மொழியியல்
‘பண்ணு’ தமிழ் தவிர்ப்போம்
“இப்ப பாத்தீங்கன்னா பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு இஷ்யூ நடந்திட்டிருக்கு.. அதையொட்டி நேத்து அந்த பார்ட்டிலேர்ந்து ஒரு கண்டன கூட்டம் ஆர்கனைஸ் பண்ணியிருந்தாங்க.. அதுல பெர்பார்ம் பண்றதுக்காக சில ஆர்டிஸ்டையும் இன்வைட் பண்ணியிருக்காங்க.. அவங்களும் பல மணிநேரம் டிராவல் பண்ணி நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க.. கூட்டம் கொஞ்சம் டல் அடிக்கிறதைப் பாத்துட்டு அவங்க கேஷுவலா பேசலாம், மக்களை கவர் பண்ணி அட்ராக்ட் பண்ணலாம்னு நெனச்சு பேசத் தொடங்கனப்போ ஒரு வார்த்தையை விட்டிறாங்க.. அதைக் கேட்டதும் அங்கிருந்தவங்க ஷாக் ஆகி மைக்கை […]
தமிழ்த் திருவிழா 2023
உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி ஆண்டுதோறும் நடத்தும் ’தமிழ்த் திருவிழா’ கடந்த இரு வருடங்களாக நோய்தொற்றுக்காலத்தில் நடைபெறாமல் இருந்தது. இவ்வாண்டு, தமிழ்ப்பள்ளி நேரடி வகுப்புகளாக நடைபெற தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் திருவிழா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் தமிழர் உணவுகள், இடங்கள், விளையாட்டுகள், தொழில்கள், எழுத்தாளர்கள் என வெவ்வேறு தலைப்புகளில் கண்கவர் காட்சிப்பொருட்களைச் செய்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தனர். […]
சொற்சதுக்கம் 9
கீழே கட்டத்துக்குள் இருக்கும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! தி வ த் ம த ர் ச ந் ம் ர ட ங் ட் சு ன க தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் இரு _____ _____ _____ கூப்பி வாக்கு சேகரிப்பார்கள் அரச குடும்பத்தினர் […]
சொற்சதுக்கம் 8
கீழே கட்டத்துக்குள் இருக்கும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! கழுத்தில் அணியும் அணிகலன் _____ _____ _____ அச்சம் என்பதற்கு இன்னொரு சொல் _____ _____ _____ கிரந்தமில்லாத காய்ச்சல் _____ _____ _____ தண்டவாளம் அல்லது பாதை என்று பொருள் கொள்ளலாம் _____ _____ _____ வீடுகளில் […]
துணுக்குத் தொகுப்பு
ஒரே சமயத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்யும் திறனை ஆங்கிலத்தில் ‘மல்டி டாஸ்கிங்’ (Multitasking) என்பர். இத்திறனுக்கான தமிழ்க் கலைச்சொல் ‘பல்பணியாக்கம்’. ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வதாக நாம் நினைத்தாலும், ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மிக வேகமாக முன்னும் பின்னும் தாவுகிறோம் என்பதே உண்மை. காரோட்டிக் கொண்டே, ஃபோனில் பேசுவது, டி.வி. பார்த்துக் கொண்டே சாப்பிடுவது போன்றவை நம்மில் பலர் அதிகபட்சமாகச் செய்யக் கூடிய ‘பல்பணியாக்கம்’. கூர்ந்து கவனித்தால் இவற்றில் ஒரு […]
சொற்சதுக்கம் 7
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். விடைகள்
சொற்புதிர் – காய்கறிகளைக் கண்டுபிடியுங்கள் – குறிப்பு
ஜூன் மாதம் தேசியப் பழங்கள் மற்றும் காய்கறிகள் மாதமாகக் கொண்டாடப்பட்டது. பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காய்கறிகளும் பழங்களும் கடைகளில் நிரம்பி வழியும். இக்காலங்களில் புத்தம் புதிய பழங்களும், காய்கறிகளும் தோட்டத்திலிருந்து நேரடியாக உழவர் சந்தைகளில் கிடைக்கும். பல சமயங்களில் நாம் காய்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை அப்படியே குறிப்பிடுவதுண்டு. அவசரத்தில், அதற்கான தமிழ்ப் பெயர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இங்கே பட்டியலிலுள்ள காய்கறிகளின் தமிழ்ப் பெயர்கள் அருகிலுள்ள கட்டத்தில் மறைந்துள்ளன. அதனைக் கண்டுபிடிப்போமா? BROCOLLI DRUMSTICK GOOSEBERRY […]
மினசோட்டா மாநிலம் பற்றிய குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம் மினசோட்டா மாநிலத்தின் அடையாள விளையாட்டு (Official game of Minnesota) (5) கடந்த வருடம் இறந்த மினசோட்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் ( 4) மினசோட்டாவின் மிகப் பழமையான முதல் நகரம். (3) மினசோட்டா மாநிலத்தின் செல்லப் பெயர்களில் இதுவும் ஒன்று. இப்பெயரில் மினசோட்டா பல்கலையின் ஃபுட்பால் குழு பன்மையில் உள்ளது (3) மினசோட்டா மாநிலத்துக்குக் கிழக்கே அமைந்துள்ள இம்மாநிலத்தை சுப்பீரியர் ஏரி பிரிக்கிறது. (4) மினசோட்டா மாநிலத்தின் பெரிய […]
ஜெயலலிதா ஒரு புதிர்
இடமிருந்து வலம் ஜெயலலிதா பிறந்த சிற்றூர் (5) ஜெயலலிதா தாயாரின் இயற்பெயர் (5) முதன் முதலில் ஜெயலலிதா போட்டியிட்ட சின்னம் (3) எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அவர் நடித்த முதல் படம். (10) ‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’ என்ற பாடல் இடம் பெற்ற, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த படம். (4) சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டுத் தோற்ற ஒரு தொகுதி. (4) ஜெயலலிதாவால், கல்கியில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நாவலாக வெளிவந்த நூல். (8) வலமிருந்து இடம் […]