அன்னையர் தினம்
அன்னையர்க்கு அர்ப்பணம்
கையினிலே கல்லொன்று கனத்திட்டால் களைந்திடுவோம் தோள்களிலே தொங்கியதை தேவையென்றால் தவிர்த்திடுவோம் முதுகில்சிறு மூட்டையென்றால் முழுவதுமாய் மறுத்திடுவோம் அவ்வளவேன், அரைக்கிலோ அரிசிதூக்க அழுதே அலறிடுவோம்!! மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள்!!! உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக உயிரும் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது!! சிசுவது சிரிப்பதற்கும் சிரந்தூக்கிச் […]
ஒரு நாள் போதுமா?
சேருங்காலச் சுகத்தில் உதித்த உயிரை ஒருமுழக் கொடி பிணைத்த உடம்பை பிரித்தெறிந்த நொடியில் அணைந்து போகாது வரிந்தெடுத்து நெஞ்சோடு அணைத்த வித்தகமே! அன்று தொடங்கி அந்தம் வரையில் என்றும் சேய்நலம் கருதும் தாய்மையே நின்றன் திருப்புகழை நினைந்து உருகிட இன்றொரு நாள் மட்டும் போதுமா? உந்தியெழும் சூரியன், அந்திசாயும் சந்திரன் சிந்திச்சிதறும் கார்காலம், நிந்தைதரு வேனிலென விந்தைமிகு இயற்கையது பிறழ்ந்து தவழ்ந்தாலும் சிந்தைமாறா சிரத்தையோடு மக்களை நேசிப்பாயே! துறவுபூண்ட ஞானிகளும் மறக்கவியலா உறவு வரவுஅளக்கும் வணிகரும் கணிக்கவியலா […]
அம்மா
தன்னகத்தே இன்னும் ஓருயிராய் தவப்புதல் கொண்டு பெண்ணகத்தே உண்டான பெருமிதம் கொண்டு கண்ணகத்தே காக்கின்ற இமைபோல என்னை உன்னகத்தே காத்தருளினாய்! கால்பதிவுகள் முதலில் உன் கருவறையில் தொடங்கி உன்னை உதைக்கும் போதிலும் கண்ணே! மணியே என்றென்னை தடவிக் கொடுத்து கதைகள் பேசி மொழி பயிற்றுவித்து விதையிட்ட நற்செயல் யாவும் உன் கருவறையிலேயே தொடங்கிவிட்டாய்! வலிமை சேர்த்து வலியைத் தாங்கி என் இதயத்தைத் தனியாய் இயங்க வைத்தாய்! நடைபயிலும் போதெல்லாம் நான் பிடிக்கும் உன் விரல்கள் பசியாறும் வேளையெனில் […]
அன்பின் அகிலம்
அன்றலர்ந்த தாமரையாய் அந்தமுகம் விலகவில்லை…..
அன்பிற்கு நிரூபணமாய் அன்னையன்றி வேறொன்றில்லை !!
அளவில்லாப் பெருவலியும் அவளுக்குப் பொருட்டில்லை
அவதிகளைத் தாங்கியன்றோ அருமையுடன் ஈன்றாள்பிள்ளை !!
அவள்பட்ட துயரமெல்லாம் அன்றோடு நிற்கவில்லை
அக்கறையாய் வளர்த்தெடுக்க அவள்துயர் எல்லையில்லை
அரும்பாகத் தானுதித்து அரசாளும் யோகமில்லை
அதனாலே கிள்ளையதை அவளென்றும் விலக்கவில்லை !
அமுதூட்டிய அம்மா
மூணு வயசுவர நீதந்த தாய்ப்பாலு
மூளையின் மடிப்பிலே மறைஞ்சே போச்சுதடி ,
முப்பது வருஷம் நீபோட்ட சோறு
மூச்சே நின்னாலும் நினைப்பவிட்டு நீங்காதடி .
அன்னையர் தினக் கவிதை
கற்பனையாய் நிலநிறை கடவுளர் பலரிருக்க
கனிந்துருகி நிதந்தோறும் கரங்கூப்பி நான்வணங்க
கண்விழித்து நான்கண்ட முதற் கடவுள்
கலையாமல் நிலைகொண்டாள் முழுதாய் என்னுள்!
நான் நாத்திகன்
“சொர்க்கத்திற்கு முகவரி என்ன?”… எனது ஏழு வயது மகள் தன் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்தட்டை மும்மரமாகத் தேடிக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று வெறுமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்குச் சட்டென மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. வாழ்த்தட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிப் பல ஆண்கள். குழந்தைகளுடன் வந்தவர்கள் – என்னைப் போல – மனைவிமார்களுக்குக் குழந்தைகள் சார்பாக ஒரு வாழ்த்தட்டை வாங்க வந்ததாக ஊகித்துக் கொண்டேன். தனியாக வந்திருக்கும் ஆண்களை அவரவர்களின் அன்னையருக்காக வந்திருப்பதாக […]
அன்புள்ள அம்மாவுக்கு
சிறையிலிருக்கும் என் அன்புள்ள அம்மாவுக்கு
பாசமுடன் உன் இளைய மகன்
நான் எழுதிக் கொள்வது
நலம், நலமறிய ஆவல்.
அம்மா நான் இப்போது
ஆசிரமத்தில் நன்றாகப் படிக்கிறேன்
ஆனாலும்…