மாதத்தின் மாமனிதர்
மாதத்தின் மாமனிதர் – மேதகு ஜவகர்லால் நேரு
மே மாதத்தின் மாமனிதராக யாரை நினைவு படுத்தலாம் என்று ஆராய்ந்த பொழுது தமிழினத்தையும் தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பாக எழுதி இருக்கும் அவரை நினைவு கூர்தல் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. இந்தியக் குடியரசின் முதல் பிரதம மந்திரி, அவர் சார்ந்த கட்சிக்கு கொள்கை இல்லை என்றாலும் நேர்மையான பொதுவுடைமைக் கொள்கையையும் நியாயமான கூட்டாட்சி கோட்பாட்டையும் முன்மொழிந்தார், பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அதைக் குழிதோண்டிப் புதைத்தது வேறு விடயம். 542 பிரதானச் சிற்றரசுகளையும் பகுதிகளையும் உள்ளடக்கி தங்களின் மொழி, […]
பாவேந்தர்
“பயிலுறும் அண்ணன் தம்பி – அக்கம்
பக்கத்துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை – என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில்போல் பேசிடும் மனையாள் – அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் – தமிழென்
அறிவினில் உறைதல் கண்டீர்!”
தமிழ்த்தாத்தா உ.வே.சா
வடமொழி (சமஸ்கிருதம்) மேற்கத்தியரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருந்த காலமது. தமிழில் பக்தி இலக்கியங்களும் வரலாற்றுக் காப்பியங்களும் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது என்று நம்பப் பட்டுக்கொண்டிருந்த காலத்தினூடே, தமிழின் மறக்கப்பட்ட தொன்மையை ஓலைச் சுவடிகளின்பால் ஓடி ஓடித் தேடி மிகத்தெளிவாய் உலகிற்குக் கொண்டு வந்தவர், தமிழ்த்தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் மகாமகோபாத்யாய தக்ஷிணாத்ய கலாநிதி உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதய்யர் அவர்கள். அன்றும், இன்றும் தமிழ் மொழி கோடிக் கணக்கானவர்களைச் சிறப்புற வாழ வைத்துள்ளது. ஆனால் தமிழ் என்ற மொழியை, […]
வீரமாமுனிவர்
தை/மாசி (பிப்ரவரி) மாதத்தில் நினைவு கூற வேண்டிய மற்றுமொரு மாமனிதர் “வீரமாமுனிவர்”. ”தமிழ் உரைநடையின் தந்தை” என்று போற்றப்படுபவர், இத்தாலி நாட்டில் பிறந்த இவரின் தமிழ்ப்பற்று அளப்பரியது. பெசுகி (Beschi)என்ற தம் பெயரை ‘தைரியநாதர்’ என்று மாற்றி கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே ‘வீர மாமுனிவர்’ எனப் பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத்தொடங்கினார். 1680 ஆம் ஆண்டில் இத்தாலியில் பிறந்த இவரின் முழு இயற்பெயர் […]