கலாச்சாரம்
‘பண்ணு’ தமிழ் தவிர்ப்போம்

“இப்ப பாத்தீங்கன்னா பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு இஷ்யூ நடந்திட்டிருக்கு.. அதையொட்டி நேத்து அந்த பார்ட்டிலேர்ந்து ஒரு கண்டன கூட்டம் ஆர்கனைஸ் பண்ணியிருந்தாங்க.. அதுல பெர்பார்ம் பண்றதுக்காக சில ஆர்டிஸ்டையும் இன்வைட் பண்ணியிருக்காங்க.. அவங்களும் பல மணிநேரம் டிராவல் பண்ணி நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க.. கூட்டம் கொஞ்சம் டல் அடிக்கிறதைப் பாத்துட்டு அவங்க கேஷுவலா பேசலாம், மக்களை கவர் பண்ணி அட்ராக்ட் பண்ணலாம்னு நெனச்சு பேசத் தொடங்கனப்போ ஒரு வார்த்தையை விட்டிறாங்க.. அதைக் கேட்டதும் அங்கிருந்தவங்க ஷாக் ஆகி மைக்கை […]
கலிஃபோர்னியா பற்றி எரிகிறது

இயற்கை சொர்க்கத்தை எரிக்க விரும்பியது கலிஃபோர்னியா பற்றி எரிகிறது பல தசாப்தங்களாக நிலைத்து நின்ற வீடுகளையும் குடும்பக் கதைகளையும் நேசத்துக்குரிய நினைவுகளையும் பாதுகாத்த பொக்கிஷங்கள் ஒரு தீ மூச்சில் அழிக்கப்பட்டன இன்னும் தீ பரவுகிறது தென் கலிஃபோர்னியா ஒரு தீப்பொறியாக மாறிவிட்டது ஒரு கவிஞர் தனது உயிருக்காகத் தப்பி ஓட தனது காரை கைவிடுகிறார் தீக்காயம் பட்ட தனது குழந்தையை ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்ல பின்னே ஓடுகிறாள் ஒரு தாய் ஒரு சிற்பியின் கண்கள் கனவுகளின் […]
பரதநாட்டியத்தில் உலகச் சாதனை

பரதநாட்டியம் எனும் செவ்வியல் நடன வடிவம், இந்தியாவின் மிகத் தொன்மையான, பாரம்பரிய நடனமாகவும், பல இந்திய நடன வடிவங்களின் மூலமாகவும் கருதப்படுகிறது. ‘பரதம்’, ‘நாட்டியம்’ எனும் சொற்களின் கூட்டாக வழங்கப்பெறும் இக்கலையில், சமஸ்கிருத கூற்றுப்படி பரதம் என்ற சொல், ப – பாவம் (உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை), ர – ராகம் (இன்னிசை), த – தாளம் (ஒத்திசைவு) என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, பாரம்பரியமாக இந்த வார்த்தை பாவங்களை(உணர்வின் வெளிப்பாடு), ராகம்(இசை) மற்றும் […]
தமிழ்த் திருவிழா 2023

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி ஆண்டுதோறும் நடத்தும் ’தமிழ்த் திருவிழா’ கடந்த இரு வருடங்களாக நோய்தொற்றுக்காலத்தில் நடைபெறாமல் இருந்தது. இவ்வாண்டு, தமிழ்ப்பள்ளி நேரடி வகுப்புகளாக நடைபெற தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் திருவிழா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் தமிழர் உணவுகள், இடங்கள், விளையாட்டுகள், தொழில்கள், எழுத்தாளர்கள் என வெவ்வேறு தலைப்புகளில் கண்கவர் காட்சிப்பொருட்களைச் செய்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தனர். […]
அமெரிக்காவில் வளரும் சகிப்பின்மை

