்தையோ கருவாகக் கொண்டு எழுத வைத்து கவிதைகளைப் பெற எத்தனித்தோம். அதன்படி உருவானது தான் ‘எழுதுங்கள் வெல்லுங்கள்’ எனும் – படத்துக்குக் கவிதை எழுதும் […]
ஒடுங்கிப் போன நெஞ்சம்
வீதியின் ஓரத்தில் ….!
ஒதுங்கிப் போன சொந்தங்கள்;….!
உதறிப் போன பந்தங்கள் ….!
மூட்டை தூக்க முடியவில்லை
முடக்கி போட்டது முதுமை….!
தாத்தா – பெண்
இயற்கை அழகை எல்லாம்
அள்ளிப் பருகி – ஒளி இழந்து
இன்று அமைதியாய்
அடங்கிப் போனது விழிகள்!
சிறுமி – பெரியவர்
அண்ட ஒரு இடமில்லையோ?
அன்னமிடக் கையில்லையோ ?
ஆதரிக்க உறவில்லையோ?
ஆதரவே சிறு பலகை தானோ?
வறுமை வசந்தமாகிறது!
தொலைந்த நாட்களுக்குக் கிடைத்தபரிசுதான்
தொங்கிப் போன தாடியும்
சுருங்கிப் போன சட்டையும்
மனம் இருந்திருந்தால்
சுயமானத்தை இழந்திருக்க மாட்டேன்
இன்னும் என் கண்ணில் உள்ளது
ஒளி
நம்பிக்கை
உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
அமெரிக்கா
உனக்கும் எனக்கும் ஒரே மொழி
ஆங்கிலம்
உனக்கும் எனக்கும் ஒரே ஆடை
கந்தலாடை
முறிந்த மொட்டுக்கள்
தெருக் கோடியில் அட்டை பிடித்து நிற்கிறார் மூத்தவர்
நரைத் தாடியில் சட்டைக் கிழிந்து நிற்கிறார் மூத்தவர்
இளம் வயதில் படை வீரனாய் ஓட்டினார் கப்பலை
இன்று வீதியில் கடும் வெய்யிலில் நிற்கிறார் மூத்தவர்
ஒரு அபலையின் அழுகுரல்
உதைபட்ட பந்தாக உருண்டோட
உறவினரால் நிலைகுலைந்து போனேன்!
எதைச் சொல்லி நான் அழுவேன் இன்று
வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்
என்னை விட்டுச் சென்றவர் வருவார் என்று
வாடிய என் முகத்தில்
கண்ணீர் கூட இல்லை அழுதுவிட
பசி! வீடில்லேன்! (Hungry! Homeless!)
வறுமை எந்தப் பருவத்தும் வந்து சேரும்! – அந்த
வறுமை, ஆண் பெண்ணென்று பார்ப்ப தில்லை!
பெருமையெலாம் பிரிந்தேகும்! நாணம் போகும்! – பெற்ற
பெருங்கல்விப் பட்டமெலாம் பின்னுக்(கு) ஏகும்!.