அமெரிக்காவில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் நன்கொடை திரட்டும் நிகழ்வுகளை நடத்துவதுண்டு. இதன் முதன்மை நோக்கம், கிறிஸ்துமஸ், ஹனுக்கா பண்டிகைகளை, பொருளாதாரக் குறைபாடுகளால் கொண்டாட முடியாத நிலையிலிருக்கும் குடும்பங்களுக்கு உணவு மற்றும் பரிசுப் பொருட்களை ஒழுங்கமைத்துக் கொடுப்பதாகும். ஆனால் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி, டெக்சாஸ் மாநிலம், ஃபிரிஸ்கோ நகரில் நடைபெற்ற நன்கொடை நிகழ்வின் செயல்நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நோக்கங்களில் ஒன்று – ‘திருப்பதியில் முறையான அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் தேவாலயங்களைத் தகர்ப்பது’. […]
அன்னையர்க்கு அர்ப்பணம்

கையினிலே கல்லொன்று கனத்திட்டால் களைந்திடுவோம் தோள்களிலே தொங்கியதை தேவையென்றால் தவிர்த்திடுவோம் முதுகில்சிறு மூட்டையென்றால் முழுவதுமாய் மறுத்திடுவோம் அவ்வளவேன், அரைக்கிலோ அரிசிதூக்க அழுதே அலறிடுவோம்!! மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள்!!! உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக உயிரும் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது!! சிசுவது சிரிப்பதற்கும் சிரந்தூக்கிச் […]
சொற்சதுக்கம் 9

கீழே கட்டத்துக்குள் இருக்கும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! தி வ த் ம த ர் ச ந் ம் ர ட ங் ட் சு ன க தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் இரு _____ _____ _____ கூப்பி வாக்கு சேகரிப்பார்கள் அரச குடும்பத்தினர் […]
சொற்சதுக்கம் 8

கீழே கட்டத்துக்குள் இருக்கும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! கழுத்தில் அணியும் அணிகலன் _____ _____ _____ அச்சம் என்பதற்கு இன்னொரு சொல் _____ _____ _____ கிரந்தமில்லாத காய்ச்சல் _____ _____ _____ தண்டவாளம் அல்லது பாதை என்று பொருள் கொள்ளலாம் _____ _____ _____ வீடுகளில் […]
துணுக்குத் தொகுப்பு

ஒரே சமயத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்யும் திறனை ஆங்கிலத்தில் ‘மல்டி டாஸ்கிங்’ (Multitasking) என்பர். இத்திறனுக்கான தமிழ்க் கலைச்சொல் ‘பல்பணியாக்கம்’. ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வதாக நாம் நினைத்தாலும், ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மிக வேகமாக முன்னும் பின்னும் தாவுகிறோம் என்பதே உண்மை. காரோட்டிக் கொண்டே, ஃபோனில் பேசுவது, டி.வி. பார்த்துக் கொண்டே சாப்பிடுவது போன்றவை நம்மில் பலர் அதிகபட்சமாகச் செய்யக் கூடிய ‘பல்பணியாக்கம்’. கூர்ந்து கவனித்தால் இவற்றில் ஒரு […]
நன்றி நவிலல் நாள் நற்கேள்விகள்

வட அமெரிக்காவில் பிரதானமாக நன்றி நவிலல் நாளில் உண்ணப் படுவது, பன்றி செம்மறி ஆடு வான் கோழி அரிசி உணவு கீழே தரப்பட்டவையில் வழக்கமாக உட்கொள்ளப்படாதது பூசணி மாக்கோது (Pumpkin pie) மசித்த உருளைக்கிழங்கு – (mashed potato) கிரான்பெரி பழவினி ரசம் வற்றாளங்கிழங்கு – (Sweet potato) மேலே கூறப்பட்ட அனைத்தும் நன்றி நவிலல் நாள் அன்று குடும்பத்தவரை விருநதோம்பும் வழக்கம் தொடங்கியது எப்போது? பதினெட்டாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு பதினேழாம் […]